https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 393 * ஊழின் மடியில் *

ஶ்ரீ:



பதிவு : 393 / 564 / தேதி : 26 ஆகஸ்ட்   2018


ஊழின் மடியில் 


நெருக்கத்தின் விழைவு ” - 88
விபரீதக் கூட்டு -05 .





கூடுகைக்கு முன்பாக அவரது ஆசி வேண்டி தலைவரின்  கால்தொட்டு சென்னிசூடினேன் . அதை  எதிர்பார்க்காது திகைத்திருந்த தலைவரின் பக்கத்தில் இருந்த சூர்யநாராயணன்ஆசியளியுங்கள் தலைவரேஎன்றார் , என் கரம் பற்றிவெற்றி பெற வாழ்த்துக்கள்என்றார் . நான் தலைவருடன் விடைபெற்று என்னுடன் காரில் புறப்பட்டதும் சூர்யநாராயணனும் என்னுடன் அலுவலகத்திற்கு கிளம்பினார்  . நான் தலைவர் முகத்தில் தெரிந்த திகைப்பை மட்டும் மீளமீள நினைத்தபடி இருந்தேன்

கார் பீச் ரோட்டை தாண்டும்வரை நான் ஏதும் பேசும் மனநிலையில் இல்லை . “ தலைவரை நீ மீண்டும் ஒருமுறை கூட்டத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தியிருக்கலாம்என்றார் சூர்யநாராயணன் . நான் கலவையான எனது பழைய நினைவுகளில் ஆழ்திருந்தேன் . சூர்யநாராயணனின் பேச்சு என்னை மீண்டும் நடைமுறை உலகிற்கு கொண்டு வந்தது . நான் அவரிடம்யாருக்கு எப்படியோ என்னை பொறுத்தவரை இது சரித்திர முக்கியத்துவம் வாய்த்த ஒரு கூட்டம் . இளைஞர் காங்கிரஸின் முன்னாள்  தலைவர்கள் தன்னலம்  ஒட்டி எடுத்த முடிவுகள் , இரண்டு தலைமுறை இளைஞர்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிட்டது, அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காது போனது , அவர்கள் ஏற்றியது காங்கிரஸ் கொடிதான் , இந்த கட்சிக்குத்தான் உழைத்தார்கள் , தலைவர்களின் பூசல் அவர்களை பாதித்தது யார்குற்றம்” . 

சிதறி கிடக்கும் அவர்களை ஒருங்கிணைத்தால் என் சிந்தனை ஒத்தவர்களை அரசியலின் மையப்பாதைக்கு கொண்டுவர இயலும் .   எனக்கு இதை செய்ய வாய்ப்பளித்தது  ஊழின் பெருங்கருணைக்கு , என் நன்றியை சொன்னேன். நான் அதை நிகழ்த்தும் இடத்திற்கு வருவேனென இதுநாள் வரை நினைத்ததில்லைஇதைப்பற்றிய எனது எண்ணத்தை வல்சராஜ் தலைமையில் நிகழ்ந்த இளைஞர் காங்கிரஸ் முதல் செயற்குழு கூட்டத்தில் முன்வைத்து அது எள்ளலுக்கு உள்ளான வருத்தம்தான் எனக்கு முதலில்  நினைவிற்கு வந்தது. அதன் பிறகும் தலைவரிடமும், வல்சராஜிடமும் நான் பலமுறை பேசி எந்த பயனுமில்லை . கமலக்கண்ணன் வெளியேறியது இன்றைய அணைத்து இளைஞர்களின் மனநிலைக்கு ஒரு உதாரணம்

நான் கமலக்கண்ணனின் செயலில்  குற்றம் காணவில்லை. மாறாக இந்த அமைப்பை குற்றம் சொல்கிறேன்  . இன்று எனக்கான களம் அவர்கள் உருவாக்கி கொடுத்தால்தான் . அதற்கான கடைசி முயற்சியில் இருக்கிறேன் .இதன் பயன் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் என்னிடத்தில் இல்லை . இதனால் எழவிருக்கும் சிக்கல் பற்றிய கவலையும் எனக்கில்லை . இங்கிருந்து ஏதாவது முளைக்கும் என்கிற சிறு நம்பிக்கை மட்டுமே இப்போது எனக்கானது” . 

எனது மனது இது வேண்டாத வேலை என்கிறது . ஆனால் தில்லியில் நான் இருந்தபோது கமலக்கண்ணன் வெளியேறியது எனக்கு பெரும் மனக் கொந்தளிப்பை கொடுத்திருந்தது . அனைவருக்குமான அவர்களின் முடிவை அது விடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கிறேன். இதை இப்போது இந்த ஸ்தானத்தில் இருந்து கொண்டு இன்னதென தெரியாத ஒன்றுக்கு அஞ்சி விலகி நிற்பதை விட கீழ்மை மற்றொன்றில்லை  . இந்த களம் அழிந்து போனால் என்னை போன்றவர்கள் நிற்கும் நிலம் காணாமலாகும் , அதன் பிறகு நான் இங்கு செய்ய என்ன இருக்கிறது? . இன்று துவங்கும் இதிலிருந்து ஒருநாள் பலனென ஏதாவது ஒன்று விளைந்தால் அந்த பலனைக்கூட நான் போராடித்தான் பெறவேண்டி இருக்கும் . கண்களுக்கு புலனாகா புடவியின் பெருநெறி என்று ஒன்று உள்ளது அது அனைவருக்கும் மீற  எதோ ஒன்றை விதித்துக் கொண்டுதான் இருக்கிறது . பலனை எதிர்பார்த்தோ, எதிர் நோக்காமலோ, அதை செய்ப்பவனுக்கு அதை செய்த மன திருப்தியே அதற்கான பலன். அதை தாண்டி எனக்கு இதன்மீது இந்தப் பொறுப்பும் இல்லை” . 

தலைவர் இதனால் என்னுடன் முரண்பட்டால் அதை எதிர்கொள்வதுதான் எனக்கானது என எடுத்துக்கொள்கிறேன் . இங்கிருந்து எனக்கான வழி திறக்காது போனால் , நான் இங்கிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லைஎன்றேன் . சூர்யநாராயணன் மெல்ல எனது தோளை தட்டினார் . இதைவிட கசப்பான உண்மைகள் பலவற்றை அவர் பார்த்திருக்கக்கூடும் . தலைமை பொறுப்பென்பது அதில்கிடைக்கும் செல்வாக்கை கடந்து பல கசப்புக்களைத்தான் அது ஜீரணிக்க கற்றுக் கொடுப்பதை தவிர்க்க இயலாதது . பாரதி வீதியை நெருங்கும் போது தூரத்தில் கட்சி அலுவலகம் பரபரப்பாக இருப்பது தெரிந்தது.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன் உள்ள பாரதி வீதி டீ கடைகளில் அமைந்திருந்த சிலரை பார்த்து சூர்யநாராயணன் சூடானார் . “இவர்களை நான் அறிவேன் பலமுறை கட்சி அலுவலகத்தில் கலகம் விளைவித்தவர்கள்என்றார் . “உன்னுடைய கூட்டம் சிக்கலில் இருக்கிறது அதைப்பற்றி உனக்கு ஏதாவது தகவல் உண்டா?” என்றார் . நான் மையமாக சிரித்தேன் . அலுவலகத்திற்கு உள்ளே நுழையும் போது எனக்கெதிரான பலவிதமான வசை சொல் கோஷங்களாக  எழுந்தன . நான் எதற்கும்  செவி கொள்ளாது உள்ளே சென்றேன்

உள்ளே கூட்டம் நிரம்பி வழிந்தது. வியர்வை பொங்க பலர் அங்கு செறிந்தருந்தனர். வழக்கமான உஷ்ணத்துடன் மனித வீச்சங்கங்களும் உச்சம் பெற்றிருந்தது. நான் மேடையை நெருங்கியதும் சுகுமாரன் கூட்டத்தில் நீந்தி என்னை நோக்கி நகர்ந்து வந்தான் . நான் மைக் சரி செய்யும்வேலையில்  இருந்தேன் , என் அருகே வந்து தனது உரத்த குரலால் , பக்கத்தில் இருந்த என்னிடம் செவியிழந்தவர்களிடம்   பேசுவது போல உச்ச குரலில்  கூட்டத்தை உடனே  நிறுத்த சொன்னான் . இது சட்ட விரோதமானது என்று கூச்சலிட்டான் . அவனுடன் வந்திருந்த கூட்டம் என்னை மெல்ல சூழந்து கொண்டது.அமர்ந்திருந்த எவரும் என்னை மீட்க வரவில்லை . நான் எதிர்பார்த்ததுதான்

என்அனுக்கர்களுக்கு இதில் நுழைய நான் முன் பே அனுமதி மறுத்திருந்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட குரலே அவர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் . கூட்டத்தில் யாரும் என் உதவிக்கு வராதது , எங்கும் ஏதும் எழாது திகைத்து  நின்றது , அவர்களின் வேகத்தைக் குறைத்தது .நான் உணர்ச்சிவசப்படாது அமைதி காத்தது அவர்களுக்கு அந்த  திகைப்பை கொடுப்பதை அறிய முடிந்தது

அதற்குள்  வெளியில் நான் பார்த்த அந்த கூட்டமும் ஒருவர் பின் ஒருவராக உள் நுழைந்த படி இருந்தனர் . அவர்களை அவர்களின் ஆட்களே அவசரமாக சென்று   மறிப்பதைக் கொண்டு அவர்கள் குழம்பியிருப்பதை தெளிவாக காட்டியது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும் எனத் தெரியாத நிலையில் , கூடுகை துவங்குவதை அறிவிக்கும்வந்தே மாதரம்பாடல் ஒலிக்கத் துவங்கியதும் சட்டென அங்கு அனைவரும் பேச்சிழந்தனர் . எங்கும் அமைதி உருவானது . நான்  மெல்ல என்னை திரட்டிக்கொண்டேன்  என் உடல் முழுவதுமாக ஏதோ சூடாக பரவிக்கொண்டிருந்தது 

நான் எந்த நேரமும் தாக்கப்படலாம் என்பதே அங்கு நிலவிய சூழல் . எங்கும் அசாதாரண அமைதி நிலவுவதை உணர்ந்தேன் . அமைதியான இடத்தில் திடீரென ஒரு பரபரப்பு. அமர்ந்திருந்த கூட்டத்தின் பின் வரிசை எழுந்து இரண்டாக பிளந்து  பதறி வழி விட்டது . நாற்காலிகள் இழுபடும் ஓசையுடன் சட்டென உருவாகிய அனைவரின் உரத்த குரல் அமைதியை குலைக்கும் கார்வை ஒலியாக எழுந்து, என்ன நிகழ்கிறது என புரிந்து கொள்ளும் முன்பாக யாரும் எதிர் நோக்காத  அது நிகழ்ந்தது . புதிதாக திறந்த கொண்ட பாதையின் நடுவில் தலைவர் தனக்கு இருபுறமும் நின்றவர்களை இருகரம் குவித்து வணங்கியபடி உள் நுழைந்து கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்