https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 463 * புராண நவம் *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 463

பதிவு : 463 / 645 / தேதி 22 செப்டம்பர் 2019

* புராண நவம் * 


எழுச்சியின் விலை ” - 65
முரண்களின் தொகை -03 .


வியாச பாரதம் சொல்லும்  பண்டைய நம்பிக்கையின் மிச்சத்தை எடுத்துக் கொண்டு வெண்முரசு போன்ற நாவல்கள் வழியாக இன்றைய வாழ்கையை நோக்கி வருவது என்றால் , அங்கிருந்து வரும் கூறுகள் இன்று எதனுள் சென்று அமைகின்றன, மேலும் அவை  என்னவாக பொருள் கொள்ளக் கூடும் . “தெய்வ உருவங்கள் பயன்பாட்டுக்கு என வடிவமைக்கப்படும் கருவிகள் அல்ல அவை. மாறாக கண் போல கை போல பரிணாமத்தில் படிப்படியாக உருவாகி வருபவை. ஒன்றிலிருந்து பிறிதொன்று முளைப்பதாக. ஒன்றை உண்டு பிறிதொன்று எழுவதாக. முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாக. ஆகவே மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டவை. மிக நுட்பமான பல்லாயிரம் காரணிகள் கொண்டவை. எந்த தெய்வ உருவகத்துக்கும் இது பொருந்தும், கிருஷ்ணனுக்கும்என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் தனது கேள்வி பதில் பதிவில் .

முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாகஇந்த வரியை கடக்க எனக்கு மூன்று நாட்கள் பிடித்தது . கடந்தேனா ? எனத் தெரியவில்லை . “காமுகன் கண்ணனை வணங்கலாமா”? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதிலிலிருந்து இந்த ஒரு வரிக்காக அவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறேன் . அந்த பதில் எனக்கு கொடுத்த அளப்பறிய புரிதலுக்கு தனியாக ஒரு பதிவை கொடுக்க நினைக்கிறேன்

எழுத்தாளர் ஜெயமோகனை இத்தனை காலம் தொடர்ந்து வாசித்து வந்தது இது போன்ற ஒன்றை எதிர்பார்த்துத்தான். அது வெண்முரசு முடிவுறும் முன்னதாக எனக்கு கிடைக்கும் என்பது எனது அசாத்திய நம்பிக்கை .  என்னால் அது ஏன் என்று சொல்ல இயலவில்லை என்றாலும்  என் ஆழ்மனம் அதை வலியுறுத்தியது . இதுவரை நான் எனது ஆழ்மனம்  சொன்னபடியே எனது வாழ்கை முறையை அமைத்துக்கொண்டேன். அதற்கான விலை மிகப் பெரியது . அதை கொடுத்தே இங்கு வந்து அமைந்துள்ளேன் என்பதால் இதை சொல்லும் வாய்ப்பு எனக்கானதுதான்.

முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாக”  என்கிற அந்த சொல்லாட்சி என்னை திகைக்கச் செய்கிறது  . எந்த முந்தைய ஒன்றையும் நவீனமானதாக அப்படியே எடுத்தாள முடியாது . “புதிய ஒன்றான பழையதுஎன்பது புதிதான மற்றும் புதிரான ஒரு கணம் ,அது  எனக்குபுராண புருஷன் நவ நவமாகஎன்கிற பாகவத சொல்லாட்சியை இங்கு நினைவுகூறாமல் இருக்க இயலவில்லை . “பழையது புதுதிது புதிதாகதோன்ற வைக்கும்  இம்மரபை எண்ணி வியாக்காமல் இதை கடக்க இயலவில்லை . இதை சொன்னஜெயமோகனுக்கு ஒரு சபாஷ்” . மரபான பௌரானிகர்கள் சொல்ல மறந்தது  அல்லது இயலாதது இது என நினைக்கிறேன் .புராணம் நல்ல தமிழால் சொல்லப்பட வேண்டும் என்கிற என் நினைவிற்கு தீனி இது என நினைக்கிறேன் .

கோவில்களில் உள்ள அர்ச்சா விக்ரஹகங்கள் குறித்த கருத்தியலை இதில் கொண்டு இணைத்தால் , இந்தக் கூற்று இன்னும் வியப்பிற்குறியது . காலம் தன்னை புதிப்பித்துக் கொள்ள மனிதர்களை தேர்ந்தெடுக்கிறது . அவருள் இது இப்படி வந்து விழுந்ததே அதற்கு சான்றுறைப்பது  . சில தேர்ந்தெடுத்த மனிதர்கள் வழியாக காலம் தன்னை மீள மீள வடித்துக் கொள்கிறது . அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை கடுமையானது என்றாலும் ஜெயமோகன் அப்படி இயற்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்றே நினைக்கிறேன் . இதுவுமே கூடகம்பனில் நிகழாத களம்என அவர் சொன்னதே . அங்கிருந்தே இவற்றை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன். “வயதான ஒரு இளைஞர்என்பது எவ்வளவு முரணோ அவ்வளவு முரண் இந்த சொல்லாட்சி . இந்திய வேதாந்தத்தை அன்றி இதை புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன் .

அது எனக்கு என்னவாக இருந்தது என நான் அதை என்னில் இருந்து துவங்க நினைக்கிறேன் . வெண்முரசின் உளவியல் கூறுகள் எனக்கு எப்பொதும் மிக அனுக்கமாக இருப்பது அதன் நிதர்சணம் என்னை மிரளச் செய்வது . அரசியலில் நல்ல முன்னெடுப்பின் போது  கைவிடப்படுகிற  சூழலில் எழும் இயல்பான கோபமும் , கசப்பும் இன்றி அதிலிருந்து வெளியேறிய பிறகு , நான் அவ்விதம் வெளியேறியதையே குற்றமாக தூற்றிக் கொண்டிருந்ததை அப்போது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை . இப்போது அதற்கு வேறொரு பரிமாணம் கிடைக்கிறது .

பதிலில்லாத கேள்விகள் மனத்தை நிறைக்கும் போது அதில் இருந்து கொண்டு  எதிர்வினையாற்றுவதை விட்டு விலகி வெகுதூரம் சென்று விடுவது எனது இயல்பாக இருந்தது . அப்போது பல்வேறு நியாயங்களை முன்னிறுத்தி அதனிலிருந்து வெளியேறுவேன். அவை சமான்ய நியாயங்களாகவே எப்போதும் இருந்திருக்கின்றன . என் ஆழுள்ளத்தில் திரளும் கருத்தில் ஒரு சிறு துளியாக அவை இருந்திருக்க வேண்டும் . திரண்ட கருத்திற்காக காத்திருப்பது ஒன்றே என்னால் இயன்றதாக அப்போது இருந்ததிருப்பதை இன்று நினைவுறுகிறேன் .”ஆகவே மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டவை. மிக நுட்பமான பல்லாயிரம் காரணிகள் கொண்டவைஎன அவர் சொல்ல வருவது இதுவாகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக