https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 5 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 460 * ,மரபில் நம்பிக்கை *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 460

பதிவு : 460 / 641 / தேதி 05 செப்டம்பர் 2019

* ,மரபில் நம்பிக்கை 


எழுச்சியின் விலை ” - 60
முரண்களின் தொகை -03 .




நெடுங்காலமாக இருந்த வந்த வேத , உபநிஷத்துகளின் திரண்ட பொருளாக ஆன்மீக தரிசனங்கள் புரிதலில்கள் , முரணியக்கத்தின் வழியாக உருவாகி வந்த வழிபாட்டு முறையை சங்கரரும் , ராமாநுஜர் போன்றவர்கள் தொகுத்து உருவாக்கி கொடுத்தனர் .அதை விரிவாக்கியவர்கள் சைதன்ய மஹாப்பிரபு போன்றவர்கள் , அதை நவீனப்படுத்தி உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்றவர் பிரபுபாதா . அவர் கண்ட இஸ்கான் இயக்கம் .அதுவரை இருந்து வந்த வழிபாட்டு முறையை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது .கடந்த நூற்றாண்டுகளில்  மேற்கத்திய நாட்டிலிருந்து புதிய பார்வையுடன் கீதை திரும்பி வந்ததுபோல , ஒருநாள் இதுவும் அங்கிருந்து திரும்பி வரக் கூடும் என்றால் அது மற்றொரு எல்லை .அப்படி திரும்புமானால், இந்தியவில் எதிர்கால ஆன்மீகம் இதன் இரண்டின் மத்தியில் உருவாகி வரலாம்  .

மரபான மத இயக்கங்கள் தங்களை பொது சமூகத்தில் முன் வைப்பதில் தோற்ற இடத்தில் இஸ்கான் வென்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மரபு மற்றும் சம்பிரதாயமான அனுகுமுறை , அதிலிருந்து உருவாகி வரும் குரு சிஷ்ய மரபு இந்த காலத்தில் எடுபடாது என சொல்லி வந்த காலகட்டத்தில்தான் , இது  நிகழ்ந்து கொண்டிருக்கிறது . இஸ்கானின் பன்னிரண்டு வகுப்பில் முழுமையாக கலந்து கொள்பவர்கள் , பயிற்சியின் இறுதியில் சந்நியாசத்திற்கு இணையான ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறார்கள் .இது மரபான இயக்கங்களால் உருவாக்க முடியாதது .வழமைபோல இஸ்கான் குறித்து விமர்சனங்கள் பலமான எழுந்த காலத்தில் அது அனைத்தையும் கடந்து சென்று கொண்டே இருக்கிறது .


உலக நாடுகளில் இஸ்கானுக்கு கிடைக்கும் இடம் வியப்பிற்குறியது. இந்தியப் பகுதிகளில் மிக சொற்ப அளவில் மக்கள் சென்று அதில் இணைகிறார்கள் .மற்ற  பிறருக்கு அது வெகு தூரத்தில் இருப்பது .அவர்களுக்கு அதன் செயல்பாட்டில் உள்ள எள்ளல் , அந்த இடைவெளிக்கு பிரதானமான காரணம் என நினைக்கிறேன். இஸ்கான் போன்ற இயக்கங்கள் இந்து ஞானமரபை குறித்து அறியாத வெளிநாட்டினருக்கானது , மேலும் அவர்களுக்கு அழுத்தமான மத கோட்பாடுகளோ , பிண்ணனியோ  இல்லை அதனால்  அவர்களை இஸ்கான் கவர்கிறது என்பது நம்வருக்கு ஒரு அசட்டு பெருமையும்  கூட . ஆனால் உலக பண்டைய நாகரீகங்கள் முதிர்ந்து அடைந்துள்ள இடமும் . மதத்துடன் இயந்த நடைமுறை வாழ்கையை அவர்கள் கடந்து வந்தது போல நாம் நமக்கு நிகழவில்லை என்றே நினைக்கிறேன்

இஸ்கான் போன்ற இயக்கம் தங்களுக்கானதில்லை என்கிற தங்களைப்  பற்றிய மிகை மதிப்பு கொண்டிருக்கிறார்கள் . இதில் வேடிக்கை அவர்களுக்கு இந்து ஞான மரபு பற்றி அடிப்படை அவர்களுக்கு சொல்லுவாரில்லை என்பதே யதார்த்தம். சில காலம் கடந்து இந்தியர்களுக்கான மாற்றங்களுடன் அந்த இயக்கம் இந்தியவில் பிரதான மத அமைப்பாக மாறும் வாய்பிருப்பதை மறுக்க இயலாது என நினைக்கிறேன். இன்றுள்ள தொடர்புறுத்தும் நிலையில் உள்ள ஒரே இயக்கம் அது மட்டுமே . ஜக்கி வாசுதேவ் போன்றவரகள் பிற்காலத்தில் உரத்து எழுந்து இதை முன்னெடுத்துச் செல்லும் புதிய வழிகளுக்கான பாதைகளை உருவாகிவிட்டுச் செல்லலாம் .அந்த மரபுகளில் வருபவர்கள் புதிய கோட்பாடுகளை வகுக்கலாம் .

இன்றைய சூழலில் அது போன்று நிகழ வாய்ப்புள்ள நிலையில் இந்து ஞான மரபின் தொகுப்பை எப்படி அடையாளப் படுத்த படும் என்கிற கேள்வி எழுகிறது .கடந்த காலத்தில் இந்து ஞானமரபின் உட்பிரிவுகளுக்குள்  ஓயாத முரண்கள் எழுந்தபடி இருந்தாலும் அவை அதனுள் உறையும் பல்லாயிர அலகுகளுடன் முயங்கியே இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது .இந்து ஞான மரபும் , அன்றைய அரசாங்கத்திற்கும் நெருங்கிய உறவிருந்ததை அறிய முடிகிறது .இது ஏறக்குறைய ரோமானிய , எகிப்தில் நிகழ்ந்ததற்கு  இணையானது என்றே நினைக்கிறேன்.

மதமும் அரசும் பிறிக்க இயலாத  ஒன்று என்பதை இன்று மிக தீர்க்கமாக உணர்கிறேன்  .ராமாயண , மஹாபாரத இதிகாசம் இதுபற்றி மித் விரிவாகப் பேசுகிறது .ராமாயணத்தை விட மஹாபாரதம் இன்றுவரை நிலவும் போக்கை தொட்டு நிர்ணயிக்கிறது . இங்குதான் வெண்முரசு ஒரு தவிர்க்க இயலாத இடத்தை பெறுகிறது என நினைக்கிறேன்.   அதற்கான காலம் வெகு தூரத்தில் இருக்கிறது என கணிக்க இயலுகிறது .பல ஆண்டுகள் கடந்து தமிழகத்தில் புதிய மதப்போக்கை வெண்முரசு தீர்மானித்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்