https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அடையாளமாதல் - 462 *முற்போக்கு கருத்தியல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 462

பதிவு : 462 / 643 / தேதி 15 செப்டம்பர் 2019

*முற்போக்கு கருத்தியல் 


எழுச்சியின் விலை ” - 63
முரண்களின் தொகை -03 .




வழிபாட்டு தளத்தின் மரபான நெறிமுறைகள் நீதி மன்ற தீர்ப்பிற்கு கொண்டு விடப்பட்ட சூழல் இன்றைய யதார்த்தம் .மரபின் மீது நம்பிக்கையுள்ளவர்களை இது பதறச்செய்கிறது . அனைத்தின் மீதான தாக்குதலாக அவர்கள் நினைப்பதிற்கு நான் முரணுறுகிறேன் . மதம் சார்ந்து  உருவாகி வரும் நவீன போக்கு இது என்றே நினைக்கிறேன் . அனைத்தையும் இவை தலைக்கீழென மாற்றிவிட இயலாது . அவை இன்று யாருக்கும் புரியாத ஒன்றை இவை துவக்கி வைக்கின்றன . இதன் பரிணாமத்தை இனி எதிர்காலத்தில் உள்ளவர்கள் தொகுத்துக் கொடுக்கலாம் . நான் நினைக்கும் ஒன்றின் துவக்கமாக கூட இது இருக்கலாம் என நினைக்கிறேன்.

முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைத்திலும் புகுந்து புறப்படுகிறார்கள் . அவர்களை பொறுத்தவரை பழமையை புறந்தள்ளி புதுமையை நிலைநிறுத்தும் ஒரு போக்கு அவர்களை சமூகத்தில் அடையாளப்படுத்துகிறது . நேர்மறையை  விட எதிர்மறை கருத்துக்கள் அவர்களை சமூகத்தில் ஆழ நடுகிறது  . இன்று  அவர்களுக்கு இருக்கும் அமைப்புகள் போல பொது சமூகத்திற்கு இல்லை என்பதும், அது கருத்தொற்றுமை இன்றி சிதறி கிடக்கிறது . இன்றைய மதவாத அமைப்புகள் அதை வெறுப்பினூடாக ஒருங்கிணைக்க முயல்கிறது . வலதுசாரி அமைப்பு இன்று ஆட்சிக்கு வந்திருக்கும் சூழலும் மதசார்பற்ற அமைப்புகள் வலுவிழந்த நிலையில் இனி நடக்க கூடியது என்னவாக இருக்கும் என்கிற கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது 

காலம் நமக்கு விட்டுச் சென்றவைகளில் நம்மை ஆற்றுப்படுத்துவது இதிகாச புராணங்கள் மட்டுமே . அவையும் கூட இன்றைய நவீன உலகத்திற்கு சொல்லவருவதை அடைப்பு குறிக்குள் சொல்வாரில்லை.வெறும் நம்பிக்கையை சார்ந்து இருக்க சொல்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டால் அதற்கு நல்ல சமாதனத்தை அளிக்க வல்லதாக வெண்முரசு ஒரு தூரத்து வெளிச்சமாக உருவாகி வருவது மறுப்பதற்கில்லை .

இன்று உலகமே சிறு கிரமமாக சிறுத்து போன நிலையில் , வாழ்வியலை வகுக்கும் மதம் எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்கிற கேள்வியே எனது தொடக்கப்புள்ளியாக இருந்து வந்தது .எந்தமதம் உலகை உய்விக்க வந்தது என்கிற கேள்வி காலாவதியாகி நிற்கின்றது . அனைத்து ஆறு கடலை நோக்கியே பயணிக்கிறது என்பது போல இன்று உலகெங்கிலும் பொது போக்கை அனுமானிக்க இயல்கிறது.இந்தியவில் மெய்மையை தேடி இன்றும் அலைபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அவர்களே மதத்தை அகவயமாக தொகுக்க கூடியவர்கள் .

மரபான விஷயங்காளாக எனக்கு சொல்பட்டவை , அவைகளுக்கு புதிய கோணமாக வெண்முரசு போன்ற நாவல் என்னை சுற்றி எழுந்து என்னை துணிக்குறச் செய்வதிலிருந்து ஆரம்பத்தில்  என்னை வெகு தூரம் தள்ளிவைத்துக் கொண்டேன் . எரிக்வான் டானிக்கனின் சேரியட் ஆப் காட்ஸ் எனது இளமை காலத்தில் அப்படிப்பட்ட முடிவைத்தான் எடுக்க வைத்தது .சிலவற்றை சில காலம் தள்ளிவைப்பது .அவற்றை நவீன மனம் எப்படி உள்வாங்கிறது என்கிற புரிதலை அடையும் முயறச்சிகளின் வழியாக அவற்றை உணர முயன்ற படி இருப்பது . ஏற்புடையவைகளாக இருக்கக் கூடியவற்றை  உள்வாங்கிக்கொண்டு , அவை எனக்குள் நிகழ்த்துவதை கூர்ந்து கவனிப்பது .பிறவற்றை காலத்தின் புரிதலை நோக்கி விட்டுவடுவது என்பது எனக்கு சௌகர்யமான விஷமானதுஅதுமாதிரியான    ஒரு மனநிலையில் வெண்முரசையும் அவரின் பிற எழுத்துக்களையும் வாசிக்க துவங்கினேன் 

எனக்கு நம்மாழ்வார் எல்லாமுமாக இருப்பவர். வாழ்வின் அர்த்தமின்மை என்னுள் ஓங்கி எழுந்து நின்று விரக்தியையும் கசப்பையும் கொடுக்கும் போது அவற்றிலிருந்து நான் மீண்டு எழ உறுதுணைப்பது நம்மாழ்வாரின் பாசுரங்களும் அவை தரும் நம்பிக்கையும்  .விஷ்ணுபுர நாவலில் அவரை எள்ளல் செய்த எழுத்துக்கள் மீது எனக்கு முதலில் தோன்றியது வெறுப்பும் ஒவ்வாமையும். ஆனால் வெகு சில நாட்களில் அதிலிருந்து மீண்டு அவ்வகை எழுத்தை ஒரு சவாலைப் போல ஏற்று மறுபடியும் திரும்ப வந்து அனைத்தையும் ஓரே மூச்சில் படித்து முடித்து அவரை சந்திக்க கோயம்புத்தூர் கிளம்பிச் சென்றேன் .இன்றும் வெண்முரசின் இருட்கனி , தீயின் எடை போன்றவற்றின் பல பகுதிகளில் அதே ஒவ்வாமையை அடைகிறேன்வழி முழுவதும் திரும்பி சென்றுவிட மனதிற்குள் ஒன்று ஓயாது நச்சரித்திக் கொண்டே இருந்தது . அது சொல்லிக் கொண்டே இருக்க  நான் கோயம்புத்தூரில் அவரை சந்தித்தேன் .
அவரின் சிந்தனை வழியாக அவருள் நிகழ்வதின் வழியாக அவற்றை பார்க்க முயல்கிறேன் .முற்போக்கு எழுத்து என்கிற பாசாங்கு அதில் இல்லாததால் மரபான விஷயங்களை பொறுப்புடன் அனுகுவதாக படுகிறது . அதே சமயம் இது புராண மறுஆக்கம் அல்ல. நாவல். என்கிறார் ஜெயமோகன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...