https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 26 செப்டம்பர், 2019

புதுவை வெண்முரசு 30 வது கூடுகை நிகழ்வு

ஶ்ரீ:




பதிவு :  648 / தேதி 26 செப்டம்பர் 2019

புதுவை வெண்முரசு 30 வது கூடுகை நிகழ்வு 




அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , 


நண்பர் மணிமாறனின் பெண் குழந்தை நிலாஞ்சலியின் முதல் பிறந்தநாள் நிறைவு விழாவில் கலந்து கொண்டோம்.கூடுகை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மீண்டு ,கூடுகை சற்று தாமதமாக துவங்கியது 

புதுவை வெண்முரசு கூடுகை தனது 30 வது நிகழ்வு வண்ணக்கடலின் இறுதி பகுதியான மண்நகர் மற்றும் நிறைப்பொலியுடன் முழுமை செய்தது .நண்பர் முத்துக்குமரன் உறையடினார் . அவருடையது மிக யதார்த்த பாணி உரை . தடை பெறாத சொற்களால் சொல்ல  விழைந்ததை மிக இயல்பாக முன்வைத்தார் .புதுவை கூடுகைக்கு தவறாமல் கலந்து கொள்பவராக அவர் எப்போதும் இருந்தவர் . சில முறை அவருக்கான வாய்ப்பு  வந்த போதெல்லாம் , மென்மையாக மறுதளித்தவர் , இம்முறை மிக சிறிய பகுதி முயற்சிக்கவும் என்றவுடன் ஏற்றார் . நடைமுறை உளவியலுடன் வெண்முரசு உளவியல் கூறுகளை இணைத்து தொடர்ந்து முன்வைத்து பேசி தனக்கான வாய்ப்பை சிறப்புற செய்தார் . கூடுகை சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள்.

சில நண்பர்கள் முன்வைத்த திட்டப்படி , மாதத்தின் மூன்றாவது  வியாழக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமையில் நேரம் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை கூடுகையை நிகழ்த்துவது என்கிற சிறிய மாற்றம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது .

புதிதாக வந்திணைந்த நண்பர்களின் வரவு அவை நிறைந்து உற்சாகமளிப்பதாக இருந்தது . செய்யவிருக்கும் நிகழ்வு மாற்றம் மேலும் புதிய நண்பர்களை உருவாக்கித்தரும் என நம்புகிறோம் .

புதுவை கூடுகையைப் பற்றி ஜெ தளத்தில் தொடர்ந்து வெளியிடப்படுவதால் சில புதிய நண்பர்கள் வந்தமைகிறார்கள் அந்த உதவிக்கு கூடுகையின் சார்பாக ஜெ அவர்களுக்கும் திருமதி சுதா ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.

வெண்முரசு நூல் வரிசை 4 நீலம் புதுவருடத்தில் துவங்க முடிவு செய்யப்பட்டது , எனவே அடுத்த கூடுகை இதுவரை கடந்து வந்த வெண்முரசு நூல் வரிசைகளை தனித்தனியாக முன்னெடுத்து மீளவும் உரையாடுவதனூடாக அவற்றை முற்றாக திரட்டிக் கொள்ளும் முகமாக மாதம் ஒரு நூல் என முடிவு செய்யப்பட்டது .அடுத்தமாதம் 19.10.2019 சனிக்கிழமை மாலை நிகழ்வாக “ மழைபாடல் நூல்” பேசு பொருளாக ஏற்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 



முதுபெரும் எழுத்தாளர் திரு. கி.ரா அவர்களின் வாழ்கை துணைவியார் திருமதி கணவதி அம்மாள் மறைவிற்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூடுகை நிறைவடைந்தது . 



நன்றி
ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்