https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 மே, 2018

அடையாளமாதல் - 325 * காலத்தை அடைகாத்தல் *

ஶ்ரீ:பதிவு : 325 / 495 / தேதி :- 03 மே  2018* காலத்தை அடைகாத்தல் *
நெருக்கத்தின் விழைவு ” - 20
விபரீதக் கூட்டு -04.


சில காலம் கழித்து ஆனந்த பாஸ்கரன் மரைகாயர் வீட்டிற்கு சென்று வருவது முற்றாக நின்றுபோய் , எந்த கட்சி விழாவிலும் காணாமலானார் . பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு  கல்யாண வீட்டில் சண்முகமும் ,ஆனந்த பாஸ்கரனும் மீளவும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர். சில நாட்கள் கழித்து சண்முகம் வீட்டில் ஆனந்த பாஸ்கரனை அடிக்கடி பார்க்க முடிந்தது . அரசியலில் இது ஒரு நிகழ்வே அல்ல என்பதால் யாரும் அதுபற்றி பேசாத போது , துணுக்குற்றவராக உலகில் பிறிதெவற்கும் நிகழாத துரோகம் தமக்கு நிகழ்ந்ததாகதுக்கம்விசாரித்தவர்களிடம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார் . பிறகு அதுவும்  பேசப்படாது முடிந்து போனது

மரைகாயருக்கும் ஆனந்த பாஸ்கருக்கும் இடையே உருவான பூசல் , இறுதியில் சண்முகம் திட்டமிட்டு அவரை தன் தரப்பெடுக்க வைத்தாக பேசப்பட்டபோது , ஆனந்த பாஸ்கர் அதை முதலில் மறுத்தாலும் , பின்னர் தன் மறுப்பில் பலமில்லாது போக , தான் மறுதளிப்பதில் பயனில்லை என உணர்ந்து , அப்படியும் ஒரு கோணம் இருப்பதாக பேசத்துவங்கியதுஊழின் வினோதம். அடிப்படையில் மரைக்காயரை வெறுத்து சண்முகம் தரப்பில் இயங்கும், கட்சி அமைப்புசார்ந்த அணியின் கீழ் வந்தார் , இருப்பினும் அவரது ஆழ்மனத்திற்கு மரைக்காயர் பாணி அரசியலே உகப்பாக இருந்திருக்க வேண்டும் . அதனால் சண்முகம் பாணி தவறானது என்கிற எண்ணம் அவருக்கு எப்போது இருந்தது

அவருடனான அரசியல் விவாதம் என் வந்தாலே அது எங்கு சுற்றினும் கடைசியில் சண்முகத்தின் அரசியல் பாணியை வந்தடையும் . அந்த சூழலில் , சண்முகத்தின் மீது தனுக்குள்ள காழ்ப்பை வெளிப்படுத்த ஆனந்த பாஸ்கரன் தயங்குவதில்லை . நான் பாலனை போன்ற அரசியலில் விழுமியமில்லாத தலைமையின் கிழ் இயங்கி பல்வேறு சிக்கலின் பொருட்டு கட்சி செயல்பாட்டிலிருந்து வெளியேறி ,  பின்னர்  தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தொடர் மன அலைக்கழிப்பிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும் பொருட்டு மீளவும் அரசியலை தேர்ந்தெடுத்தேன் . அப்போது சண்முகத்தின் தலைமை எனக்கு உகப்பாக இருந்தது .   மிக நீண்ட சிந்தனைக்கு பின்னரே அந்த முடிவிற்கு வந்தேன்.

நான், எனது அரசியலை சண்முகத்தை எதிர்த்து துவங்கியதால் , சண்முகத்தின் பாணி அரசியலில் உள்ள நடைமுறை சிடுக்குகளை தெரிந்திருந்தாலும் , புதுவையின் அரசியல் கள அமைப்பில் இருக்கும்  பிற தலைவர்களை விட , சண்முகத்தின் அனுகுமுறை பல வகையில் சரியானதே என்கிற அவதானிப்பிற்கு பிறகே அவரை சென்று சந்தித்தேன் . அதன் பொருட்டே அவரது இறுதிக்காலம்  வரை அவருடனேயே எனது அரசியல் பிண்ணப்பட்டு இருந்தது . அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் கட்டம் வந்ததும் , பிறிதொருவரை எனக்கு தலைமையாக தேர்ந்தெடுக்க விருப்பமின்றி நானும் அவருடன் கட்சி செயல்பாடுகளில் இருந்து முற்றாக வெளியேறினேன் .   

ஆனந்த பாஸ்பரனுடன் என்னுடைய விளையாட்டாக துவங்கிய உரையாடல் சண்முகம் பற்றியதாக திருப்பியதும் ,பின் அது விவாத நிலையை எட்டியது , தனது 1985ல் நிகழ்ந்த அரசியல் ஏமாற்று வேலை குறித்த அவரது குற்றச்சாட்டு சண்முகத்தை நோக்கி வைக்கப்பட்டதும் , அதை  நான் மறுத்தபடி இருந்தேன் . அது பற்றி எனக்கு சில உள் விஷயங்கள் தெரியும் என்பதால், அவருக்கு சில விஷயங்களை விளக்கப்போக , ஒரு கட்டத்தில் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டார் . முதலில் சற்று வருத்தமடைந்தாலும் . நான் முன்வைத்த கருத்துக்களை மீளவும் நினைத்துக்கொண்டேன் . அரசியலை விருப்பு வெறுப்பிற்கு இடையில் நான் முடிவு செய்வதில்லை . அது ஒரு நிலையை நோக்கிய பயணம் என்பதால் , நான் சொன்ன கருத்துக்களை குறித்து எனக்கு வருத்தமில்லை . எனக்கும் அவருக்குமான ஒரு நடப்பு இங்கு உடைந்து போகும் என்றால் அப்படியே ஆகட்டும் என முடிவெடுத்தேன் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...