https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 385 *செயலின்மைக்கான ஆசி *

ஶ்ரீ:




பதிவு : 385 / 566 / தேதி : 05 ஆகஸ்ட்   2018

*செயலின்மைக்கான ஆசி 


நெருக்கத்தின் விழைவு ” - 81
விபரீதக் கூட்டு -05 .




1993 ல் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவருக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மத்தியில்  நடந்து மோதலும் அதன் உள்நோக்கம் பற்றிய தகவலும் வெளியில் சரியாய் பகிர்ந்து கொள்ளப்படவில்லை . அவற்றை அமைப்பில் பெரும்பான்மையினர் அறியவில்லை . முன்னணி தலைவர்கள் முரண்படுவதும் ,விலகுவதும் ஒரு விஷயமல்ல , ஆனால் இம்முறை அது அமைப்பை முற்றாக சிதைக்கப்போகிறது என்பதை அவர்கள் தெரியாது . பாலன் கண்ணனுடன் சென்று இணைந்த போதுதான் அதிர்ந்து போனார்கள்  தங்கள் தனித்து விடப்பட்டதை தெரிந்து கொண்டதும்  . அனைவரும் தங்களை ஏமாற்றிவிட்டனர் என்கிற கோபம் அனைவரின்பேரிலும் இருந்தது . என்னை நோக்கிய கேள்விகளிலும் அதைதான் பார்க்க முடிந்தது.  

இவ்வளவு நாள் கூட்டாத செயற்குழு இப்போது ஏன் கூடுகிறது ? இதுவரை கண்களுக்கு தெரியாத நாங்கள் இப்போது ஏன்?. சண்முகத்தை நம்பி அரசியல் செய்வது வீண் என்கிற கோபமும் , அனைத்தின் மீது நம்பிக்கையின்மையும் அதனால் எழுந்த கசப்பையும் எங்கும் உணரமுடிந்தது. ஏதாவது எதிர் செய்து சண்முகத்தை சிக்கலில் கொண்டு நிறுத்தும் வாய்ப்பை அவர்கள் கைவிட தயாரில்லை. இவர்களுக்கு நான் என்ன சொல்ல ?. எதிர்ப்பாளர்களில் தொல்லையைவிட இவர்களின் ஒத்துழையாமை என்னை தோற்கடித்துவிடும் ஆபத்தை உணர்ந்தேன். இதை சரி செய்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது, ஆனால் இறுதிவரை அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஏதாவதொன்றில் முரண்பட்டு எனக்கான முழு வெற்றியை குலைத்தபடி இருந்தனர்.

இன்னும் எத்தனையோ வகையில் என் முன் கேட்கப்பட்ட கேள்விகள்  அனைத்திற்குமான எனது ஒரே பதில்எதையும் இப்போது பேசுவதற்கில்லை . நமக்கு இது நல்லதொரு வாய்ப்பு அவ்வளவு மட்டுமே . இந்த கூடுகைக்கு பிறகு அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் தருகிறேன் . நம்பிக்கை உள்ளவர்கள் என்னை பின் தொடருங்கள்என்பதாக இருந்தது .எனது அனுக்கர்களுக்கு எனது இந்த வகை பேசுமுறையில் எப்போதுமே உடன்பாடில்லை . நான் அவர்களுக்கு அனைத்தையும் விளக்கி அவர்களது ஆதரவை பெற வேண்டிய சூழலில் இப்படி கறாராக பேசுவது தேவையா? என்பதாக இருந்தது'

இது புதுமுகங்களை கொண்டு அரசியலில் ஈடுபடுகையில் நான் எதிர்கொள்ளும் , மூளையை சூடக்கும் ஒரு வித நடைமுறைச் சிக்கல், இதைத்தான் நான் ஆரம்பம் முதலே கடக்க இயலாது தத்தளித்திருகிறேன்  பல முறை அரசியல் முறைமைகளை , அதன் உட்கூறுகளில் சொல்பட்டவைகளில் இருந்து சொல்லாப்படாதது எஞ்சி நிற்கும் , அவைகளிலிருந்தே நமக்கான வழிகள் திறக்கின்றன என்பதை பிறிதொருவருக்கு வார்த்தைகளில் சொல்லி ஒருநாளும் புரியவைத்து விட முடியாது என எனகேறப்பட்ட அரசியலில் அனுபவத்திலிருந்து தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறேன் . இங்கு விளக்கங்களுக்கு ஒரு பொருளும் இல்லை . விளக்கங்கள் மேலும் கேள்விகளை பெருகவைக்கும் , அதை விளக்க துவங்குகையில் நமது பலகீனமாக பொருள்கொள்ளப்பட்டு , இன்னும் விளக்கவேண்டிய கேள்விகளை துவங்குவார்கள்

அரசியலில் தன்விருப்ப அடிப்படையில் உள்நுழைந்தவர்களுக்கு தனது கனவை விதைக்க முடியாத தலைவன் ஒருகாலமும் வென்றதில்லை . நான் அவர்கள் கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல், யார் யார் என்னென்ன செய்யவேண்டும் என்பதை அறுதியிட்டு அனுப்பினேன் . அனைவருக்கும் சொல்லப்பட்ட ஒன்று, செய்யும் அனைத்து காரியத்திற்கும் தக்க ஆதாரங்களை செயறகுழு கூடுகை நிகழும்வரை கையில் வைத்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது

அடுத்த இரண்டு நாட்களில் அமைப்பு வலுவாக இடங்கள் பரபரப்பாக இருப்பதை உணர முடிந்தது . அங்கிருந்து வரும் தகவல்களைக் கொண்டு , கூடுகையில் எந்த தவறும் நிகழாதபடி மீள மீள புதிய வழிகளை கண்டடையத் துவங்கினோம் . இந்த செயற்குழு கூடுகை தலைவருக்கு எனது ஆளுமையை வெளிப்படுத்தும் வெற்று ஆணவத்திற்காக அல்ல , இது எனக்கு , என் எதிர்காலத்திற்கு , என்னை நம்பும் சிலருக்காகாவாவது நான் இதை செய்தேயாகவேண்டும்

அழைப்பின் மூலம் புதிய உறுப்பினர்களாக வருபவர்களுல் நிர்வாகிகளாகும் திறனுள்ளவர்களைவாய்ப்புள்ளவர்களை தேர்ந்தெடுக்க துவங்கினோம் . செயற்குழு எண்ணக்கை பலத்தினால் இயங்குவது . அதில் முன்மொழியப்படும் கருத்துக்கள் , நம்மையும் மீறி ஆதரவாக அல்லது எதர்பாக மாறும் சூழல் எழும் என்பதை மறுப்பதற்கில்லை . தற்போதுள்ள நிர்வாகங்களில் மத்தியில் எனக்கு ஆதரவில்லை என்றே கணக்கில் எடுத்துக் கொண்டு  , பழைய நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டால் மட்டுமே எனக்கு போதுமானது . அவர்கள் எந்த அணியின் பின்னால் நின்றாலும் நான் கவலை கொள்ள போவதில்லை . அவர்களின்பங்கேற்ப்பால் எண்ணிக்கையை பெருகவைப்பதுடன் , ஒரு நிலைபெயறாமை ஏற்படுத்திவிடும் . அந்த சிறு இடைவெளி என்னால் அங்கு இணைக்க முடியாத பலவற்றை இணைக்க வல்லது.

அவர்களை என்னுடைய நிலை எடுக்க சொல்லி இப்போது பேச்சு வார்த்தை நிகழ்த்தத் துவங்கினால் , அதுவே எனக்கு எதிர்ப்பாக மாறும் . இந்த நிலையில் அவர்களின் ஆதரவை கோருவது தற்கொலைக்கு சமமானது . தலைவருக்கு எதிரான மனநிலையில் அவர்கள் இருப்பதை அறிந்திருந்தேன் , அதுவே எனக்குமானது . இப்போது ஆட்டத்தை நிறுத்தி விளையாட அனுமதிப்பதிப்பதால் நான் அவர்களுடன் தனிப்பட்ட எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள விழையவில்லை. அவர்கள் முதலில் இந்தக்கூடுகையில் கலந்து கொண்டு இன்றைய நிலையை அவதானிக்கட்டும். பிறகு அவர்களுக்கு நான் இங்கு நிகழ்த்தும் போராட்டம் சொல்லாமலேயே புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக