https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 9 மே, 2018

அடையாளமாதல் - 330 * பணியாமை *

ஶ்ரீ:




பதிவு : 330 / 502 / தேதி :- 09 மே  2018


* பணியாமை *



நெருக்கத்தின் விழைவு ” - 25
விபரீதக் கூட்டு -04.








மூன்று வருட கூட்டணி அரசு காங்கிரசின் மாதில தலைமைக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்  . கட்சியை கடந்து ஆட்சியை கட்டுப்படுத்துவது மேலதிக சிக்கலை உருவாக்குவது . ஆட்சியில் அமர்வதற்கு முன் பின் என சுபாவம் மாறிப்போன சொந்தக் கட்சி உறுப்பினர்கள். அவர்களில் சிலர் மாநில தலைமையை கடந்து தில்லியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விழைந்தது , பலவித ஊழல் குற்றச்சாற்றிற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி  போன்றவை  தலைமைக்கு தலைவலியை அதிகமாக்கி இருக்கலாம் . சொந்தக் கட்சியில் மாறும் சமன்பாடும் கூட்டணி ஆட்சி பல முனைகளில் உள்ள மன அழுக்காறு போன்றவை  கசப்படைந்து உறவு முறிவதற்கு காத்திருந்த போது , திமுக வின்  தன்னிச்சையான ராஜ்யசபை வேட்பாளர் அறிவிப்பு , எரியில் வார்த்த எண்ணையானது  . சண்முகம் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

சண்முகம் அரசாங்கம் தன்னை கலந்தாலோசிக்காததை தனக்கான அறைகூவலாகஉணர்ந்தார் .சில  தனிப்பட்டகாரணங்களுக்காக இந்த சட்டமன்றத்திற்கு அவர்  செல்லாதது  அரசியல் பிறழ்வு . அதனால் ஒரு இடைவெளியை உருவாக்கி இருக்கலாம் . அனைத்து நிகழ்வுகளும் , நிகழ்ந்தபின் சொல்லப்படும் போது , அதை நிதானித்து கேட்கும் ஒருவருக்கு அதை இன்னும் செறிவாக செய்ய கூடிய யோசனைகளை தோன்றுவது இயற்கையானது . ஆனால் களத்தில் நடவடிக்கைகள் உடனடி முடிவை எதிர்நோக்குபவை . ஒவ்வொன்றையும் தலைமையை கேட்டு செய்வது ஒருவருடைய தன்னறத்தை பாதிப்பது . இந்த இடத்தில் முரண் எழுவது தவிர்க்க இயலாதது . எந்த முடிவற்கு பிறகும் தலைமையின் அதிருப்பதி , உறுப்பினர்களின் மத்தியில் புதிய போக்கை விளைத்திருந்தது 

சண்முகத்தின் முடிவிற்கு தில்லியின் ஒப்புதல் கிடைத்தது என்பது சற்று மிகையாக சொல்லப்பட்டாலும் , அதில் ஒருபகுதி உண்மை . முன்னமே பல்வேறு விஷயங்களில் தமிழக மற்றும் தில்லி தலைமையில் கசப்பு உருவாகி இருகையில் அதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் என்பதும் ஏற்கக்கூடிய வாதமே. அரசியல் அப்படிப்பட்ட அடிக்கிற காற்றில் தனது காரியத்தை சாதிக்கும் சாமர்த்தியத்தை உள்ளடக்கியே நிகழ்கிறது . இன்னும் நெருங்கி  பார்க்கப்போனால் காங்கிரஸுக்கு திமுக உடன் கூட்டணி ஏற்பட்டதே ஒரு முரண்  என்பது தெளிவாக தெரியும்.

கூட்டணி மந்திரிசபை சண்முகத்தின் கையை மீறிய ஆளுமைகளால் ஆனது , என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும் . அவரது இந்த முடிவிற்கு வேறு மிக நுண்ணிய  காரணிகளும்   இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் . சொந்த கூட்டணி ஆட்சியை , மத்தியில் சொந்தக்காட்சி ஆளுகையில் இருக்கும் போது  , அதன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட துணை நிலை ஆளுநர் அனைத்தையும்தனது பெயரால் ஆளுகிற போது , ஆட்சியிலிருந்து  வெளி ஏற வேண்டும் என்கிற பதைப்பும் , அதற்கு தில்லியில் கிடைத்த ஒப்புதலும் பல கோணங்களில் விரியக்கூடியது . முக்கியமாக இரு பிரிவுகளில் , ஒன்று சண்முகத்தின் தனிப்பட்ட விழைவு , அல்லது தில்லியின் நெருக்கடி . ஆனால் சண்முகத்தின் விழைவிருக்கு பின் இருக்கும் அவன் நெருக்கடையைத்தான் நான் முதலில் கணக்கில் எடுக்கிறேன் .ஏனெனில் அதுதிறந்து காட்டும் அரசியல் வெளி பெரியதுஸ்வாரஸ்யமானது, கலகம் நிறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக