https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 18 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 475 * மரபாலரின் பாராமுகம் *


 ஶ்ரீ:


அடையாளமாதல் - 475

பதிவு : 475 / 661 / தேதி 18 அக்டோபர் 2019

 மரபின்  பாராமுகம் 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-10







எனது தந்தையின் பக்தி குறித்த உளவிலக்கம் அவருக்கு ஏதேனும்  ஏற்க அல்லது நம்ப இயலாத பழைமை முறைமைகளை பற்றி உருவாகி வந்ததாக இருக்கலாம். அவரை முற்றான நாத்திகர் என்கிற வட்டத்தில் பொருத்திவிட முடியாது என்றே நினைக்கிறேன் . பக்தி போல பழங்கால வழிமுறைகள்  வழக்கொழிந்தவை . பக்தி தனது தந்தையைப் போல மத சின்னங்களை அனிந்து கொண்டு நடைமுறை உலகிலிருந்து விலகிய பழைமை வாதிகளுக்கானது . உலகியல் மாற்றங்களின் நடைமுறை சென்று சேராத உள்ளம் ஒருவகையான மடமை கொண்டதுதொழிலும் அறிவியலும் உலகை வென்று உச்சத்தில் அமர்ந்துள்ள காலத்தை சேர்ந்தவராக தன்னை புரிந்திருந்தார் . தன்மனம் மிக நவீனமானதாக அவரது ஆழ்மனம் அவருக்கு உணர்த்தியிருக்கலாம்.அல்லது பக்தி நவீன மனம் கொண்டவர்களுக்கு எப்படி பொருள் கொள்கிறது என்கிற அவதானிப்பில் இருந்திருக்கலாம் . இல்லையெனில் ஒரு கட்டத்தில் சட்டென அவர் அதில் நுழையும் புரிதலை அடைந்திருக்க வாய்ப்பில்லை .

அவரை பெரும் ரசிகராக அறிந்திருக்கிறேன் . பிறரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டிய மிக நுண்ணிய கூறு அது . அதனாலேயே அவர்  உலகம் அவரது இறுதிக் காலம் வரையில் உயிர்ப்புடன் இருந்தது .கசப்போ , வெறுமையோ அடைந்த மனிதராக அவரை பார்த்ததில்லை . தனது வாழ்கையை அழகியலால் நிறைத்துக் கொண்டார் . மனதில் மரபும் நவீனமுமாக இணையும் ஒரு திறந்த புள்ளி , எவரையும் அழகியலை நோக்கி இட்டுச்.செல்லக்கூடியது என நினைக்கிறேன்

இன்று எழுந்து நிற்கும் நவீன நாகரீகம் அன்று விதையின் உறைபிறிந்து ஈரிலை விட்டிருந்தது . வழிபாடுகளும் அதை சார்ந்த சமர்பனம் போன்றவை தொடக்கமும் சென்றடையும் இடமுமில்லாத போது பக்தி என்பது வீண் வேலை என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம்பிரன்ச் புரட்சிபற்றி வாசித்து அறிந்திருந்தவருக்கு , ரஷ்ய புரட்சியை மிக அருகிலிருந்து உணர்ந்ததான உளப்பதிவு . அன்றைய சூழலில் அது உலகளவில் ஏற்படுத்தியிருந்த நம்பிகை ஒளிவெள்ளப் பாய்ச்சல் . அக்கட்சியின்  மாநில தலைமை தனது பக்கத்து வீடாக இருந்தது போன்றது போன்ற அக மற்றும் புறவய அழுத்தங்கள்  அவரது ஆழுள்ளத்தில் சில புதிய படிமங்களை உருவாக்கி இருக்கலாம்

ஆனால் அவர் கலகக்காரர் அல்ல , மற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மௌன சாட்சியாக  இருந்தார் என நினைக்கிறேன் . காரணம் அன்றைய தழிழை முன்னிறுத்தி நடைபெற்ற அரசியலில் அக்காலத்து இளைஞர்களுக்கு உள்ள ஈர்பபு அவருக்கும் இருந்திருக்க வேண்டும் . சிறு கதை எழுத்தாளாராக அவர் விரிவடைந்த போது தனித்தமிழ் மீது கொண்ட காதலில்கிருபாநிதிஎன்கிற தனது பெயரைஅருட்செலவன்என சூடிக்கொண்டார்

அவரது நவீன இலக்கியகளின் வாசிப்பும் , அதிலிருந்து கிளைத்த புரிதல்களுடன் , அனைத்தைப் பற்றியும் அவருக்கென தனித்த கருத்துகள் உருவாகி இருந்திருக்க வேண்டும் . அவைகளை தனது புரிதல்களாக மட்டுமே தொகுத்துக் கொண்டதால் அவற்றை பிறருடன் விவாதிப்பதையோ , தன்நிலை பற்றி பிறருக்கு விளக்குவதையோ நான் பார்த்ததில்லை . பூஜை மற்றும் பிராமணர் பற்றிய அவரது புரிதல் , தலைமை செயளாலரை கண்ட நொடி அவரது ஆழுள்ள அடித்தளங்கள் அசைவுற்றுஅவரது முக்கிய கொள்கைகள் இரண்டிலும் ஏக்காலத்தில் எங்கோ ஓரிடத்தில் உடைவு ஏற்பட்டிருக்க வேண்டும் . பின்னர் அதை அவர் எண்ணி பெருக்கிக் தன்னை நிறைத்துக் கொண்டார் .

அவரின் தேடலும் கண்டடைதலும் எனக்கு மிக அருகில் நிகழ்ந்ததால் அவை எனது ஆழுள்ளத்திற்கு அனுக்கமாக இருந்திருக்க வேண்டும் . சிறு வயது முதலே பக்தி குறித்து நான் எந்த குழப்பமும் அடைந்ததாக நினைவில்லை . அதன் மீதான ஆழமான நம்பிக்கை என் இயற்கையிலேயே இருந்தது . அக்கை , தங்கைகள் என வெறும் பெண்களால் சூழப்பட்ட எனது இளமை காலத்தில் எனது பொழுது போக்கே ஏதோ ஒருவகை தெய்வ உருவகங்களை வைத்து விளையாடுவது என்றே இருந்தது

எனது பக்தியை முறைபடுத்தியவர் என் தந்தை . அவரின் தேடுதலும் , புரிதல் வழியாக கண்டடையப்பட்டதும் அவரால் எனக்கு விளக்கிச் சொவல்லப்பட்டமையால் அவை குறித்த சந்தேகங்கள் எனக்கு எழவில்லை. அதன் பிறகு வழமையான பௌரானிகர்களின் பேச்சை கேட்டும் , பின்னர் அதன் தத்துவ நூல்களை வாசித்தும் எனக்கான புரிதலை அடைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்

அந்த சூழில் பக்தி நூல்கள் புரானங்களை மையப்படுத்தியதாக இருப்பினும் , பல எந்த ஆதாரத்தையும் சாராத பாமர மக்களுக்கென எழுதிக் குவிக்கப்பட்ட குப்பைகள் . அவை யரையும் எங்கும் இட்டுச் செல்லாது  . அதற்கு மறுபுறம் மரபான தரிசன ஆக்கங்கள் அனைத்தும் ஒரு காலமில்லா காலத்தில் துவங்குவது போல ஒரு தொடக்கமின்றி அவை அனைத்தும் சட்டென ஒரு உயரத்தை எட்டி பின் அங்கிருந்து கொண்டு தன் விளக்கங்களை சொல்லத் துவங்குகிறது . நான் அடியில்லாத ஆழத்தில் நின்று கொண்டு அவற்றை விளங்கிக் கொள்ள முயற்சித்ததை இப்போது நினைவுறுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக