https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 473 * புரிதல் விளையாட்டு *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 473

பதிவு : 473 / 659 / தேதி 13 அக்டோபர் 2019

* புரிதல்  விளையாட்டு  * 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-08





முதற்கனல் அதன் மணிப்பிரவாளம் போன்ற நடையை மற்றும் சமஸ்கிரத சொல் பிரயோகத்தை தான் தவிற்க நினைத்ததை பற்றி ஒரு உரையாடலில் ஜெயமோகன் சொன்னார் , நான் அவரிடம் அவ்வகை எழுத்தே என்னை வெண்முரசை நோக்கி கொண்டுவந்தது என்றேன். அப்படியா என சிரித்தார்  . நல்ல நகைமுரண். 

ஒருவகை சொல்லிணைவு பழைய மரபை கொண்டுள்ள ஆழ்மனதிற்கு இணக்கமானதும் அவைகளுடன் ஒரு  தொடர்பை ஏற்படுத்துவது . இவ்வகை சொற்களை நவீன எழுத்து முறையை கொண்ட எழுத்தாளர்கள் ஏன் கையாளவில்லை என்பதே எனக்குள் எழுந்த முதற்கேள்வி  . அது அவர்களுக்கு அறிமுகமில்லாத அல்லது அவற்றை ஒதுக்குவது தனக்கான அடையாளமாக நினைத்திருக்கலாம். தமிழில் மரபை நம்பும் விதந்தோதும் எழுத்து முறைகளுக்கு வலுவான இடம் உருவாகி வராமல் இருந்திருக்கலாம்  , அல்லது அவை மிக சிறிய இடத்தையே பெற்றிருக்கலாம் . அல்லது மரபை ஒட்டி எழுவது அன்றைய ஆட்சியாளர்களுக்கு  எதிராக உணரப்படலாம் என்கிற நிலையும் அப்போது இருந்திருக்கலாம். 

ஜெயமோகனின் சிந்தனை முறை முதலில் அவரது தாய்மொழில் மட்டுமே  நிகழ்ந்திருக்கலாம் . ரப்பர் நாவல் அப்படி தோன்றினாலும் கதைக்கான களம் கேரளம் என்பதால் அது தனித்து பார்க்க முடியவில்லை  ஆனால்  விஷ்ணுபுர நாவலில் அவர் அதை நிகழ்து முறை முழுவதும் அத்தகைய பாணியாகவே எனக்கு தோன்றியது . பின்னர் அவர் மெல்ல தமிழில் சிந்திக்கும் முறைக்கு வந்து சேர்ந்திருக்கலாம் . ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர் உருவாக்கிக் கொண்ட கூறுமுறை மாற்றமடைந்து அவரது ஆக்கங்களில் மிகப் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்ததை உணரமுடிந்தது அந்த எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தி இருக்கலாம் . 

அவர் தனக்கென உருவாக்கி கொண்ட மொழி என கூறுவது அதுவாகத்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன் . இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை சரியான குறுக்குவெட்டால் அடைவது சாத்தியமில்லை என நினைக்கிறேன் காரணம் அந்த காலகட்டத்தில் அவர் எழுதிய புகழ் மிக்க ஆக்கங்கள் அவரது வாழ்நிலமான நாகர்கோவில் மண் சார்ந்ததாக இருப்பது . அதன் மொழி மலையாள கலந்த தமிழ் . அல்லது அதுவே கூட அவரை அந்த புள்ளிக்கு அவரை கொண்டு சென்றிருக்கலாம் . அதனுடைய உச்சம் என்றால் வெண்முரசு . அது கிளாசிக் .

மலையாள மொழி அமைப்பு தூய தமிழ் மற்றும் சமஸ்கிரத மொழியை அடிப்படையாக , பாரம்பரியத்துடன் உள்ள உறவை கொண்டதாக ஆழ்மனம் அறிந்து கொள்கிறது . இன்று தமிழில் நிறைய கலைச்சொற்கள் கருத்தியல் ரீதியாக விளக்கிச்சொல்லும் முறையிலிருந்து மாற்றமடைந்தது , அந்த கலைச்சொற்களின் வழியாக வாசகர்களின் ஆழ்மனகனவுகளை விரித்தெடுக்கும் பாணி உருவாகி, கூறுமுறையில் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்தது என நினைக்கிறேன் .அதே காரணத்திற்காக பண்டைய காலத்தில் மணிப்பிரவாள எழுத்துமுறை உருவாகி வந்திருக்கலாம் . அதன் சொற்கள் கலைச்சொற்களை காட்டிலும் ஆழ்மனத்துடன் ஊடுருவி உரையாடக் கூடியதாக , அகக்கனவை உச்சத்திற்கு விரித்தெடுக்க வல்லதாக  உணர்கிறேன்.

கலாச்சாரம் , மொழி , பண்பாடு போன்றவை மதம் சார்ந்தே நமக்கு சொல்லப்பட்டு வந்திருக்கிறது . தத்துவமும் , தர்க்கமும் கூட அந்த வழியாகவே நம்மை வந்தடைந்துள்ளது . மதத்தை பற்றிய முற்றானப் புரிதலை அடைந்தபிறகு தெளிவுபெற்ற ஒருவர் தன் அறிவினால் அதை ஏற்பதும், மறுப்பதும் அறிவியக்கத்தின் செயல்பாடு . இந்து மெய்ஞான மரபில்  அதற்கான இடத்தை அது விட்டு வைத்துள்ளது  . அது புரியாத மூட பக்தியும்  , மூட நாத்திகமும் எதற்கும் உதவப்போவதில்லை . 

தமிழகத்தில் உரத்த குரலில் திராவிட இயக்கத்தின் மூட நாத்திக பிரசாரம் சில தலைமுறைகளை குழப்பியது . ஒரு மாநிலத்தை அதன் அறிவியக்கத்திலிருந்து கொண்டு சிந்திக்கும் சூழலுக்கு எதிராக ஒன்றை ஓயாது முன்னிறுத்தி வைத்தது . அதனால் பக்கத்து மாநிலங்களில் மொழி , கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் காணப்படும் நிலம் சார்ந்த  ஈரம் தமிழகத்தில் இல்லை என்பது எப்போதும் உணரப்படுவது.

தமிழகத்தில் அதன் மொழி , பண்பாடு கலாச்சாரம் என மூன்றுமே உயிர் பிடுங்கப்பட்டு வறண்டு கிடப்பதாக உணரமுடிகிறது . இங்கு , இது ஏன் இவ்விதம் நிகழ்ந்தது என்பதையும் அந்த கேள்வியும் அதற்கான இடம் என்ன என்பதை காலத்தால் மட்டுமே கணிக்க இயலும் என நினைக்கிறேன் . நான் தற்செயல் வாதத்தை நிரகரிப்பவன் .என்பதால் இதன் தன்மயம் குறித்து அவதானிக்க விரும்புவதில்லை . இருந்தும் , பக்தி கருத்தியலை பாரத மண்ணிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் மண்ணில் அதற்கு எதிரான மற்றொரு புறம் என இவை வைக்கப்பட்டிருக்கலாம் . இயற்கையின் நகைசுவை உணர்வு விந்தையானது 
ஜெயமோகனை இந்து ஞான மரபைப் பற்றிய நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட ஒருவர் என்றே எனது ஆழுள்ளம் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த  கூற்று சரியான அவதானிப்பு என்றே எனக்குப் பட்டது . அவரை மேலும் அனுக அவரது முக்கிய ஆக்கங்களை எடுத்து ஆவேசமாய் வாசிக்க துவங்கியிருந்த காலம் . அந்த வாசிப்பிலிருந்து அவரை பற்றிய மிக தெளிவான ஒரு சித்திரம் எழுந்து வந்தது .அதை  எனக்கு முதலில் உருவாக்கிக் கொடுத்தது அவரது கேள்வி பதில் பகுதி . காரணம் அவரது பிற ஆக்கங்களில் அவர் நிகழ்த்தும் தன்னை மறைந்தும் , மறுத்தும் வேறுவிதமாக புரிந்து கொள்ள வைக்கும்  ஒரு வகை விளையாட்டிற்கு அங்கு இடமில்லை . கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லியாக வேண்டி கட்டாயமுள்ளது . அங்கு அவரது மையக் கருத்தியல் எந்த ஜோடனையற்று நின்று கொண்டிருப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...