https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 388 * நுண்ணுணர்வழிந்த அரசியல் சரி நிலையாளர்கள் *

ஶ்ரீ:




பதிவு : 388 / 569 / தேதி : 13 ஆகஸ்ட்   2018

* நுண்ணுணர்வழிந்த அரசியல் சரி நிலையாளர்கள்  * 


நெருக்கத்தின் விழைவு ” - 83
விபரீதக் கூட்டு -05 .




என்னை ஆதரிக்க வேண்டும் என நான் நினைக்கும் பழைய நிர்வாகிகளில் சிலர் என் மீது அர்த்தமில்லாத காழ்ப்பிலிருக்கிறார்கள் . தற்போதுள்ள கமிட்டியில் அவர்கள் இடம்பெறாததற்கு நான்தான் காரணம் என்பது உள்பட பல்வேறு முரண்களால் அவர்கள் முற்றாக களைந்து கிடந்தார்கள் . “வாழ்வின் பெருந்தருணங்கள் யாவையும் தீயவைதான் போலும் , அவை தெய்வங்கள் மானிடருக்கு வீசும் தூண்டில் , அதனாலேயே மனிதர்கர்களால் தவிற்க இயலுவதில்லைஎன்கிறது வெண்முரசின் செந்நா வேங்கை .

என்னால் யாருக்கும் எதையும் சொல்லி புரியவைக்க முடியாது போனாலும்  இப்போதைய ஒரே ஆறுதல் அவர்கள் அனைவரும் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள் , பல உட்கணக்குகளை போடக்கூடியவர்கள் அதற்கான பாதையை காணும் வரை யாருடனும் எந்த உடன்பாட்டிறகும் வர மறுப்பார்கள் . ஆகையால்  எனக்கு இன்னமும் வாய்ப்பிருப்பதாக உள்மனம் சொல்லிற்று.

அவர்களை சூழலில்  எந்த முடிவையும் நோக்கி தள்ளாது இருக்க செயற்குழு கூடுகை முடியும் வரை என் தரப்பு சார்பாக யாரும் அவர்களை நோக்கி பேசாதது அவர்களை நிதானிக்கச் செய்யும் என கணக்கிட்டேன் . என் தரப்பில் அவர்களுக்கு கொடுக்க இருப்பது என்னவாக இருக்க முடியும் என்கிற யூகம்  அவர்கள் கணக்காக நீடிப்பதுதான் ,அவைகளை எப்பக்கமும் நகராது செய்யும் நாங்கூரம் .

இத்தகையவர்களுடன் எதற்கு  மல்லுக்கட்ட வேண்டும் என்கிற கேள்வி இயல்பாக எழுந்தாலும் இந்த முடிவிற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது . சிதைந்துபோன பழைய அமைப்பை முழுமையாக மீட்டெடுப்பது , அதற்கு முகங்கள் முக்கியமில்லை , அமைக்கப்பட்டபின் அது இயல்பாக  என் பின்னால் அணித்திறளும் என்கிற நம்பிக்கையும் எனக்கு  இல்லை , ஆனால் அவர்களின் செயப்பாட்டை களத்தில் கண்டவன் என்பதால்  பதவியையை தேர்வு செய்யும் போது நிச்சயம் அவர்கள் அதற்குறியவர்கள்  , சிலர் சில பதவிகளுக்கு சரியாக பொருந்தி வருவார்கள் . அதை செய்வதால் எனது இடம் என்னவாக இருக்கும் என்கிற அர்த்தமற்ற எண்ணம் ஏதும் எனக்கு தேவையில்லை என்பது எனது கருத்தாக இருந்தது
அமைப்பு வெற்றிபெறுமானால் அதை செய்தவன் என்கிற முறையில்அதனிடம் நான் கேட்டுப்பெறுவதற்கு ஒன்றில்லை . இயக்கம் பயணித்த பாதையில் அவற்றை வழி நெடூக நான் கண்டடைய முடியும்

செயற்குழு நடைபெறுகையில் எழும் பிரதான சிக்கல், அங்கு எழுப்பப்படும் கேள்வி . அது தலைவர் இல்லாத கூடுகைக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதாக இருக்க முடியாது, ஏனெனில் மூத்த பொது செயலாளருக்கு அதற்கான அதிகாரம் உள்ளது , ஆனால் இளைஞர் காங்கிரஸிற்கு சமந்தமில்லல்லாதவர்கள் அங்கு அமர்ந்திருப்பது  பற்றிய கேள்வி எழுந்தால் அதை மறுத்துப் பேசுவதற்கு அனைவருக்கும் தெரிந்த இளைஞர் சிலருக்கு மட்டும்  இந்த சிக்கல்பற்றி  முன்னமே சொல்லி வைத்தேன் . தலைவரின் கேள்வியும் இதுவாகத்தான் இருந்தது.

புதிதாக அங்கு அமர்ந்திருக்கப் போகும் இளைஞர்களின் தொகுதியை சேர்ந்து சிலர் தற்போதைய  இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளாக  சிபாரிசு மூலம் இந்த பதவியில் வந்து அமர்ந்திருப்பவர்கள்  அவர்களில் பலர் , சொந்த தொகுதியில் எந்த அறிமுகமும் அற்றவர்கள் , இதுவரை எந்த  உடல் உழைப்பையும் கொடுக்காதவர்கள், என்பது மட்டுமின்றி  தேர்தல் களத்தில் அவர்களுக்கு தவறான பெயர் இருப்பதையும்  அறிவேன் .என்னால் இந்த கூடுகைக்கு அழைக்கப்பட்டவர்கள் பல தேர்தல் காலத்தில் உழைத்தவர்கள்  அவர்களை நிர்வாகிகள் அல்லர் என்கிற ஒரே காரணத்திற்காக யார் அவர்களை வெளியேற சொன்னால்  அதற்காக  எதிர்வினை  அந்த கூட்டத்திலேயே  எழுந்துவிடும்.

பதவியில் இல்லை என்கிற ஒரே காரணத்தால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் துணிவு எவருக்கும் இருக்கப்போவதில்லை. மேலும் தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டால் எந்தக்கேள்வியும் எழப்போவதில்லை . ஆனால் அதற்கான வாய்ப்பு முற்றாக சிதைந்து போன நிலையில் , காங்கிரஸ் அலுவகத்தில் இந்தக் கூடுகையை நடத்த அவர் அனுமதித்ததே எனக்கு போதுமானது. அதுவே இந்த கூடுகையை நான் நடத்துவதை  அதிகாரப்பூர்வமாக்கி விடும்

அதற்கு எதிராக தற்போது  நிர்வாகிகளாக இருப்பவர்கள் , அங்கு அமர்ந்திருக்கும் அனைவரையும்  புறந்தள்ளி தங்களை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்ளத்தான் முதலில் முனைவர்கள் . அது பல வகையில் எனக்கு எதிர்பாக முடியும் , அவசியமற்று தங்களை அழைத்ததாக பழைய நிர்வாகிகள் நினைக்கக் கூடும். அவர்கள் அனைவரும்  இதை தங்களுக்கான அவமானமாக எடுத்துக்கொண்டு , அதை வனமத்தை என்மீது காட்டுவார்கள் . என்னால் விரிவாக யோசிப்பதில் ஒரு தடையை அடைந்திருந்தேன் .ஒரு அளவிற்கு மேல் அனைத்தையும் கணக்கில் எடுப்பது மூளையை சிக்கலிடச் செய்வது என்பதால் அதை கூடுகையின் போதுதான் எதிர்கொள்ள வேண்டும் , அதை அப்பபோது பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிவைத்தேன். தலைவர் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அதற்கான சமன்பாட்டை உருவாக்கி வைத்திருப்பார் . ஒவ்வொரு முறையும் நான் திகைத்துப் போவது இதை எண்ணித்தான்.
அனைத்து களேபரங்களும் மெல்ல சம்பரமடைந்தது . மறுநாள் கூடுகை என்கிற சூழலில் எழுந்தது , எனது அனுக்கர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து கள நிலவரங்களை அறிந்து கொள்ள முயன்ற போது ,சிக்கல் வேறு விதமாக திரள்வதை உணர முடிந்தது. செயற்குழு கூட்டம் என்னால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டால் அதன் பிறகு நிகழ இருப்பதை என்னைவிட கிருஷ்ணமூர்த்தி தெளிவாக புரிந்திருந்தார்  என நினைக்கிறேன் . அவரது பாணியில் பெரும் கலகம் ஒன்று நிகழ்ந்து அந்த கூட்டம் மறுமுறை கூட்டுவதை பற்றிய நினைப்பே வராத முறையில் அது சிதறடிக்கப்படவேண்டும் என்கிற வஞ்சினம் கொண்டார் என கேள்வியுற்றேன். அதற்கான திட்டத்திற்கு தனது ஆளாக சுகுமாரனை தேர்ந்தெடுத்தார் . காரணம் அவன் ஒரு அரசியல் அறியாத கைகாட்டுகிற இடத்தில் முன்யோசனையின்றி பாயக்கூடியவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...