https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 390 *சிந்தனையின் ஒத்துழையாமை *

ஶ்ரீ:

பதிவு : 390 / 561 / தேதி : 17 ஆகஸ்ட்   2018

*சிந்தனையின் ஒத்துழையாமை 


நெருக்கத்தின் விழைவு ” - 85
விபரீதக் கூட்டு -05 .


மாநில செயற்குழு கூடுகைக்கு முதல் நாள் இரவு என் இல்லத்தில் நடந்த எனது அனுக்கர்கள் கூட்டத்தில் , கூடுகையை தடுக்க எந்தவகையில் எதிர்நிலையாளர்கள் எழுப்பப்படக்கூடும் என்கிற அனைத்துவிதமான கேள்விகளையும்  எடுத்து ,யார யார் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. வன்முறை நிகழுமனால் அதற்கு எதிர் தாக்குதல் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும் என மீள மீள எனக்கு அவர்கள் வலியுறுத்திய போது நான் அதை முற்றாக மறுத்துவிட்டது நண்பர்களை வருத்தமடையச் செய்தது .

அவர்கள் நம்மை தாக்கி செயற்குழுவை நிறுத்துவர்களேயானால் அது அவர்களுக்கு அரசியல் ரீதியில் பின்னடைவை தரும் , கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற்றால் சண்முகம் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார் . சிக்கல் என் நிலையிலிருந்துஅவர்கள் கைகளுக்கு செல்லும் . இதுவரை அனைவருக்கும் பொதுவில் தன்னை  அவர்  நிலைநிறுத்தி இருப்பதுதான் , என் செயல்பட முடியாததற்கு காரணம் , அதில் அவருக்குள்ள தயக்கம் விடுபட்டால் அது  என் எண்ணத்தை நான் முழுமையாக செயல்படுத்த எனக்கான காலத்தை திறந்து கொடுக்கும் . அதை விடுத்து தற்காப்பு ஏற்பாடுகள், இரு குழுவினரிடையேயான கைகலப்பு என்கிற இழிவான இளிவரலாக கொண்டு நிறுத்தப்படும்  ஆபத்திருக்கிறது..

இதை பயன்படுத்தி கட்சியின் மூத்தவர்கள் சிலர்இதற்குத்தான் இளைஞர் அமைப்பின் கூட்டத்தை கட்சி அலுவலத்தில் நடத்த அனுமதித்திருக்க கூடாது என்கிற வாதத்தை தலைவரிடமே வலுவாக முன்வைக்கத் துணிவார்கள். எந்த முன் ஏற்பாடுமில்லாத நிலையில் அவர்கள்  வெளியிலிருந்து ஆட்களைக்  கொண்டு தாக்குதல் நிகழ்த்துவார்களேயானால் , நடந்ததற்கு நான் யாருக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய தேவை எழாது. மேலும் அதனால்  எழும் சூழலில் அமைப்பை இறுக்கமாக மாற்ற வேண்டிய சூழல் எழுந்து வந்தால் , அமைப்பை மீளவும் வடிவமைக்க எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் . நான் பொறுத்திருக்க முடிவு செய்தேன் , தாக்கப்படுவது நல்லது . அவர்கள் அதையே செய்யட்டும் . இதை என்  நண்பர்களுக்கு புரிய வைக்க நான் விரும்பவில்லை. அவர்களுக்கு அது புரியப்போவதில்லை என்பது என்தரப்பு பலவீனம்.

அரசியல் நிகழ்வுளையும் அதன் பின்விளைவுகளும் யூகிப்பது என்பது  ஒருவருடைய கனவைப்போல, அதை வார்த்தைகளால் சொல்லி  பிறிதொருவருக்கு புரியவைத்துவிட முடியாது . அதை செய்ய முயலுவதைப் போல மடமையும்  பிறிதில்லை . அனுக்கர்களின் கூடுகையில் செயற்குழு கூட்டத்தில் நான் கொண்டுவர  நினைக்கு  தீர்மானம் பற்றியமுன்வரைவுகளை எடுத்து, யார் யார் எந்த விஷயத்தை பேச வேண்டும் என்றும் . எதிர் தரப்பில் யார் எதை எழுப்புவார்கள் அதற்கு சரியான பதிலை யார் கொடுப்பது எனபது பேசி முடிக்க இரவு 12 மணிக்கு மேலாகியது . அனைவரையும் மறுநாள் காலை 7:00 மணிக்கு எனது வீட்டிற்கு வரச்சொல்லி அந்த கூட்டத்தை நிறைவு செய்தேன்

அவர்கள் மனதில் எழுப்ப இயலாத நிறைய கேள்விகளுடன் பிரிந்து சென்றார்கள்  . இது முறை சாரா கூட்டம் என்பதால் அனைத்தையும்  கலந்து பேசுவது இயலாது , அதை எப்போதும் கூர் கொண்டதாக இப்போது மாற்ற முடியாது  , கலசலான எண்ணத்துடனும் சிலர் அதிருப்தியுடனும் கலைந்து சென்றார்கள் . 6 மணி நேரமாக நடந்த அந்த கூட்டத்தில் நாங்கள் அனைவருமே மிகவும்  களைப்படைந்திருந்தோம் . அவர்களை இங்கிருந்தபடி எண்ணத்தினால் செயல்முனைக்கு அழைத்து செல்வது நடவாது . அதற்கான மனநிலையில் நானுமில்லை. எனக்கு தேவை அனைத்தையும் மறந்த ஓய்வு  அது எனது உளச்சோர்வை சரி செய்து விடும் . நான் தூங்கச் சென்றேன்.

இதுபோன்ற கூட்டத்திற்கு பிறகு ஏற்படும் சோர்வும் , குழப்பமும் அனைவரையும் எங்கு கொண்டு செல்லும் என நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன் , இது போருக்கு புறப்படுவது போல இறுதி நேர உணர்வும்  கொந்தளிப்பு சரியான இடத்தில் கிளம்புமானால் அல்லது உணரப்பட்டால் களைந்து கிடைக்கும் இவர்கள் ஒற்றைபெருக்கென எழுந்து விடுவார்கள் . அதை எங்கு நிகழ்த்துவது என்பதைப்பற்றி இப்போது என்னால் எண்ணக் கூடவில்லை சிந்தனை என் இயல்புக்கு மாறாக ஒத்துழைக்க மறுத்தது  . அவர்களைவிடவும்  நான் மிகவும் களைத்து போய் இருந்தேன் என்பது பிறிதொரு காரணமாக இருக்கலாம்.

இரவு உணவிற்கு பிறகுதூக்கம் கொள்ளாமல் படுத்தபடி, அதுவரை பல காலமாக நிகழ்ந்த அணைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாக கலைத்து மறுபடியும் முன்பின்னாக அடுக்கிக்கொண்டேன் . மறுநாள் காலை 7:00 மணிக்கு எனது அனுக்கர்கள் சிலரை மட்டும் எனது இல்லத்திற்கு  வர சொல்லி இருந்தேன் . கூட்டம் காலை 10:00 மணிக்கு அது மிக சரியான நேரத்தில் துவங்க வேண்டும் . காலை 7:00 மணிக்கு வீட்டில் கூடும் இறுதிக் கூட்டத்தில் நான் என்ன பேசவேண்டும் எனபதை மீளவும் ஒரு முறை எண்ணிக்கொண்டேன்அதற்கு முன்பாக செயற்குழு கூட்டத்தில் என்ன நிகழமுடியும் எனபதை பற்றிய சிந்தனையில் இருந்தேன் . இந்த செயற்குழு கூட்டத்தை நான் கூட்டியதால் நேரடியாக தலைமைக்கு வந்து விட்டேன் . அதை மறுக்கும் முயற்சித்தான் முதலில் நடைபெரும்.

செயற்குழுவில் கலகம் விளைவிக்க சுகுமாரனை தேர்ந்தது கிருஷ்ணமூர்த்தியைப் பொறுத்தவரை சரியான தேர்வாக தெரியலாம் .அவன்  அந்த ஒருநிமிடம் தாண்டி என்ன நடக்கும் என்பதை பார்க்க இயலாதவன் . அவன் இன்று நிர்வாகிகளில் ஒருவனாக வந்ததே அதைப்போல தொண்டை பெருத்த கூச்சலும் வன்முறையின் எல்லைவரை செல்ல முயற்சிப்பதுமாக இருந்த அவனது செயல்பாடுகளே முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன . நீண்ட காலமாய் சண்முகத்திற்கு எதிர்ப்பாக கிருஷ்ணமூர்த்தியும் இதைத்தான்  செய்து கொண்டிருக்கிறார். இப்போது நேரடியாக என்னுடன். இதில் விந்தை அவன் முழுமையான வன்முறக்கு இறங்கி நான் பார்த்ததில்லை . அனைத்தும் அதற்கான முன்னரே முடிந்துதான் போயிருக்கின்றன.

செயற்குழு சில முறைமைகளை கொண்டது அது இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை , இது பொதுக்கூட்டமில்லை ,இங்கு அனைத்தும் பதிவு செய்யப்படும் . அவர்களுக்கு கலகம் எளிதாக இயல்வதுதெரியாதது சமாதானம் எப்படி பேசுவது என்பதுதான் . அந்த வழியில் அவர்களை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என முடிவு இரவு உறங்கப்போனேன் . மறுநாள் காலை 7:00 மணியிலிருந்து எனது குழு ஒருவர்பின் ஒருவராக எனது இல்லத்தில்  கூடத்துவங்கினர் . நான் அனைவரும் முழுவதுமா வந்தமையும் வரை அவர்கள் மத்தியில் இருக்கக் கூடாது என முழு குழுவும்  வரும் வரை காத்திருந்தேன் 7:40 மணிக்கு ஏறக்குறைய அனைவரும் வந்து சேந்தனார் . நான் அனைவரும் வந்து அமர்ந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பிறகு அதையே ஒரு கூடுகைபோல நிகழ்த்த முடிவு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக