https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 458 * பதில்களும் , புரிதல்களும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 458

பதிவு : 458 / 639 / தேதி 30 ஆகஸ்ட் 2019

பதில்களும் , புரிதல்களும்  * 


எழுச்சியின் விலை ” - 59
முரண்களின் தொகை -03 .






சிறு வயதில் புத்தக வாசிப்பு என்பது ஒரு வெறி போல இருந்து கொண்டிருந்தது . உணவு உண்ணும் போதுகூட  நிச்சயம் ஒரு புது புத்தகம் வேண்டும் .வாசிப்பில் அதீத ஈடுபாடு உள்ள எனது தந்தையும் , நான் சாப்பிடும் போது புத்தகம் வாசிப்பதைகண்டித்தார் .அதனாலேயே அவருடன் அமர்ந்து உணவு எடுத்துக் கொள்வதில்லை .ஒரு சில வருடங்களுக்கு முன்பாக இனி உணவுவின் போது படிப்பதில்லை என விட்டு விட்டேன்.

அதுவெல்லாம் இலக்கிய வாசிப்பில் சேராது .பல முறை அப்பாவின் சேகரிப்பிலிருந்து சில புத்தகங்களை எடுத்து வாசிக்க முயன்றதுண்டு தகழியின் கயிறு” போல . அவைகளை வாசிக்க இயலாமல் கைவிட்டேன் .ரஷிய இலக்கிய நூல்களில் இருந்து அப்பாவின் வாசிப்பு விஸிஷ்டாத்வைதம்” போன்ற தத்துவ  வகை நூலுக்கு புலம் பெயர்ந்ததும் நான் அவரது சேகரிப்பின் பக்கம் செல்வது நின்று போனது .

ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் தீவிர அரசியல் ஈடுபாடும் வாசிப்பை முடக்கியது .பின்னர் இனி வாசிக்கவே இயலாது என்கிற எண்ணம் உறுதியானதுபின்னர் செய்தி துணுக்குகளும் துக்ளக் மற்றும் தமிழ் இந்தியா டுடே மட்டுமே எனக்கு வாசிக்க உகந்ததாய் இருந்தது .இந்தியா டுடே நின்று போனபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.அதன் தீவிர வாசகனாக இருந்ததாலேயோ என்னவோ நின்று போகும் முன்பாக அது எனக்கு  ஜெயமோகன் பற்றிய சிறு குறிப்பை விட்டுச் சென்றது .ஜெயமோகன் பற்றியும் அவரது வெண்முரசு குறித்தும் சிறு துணுக்குச் செய்தியை அங்குதான் அறிந்து கொண்டேன்  .

2012 எனது ஆச்சாரியன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதிதாக உருவாகிய இயக்கம் ,ஶ்ரீராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி அதில் பொதுச் செயளாலர் என பதவிக்கு வந்திருந்தேன் . பல ஆண்டுகளாக ஆழ்மனதில் தேடலாக , விழைவாக இருந்த சிலவற்றை நோக்கி நகர்ந்தேன் . அது என்னை ஜெயமோகன் தளத்திற்கு கொண்டு விட்டது .அவரது எழுத்து விசித்திரமான ஈர்பபை உருவாக்கி இருந்தது . இந்து ஞான மரபின் ஆழ் வேர்களை எனக்கு அறிமுகம் செய்ய துவங்கி இருந்தது.

எனது தேடல் முதலில் பௌரானிகர்களை நோக்கிதான் இருந்தது. அவர்களே எனது கேள்விகளுக்கும் அறிதலுக்கும் விடையாக இருப்பார்கள் என நினைத்தேன் .ஆனால் அங்கிருந்து நான் பெறுவதற்கு ஒன்றில்லை என்கிற உண்மை புரிந்த போது அது வேறொரு பாதைக்கு என்னை திருப்பிவிட்டது.   வெண்முரசை நோக்கி அப்படித்தான் வந்தேன் .மஹாபராரதம் எனக்கு மிக அனுக்கமாக உணரப்பட்ட ஒன்று .அது இன்றைய வாழ்வியலின்  போக்கை அன்றே துவங்கி வைத்ததுவிட்டது என புரிந்திருந்தேன் அறம்  பற்றிய அதன் நெறிகளை இன்றைய  நவீன மனம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறது அதன்  அறம்  எனப்படுவதின் இன்றைய வடிவம் என்னவாக இருக்கக்கூடும் . எக்காலத்திற்கும் ஏற்புடையவைகள் என்பது எழுத்தில் எப்படி சொல்லப்படுகிறது என்பதை பற்றியும் , அதன் இடைவெளிகள் எப்படி புரிந்துகொள்ளத் தக்கவைகள் என்கிற சிந்தனைக்கு வெண்முரசு தீனியிடுதை உணர்ந்தேன் .

வெண்முரசு . நாவல் வடிவில் மீள எழுதப்படும் வியாசபாரதம். அது நாவல் என்கிற வகைமைக்குள் வந்து விடுவதால் ஆசியருக்கு அது அளப்பறிய சுதந்திரத்தை வழங்குகிறது . அது சொல்லிச் செல்கிற விஷங்களை குறித்து மரபை பேணுபவர்களாக தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் .அதை வாசிப்பதன் வழியாக மரபான விஷயங்களை நவீன மனம் எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதை எனது ஆழ்மனம் அனுமானிக்க முயல்கிறது  .

எனது தேடல்  ஆயிரமாவது கமிட்டியின் செயளாலராக  துவங்கியதால் , அது எனக்கு மரபை பேணும் அமைப்புகளை நெருங்கி அனுமானிக்க உதவியது .ஆனால் அந்த அமைப்புகள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்பதையும். பொது சமூகத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் , புறவயமாக மட்டுமின்றி அகவயமாகவும் அது இறுகிக் கிடக்கிறது என உணர இயன்றது .அங்கிருந்து உருவாகி வருவதற்கு ஒன்றுமில்லை என்கிற உண்மையால் தாக்கப்பட்ட போது , அறிஞர்களை நோக்கி திரும்பினேன்.

கல்லூரி பேராசியர்கள் தமிழ் மொழியலில் நெடுங்காலம் கால் பதித்தவர்கள் என பொது சமூகத்துடன் நெருங்கிய உறவை வைத்திருந்தவர்களை அனுகியபோது துரதிஷ்ட வசமாக அவர்கள்  எனக்கு அளித்ததும் ஏமாற்றமே. முற்போக்கு என்பது ஒரு அலங்காரம் மட்டுமே . அது அவர்களுக்கோ ,அல்லது அவர்களோ இந்த சமூகத்திற்கு அழைக்க கூடிய கொடை  என ஏதுமில்லை என்பதை விட , சற்று அயர்ந்தால் காழ்ப்பு , சகிப்பின்மை போன்ற நோய்களை தக்கூடியவர்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது . புதிய சிந்தனை என ஏதும் இன்றி , மரபு , நவீனம் என்கிற புரிதலை  பற்றி ஒன்றும் அறியாதவர்களாக பார்க்க நேர்ந்தது எனது ஊழ் என நினைக்கிறேன் .

வெண்முரசை நோக்கி அடி எடுத்து வைத்த போது  அவர் மரபான சிந்தனைகளை உடைத்து வீசுபவராக அறியப்படுபவர் . அதன் வழியாகக் வாசிப்பவர்களையும்  வாசிக்காதவர்களையும் ! பதற வைப்பவர் . அதனால் அவரை வாசிக்காதே விலகியவர்கள் பலர் . சிலர் திரும்ப வந்து அவற்றை வாசிக்கும் மனபலமுள்ளவர்களாக மாறுவதை  பார்த்திருக்கிறேன் . நானுமே கூட அப்படித்தான் . ஆனால் எனக்கு மீண்டு வருவதற்கு சில நாட்களே போதுமானதாக இருந்தது .முதலில் என்னை மொத்தமாக திரட்டிக் கொள்ள .அது எனக்கு விடுக்கும் சவாலை ஏற்கும் மனதை அடைந்த பிறகே நான் மீண்டும் அவரை வாசிக்க துவங்கினேன்.

விஷ்ணுபுர நாவலில் வரும் ஆழ்வார் காதாபாத்திரத்தை அவர் கையாண்ட முறை எனக்கு அவர் மீதான கசப்பை பெருக வைத்ததும் வாசிப்பை நிறுத்தி விட்டேன் . ஆனால் அவரின் பிற தத்துவ தருக்க கருத்துகள் எனக்குள் நீண்ட நெடுங்காலமாக ஒலித்தபடி இருந்தவைகளுடன்  ஒத்திருந்தது. கண்ணாடி சீசாவிற்குள் ஆடும் பொருள் கைக்கு வராததைப் போல , அவை சொற்காளாக திரளாததால் , அடர்ந்து பரவி இருக்கத்தை தருவதாக மாறிப்போனது . ஒரு கட்டத்தில்  அவைகளை சொற்களால் வடித்தெடுக்க இயலாமையால் தொகுத்து ஒரு கருத்துக்கு வர இயலாமலானது  .அவற்றில் இருந்து அவரது எழுத்துக்கள் என்னை விடுவிக்கும் என்கிற நம்பிக்கை எங்கோ உருவாகி வந்தது .ஆனால் அவரது எழுத்துடனான ஒரு சமாதனத்திற்கு வராமல் என்னால் அவரது எழுத்துக்களை வாசிக்க இயலாது என்றான போது , நான் என்னை தொகுத்துக் கொள்ளும் வழமையூடாக சில எளிய கோட்பாடுகளை வகுத்துக் கொண்ட பின் அவரை வாசிக்க துவங்கினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...