https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 15 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 389 * தகவலின் மிகை *

ஶ்ரீ:




பதிவு : 389 / 560 / தேதி : 15 ஆகஸ்ட்   2018

* தகவலின் மிகை 


நெருக்கத்தின் விழைவு ” - 84
விபரீதக் கூட்டு -05 .




நான் யூகித்த அனைத்து களேபரங்களும் மெல்ல சம்பரமடைந்த பிறகு ஏதோ ஒன்று எஞ்சியிருப்பதாக தோன்றியது . மறுநாள் கூடுகை என்கிற சூழலில் , எனது அனுக்கர்கள் வழியாக , களத்தில் சிக்கல் வேறு விதமாக திரள்வது குறித்த தகவல் வந்தது . அது  செயற்குழு கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவரது பாணியில் கலகம் ஒன்று நிகழ்த்துவது பற்றிய திட்டம் . அதை நான் எங்கோ உணர்ந்ததுதான், இருப்பினும் அது பிறிதொருவர் வழியாக வார்த்தைகளாக வந்து அடையும் போது ஒரு சிறு திடுக்கிடலாக உணரப்பட்டது .கிருஷ்ணமூர்த்தி முருகேசனை தவிற்த்து சுகுமாரனை அதற்கு  தேர்ந்தெடுத்திருந்தார், காரணம் அவன் ஒரு அரசியல் நுட்பம் அறியாது  கைகாட்டுகிற இடத்தில் முன்யோசனையின்றி பாயக்கூடியவன். ஒரு ஆயுதம் மட்டுமே

செயற்குழு கூடுகையின் முதல் நிலையில் அவன் மூர்க்கமாக செயல்பட்டால் , கூடிய கூட்டம் நாற்ப்புறமும் சிதறிவிடும் என கிருஷ்ணமூர்த்தி நினைத்திருந்தால் அது பிழைக் கணக்கு . இது திறந்த திடலில் நிகழும் பொதுகூட்டமல்ல , மேலும் இது அரசியல் நுண்மையுடன் செயல்பட வேண்டிய களத்தில் வன்முறையை நுழைக்க முயன்றதிலிருந்து ,அவரிடம் சரியான தகவல்கள் இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது ,ஒருவகை மனநிறைவை கொடுத்தது.

சுகுமாரன் மாநில நிர்வாகி, அவன்  தனது தரப்பை கூடுகையில் முனவைக்காமல் செயலில் இறங்க முடியாது . வன்மத்துடன் பாய்வதற்கு வரும் எவரும் பேசிய பின் அதைத் துவங்குவதில்லை . பேசும் அந்த கணம் அவனுக்கு பின்னால் நிற்கும் குழுவில் ஒருவருக்கு சிறு மனத்தடை ஏற்பட்டாலும் அதன்   ஒழுங்கமைவு கை நழுவிப்போகும் . அந்த தயக்கம் ஏற்பட்டால்  பின்னர் யாரையும் ஊக்கி எடுக்க முடியாது

நான் எது வந்தாலும் எதிர்கொள்ளும் நிலைக்கு முற்றாக நகர்ந்து கொண்டேன் . விடிந்த பிறகு இன்னும் அனுக்கமாக இதை உணர முடியும் அதுவரை அமைதிகாக்கும் எண்ணமெழுந்தது.காங்கிரஸ்  அலுவலகம் பல தகராறுகளின்  தடையங்களை தன் வரலாறாக  முன்னமே சிலமுறை பதிந்து உள்ளதுதான் . நீண்ட நாட்களுக்கு பிறகு அது இப்போது நிகழலாம் . காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்து மோதல்கள் பெரும்பாலும் கண்ணன் நிகழ்த்தியது . அதன் பிறகு பாலனும் தலைமையில் நாங்களும் செய்த பெரிய போராட்டம் என்பது எப்போதும் அலுவலகத்திற்கு வெளியேதான் . அது சண்முகத்தின் ஆழ்மனதை அசைக்க அதை சென்று தொடுவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது .  

1991 தேர்தலில் சண்முகம் , பாலன் இருவரும் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு தோல்வியுற்றதை தொடர்ந்து , தார்மீகப் பொறுப்பேற்று பாலன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜினாமாசெய்வதாக அறிவித்து . அதுபோலவே சண்முகத்தை மாநில தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்ய வலியுறுத்தி தர்ணாவாக அது நடந்தது . அதையெல்லாம் ஒப்பிடுகையில் இது சிறுக்குழுவின் கலகம்  நடிப்பு மட்டுமே என அது தனதுகூர் இழந்திருந்தது

சண்முகத்தின் தேர்தல்  தோல்வியை அடுத்து அவரது முதல்வர் வாய்ப்பு தடைபட்டது , புதிய முதல்வராக வைத்தியலிங்கம் அமர்ந்தாலும் மந்திரிசபையில் சண்முகத்தின் செலவாக்கே ஓங்கியிருந்தது அவரது எதிர்ப்புகளை முற்றாக சிதைந்து வலுவிழந்து . அதை ஒட்டி கட்சி அமைப்பில் சண்முகம் மீளவும் பெரும் பலம் பெற்றிருந்தார் . அவரை குறிவைத்த எதிர்ப்புகள் அனைத்தும் முனை மழுங்கிய போனதால். உட்கட்சிக் கலகம் போன்று ஒன்று அங்கு நிகழ்ந்து நெடுநாட்களாகிறது. மீளவும் அதுபோன்ற ஒன்று என்னை குறிவைத்து கிளம்பும் வாய்ப்பு பற்றி அறிந்தபோது , முதலில் சிறு துணுக்குறுதலை உணர்ந்தேன்.

என்னை மையப்படுத்து எது நடந்தாலும் அது தலைவரையும்  பாதிக்குமா ? அவர் அஞ்சுவது இதற்குத்தானா?. இதன் பிற பரிமாணங்கள் அவர் அளவிற்கு சென்று தொடக்கூடியவையாக எனக்குத் தெரியவில்லை. பின் ஏன் இத்தனை தயக்கம் . அரசியல் சூழ்க்கைக்கு தயாராக இருந்தாலும் வன்முறைக்கு நான் எப்போதும் தயாரில்லை . எந்த வன்முறையையும் எதிர்கொள்ளும் பலமும் சூழலும் அன்று எனக்கு இருந்தாலும், வன்முறை அரசியல் எனது வழிமுறையாக எப்போதும் இருத்ததில்லை . அதை துவங்குவது எளிது , அடக்க முடியாது . அது ஏதாவது ஒரு முனையில் எப்போதும் வெடித்தபடி இருக்கும் . ஒரு முறை அதை கைக்கொண்டால் பின் ஒருபோதும் அதிலிருந்து வெளிவர இயலாது

இந்த கூடுகைக்கு நான் ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும் . அனைவரும் விலகி இருக்கையில் உனக்கென்ன வந்தது என பல முறை கேட்டுக்கொண்ட பிறகும் , அதை நிகழ்த்தும் விழைவே மீள மீள எழுந்து வந்தது. “ வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டுசென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. இன்று மனித மனம் அன்றாட வாழ்க்கையின் தளங்களுக்கு அப்பால் செல்ல எப்படி எப்படி முயல்கிறது என்பதற்கான தடயங்களாக அவை உள்ளன. மனித மனத்தின் அசாதாரண உச்சம் வெளிப்படும் தருணங்கள் இவை. உளச் சிக்கல்கள், திரிபு நிலைகள் ஆகிய சொற்கள் எல்லாமே மனித மனம் உச்சம் நோக்கிச் செல்வதைச் சித்திரிப்பவையே என்றுதான் ஒரு கொள்ள இயலும் என்கிற உளவியலை சொல்லுகிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரை ஒன்றில்.

மாநில செயற்குழு கூடுகைக்கு முதல் நாள் இரவு என் இல்லத்தில் நடந்த எனது அனுக்கர்கள் கூட்டத்தை ஏறக்குறைய இதைப்போல ஒன்றைத்தான் அன்று நான் மிக அழுத்தமாக சொல்லி இருந்ததை இப்போது நினைத்து பார்ப்பது விந்தையான உணர்வு . பலமுறை அந்த கூட்டத்தில் எதிர் தாக்குதல் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும் என மீள மீள அவர்கள்  வலியுறுத்திய போது நான் அதை முற்றாக மறுத்துவிட்டதில்  நண்பர்களுக்கு என் மீது வருத்தம்  . நான் அவர்கள் சொன்ன தற்காப்பிற்கு வேண்டிய எதையும் செய்ய ஒப்பவில்லை. அதைப்போல ஒன்று நிகழுமானால் அதுவே அமைப்பை அந்த நொடிமுதல் ஆக்கப்பூரவமான செயல்பாட்டிற்குள் கொண்டுவந்து விடும் என உறுதியாக நம்பினேன். செய்திகள் பெருமளவிற்கு உண்மைநிலையை எட்டுவதில்லை . தகவல்களை திரட்ட நான் எப்போதும் முயன்றதில்லை , அவை நம்மை எங்கும் அமையுற செய்யாது நமது சித்தத்தை நம் கட்டுப்பாடில்லாது செய்துவிடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...