https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 மே, 2018

அடையாளமாதல் - 335 * தவறான திருப்பங்கள் *

ஶ்ரீ:



பதிவு : 335 / 507 / தேதி :- 14 மே  2018



* திருப்பங்களின் பொருள்    *




நெருக்கத்தின் விழைவு ” - 30
விபரீதக் கூட்டு -04.







காங்கிரஸிற்குள்ளேயே கூட தியாகம் , அற்பணிப்பு , காத்திருப்பு போன்ற பண்பைக் கொண்ட தலைமையை பார்த்து அரசியலை புரிந்து கொண்டவர்களும் , பொது ஜன கவர்ச்சிக்கு எதையும் சொல்லலாம் என்கிறபரப்பியல்கலாச்சார மாறுபாட்டை, “அரசியல்என அதை நோக்கிய மனச்சாய்வு கொண்ட பிறிதொரு அமைப்பை உள்ளடக்கியதாக , அது மெல்ல மாற்றமடைந்து கொண்டிருந்தது . இளைஞர் காங்கிரஸார் ஏறக்குறைய அதைப் போன்றபரப்பியல்கோட்பாடுகளை நம்ப துவங்கி இருந்தார்கள் . விழுமியங்கள் அர்த்தமிழக்க துவங்கி , தமிழக பாதிப்பும் மேலோங்கி அதிமுக இரண்டுமுறை ஆட்சியில்  அமர்ந்தது , புதுவையிலும் திராவிட பாணி அரசியல் வளரத்துவங்கிது , போன்றவை அதற்கு அடிப்படை காரணிகளாக இருந்திருக்கலாம் 

மரபான கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள அமைப்பு  சண்முகத்தை விட்டு விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை புதிய சிந்தனையாளர்களாக சிலர் நிரம்பியதும் , காங்கிரஸின் அடிப்படை மாற்றமடைந்து விட்டது . கண்ணன் தலைமையிலான இளைஞர் காங்கிரஸும் அமைப்பும்  இப்படிப்பட்ட கலவையாக இருந்தாலும் , அவர்களுக்கு காமராஜ் என்கிற ஒரு பிம்பம் ஏற்புடையதாகவும் பிற கோட்பாட்டை நோக்கி செல்ல ஒரு தடையாகவும்  இருந்தது . அதனால் நவீன போக்குள்ளவர்களாக தங்களை இந்த இரு கோட்பாட்டின் மத்தியில் தங்களுக்கான பாதையை அவர்கள்  ஏற்படுத்திக்கொண்டார்கள்.

புதுவையை தமிழகத்துடன் இணைப்பதற்கு எதிர் நிலை எடுத்த போராட்டங்கள் காங்கிரஸுக்கு உயிர்நீர் வார்த்திருந்தது . ஆனால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த வெற்றிடமும் , சண்முகத்துற்கு தன்னை நிறுவிக்கொள்ள வேண்டிய நிர்பந்த்தால்  1980 தேர்தலுக்கு அவருக்கு திடீர் காங்கிரஸார் தேவைப்பட்டார்கள். கட்சிக்கு வெளியே புதிய முகங்களை தேடத் துவங்கியது அப்போதுதான் . அதன் விளைவை பின்னாளில் அவர் சந்திக்க வேண்டி இருந்தது . திமுக வுடன் கூட்டணி ஏற்பட்டது இந்த சூழலில்.

பரப்பியும்என்று சொல்லப்படுகிற யுக்தி மூலமாக செய்கிற அரசியல் , விழுமியங்களை கொண்டு அரசியலை பார்ப்பவர்களுக்கு திகைப்பையும் மிரட்சியையும் கொடுத்தது . அதற்கு சமமாக மேடையை கையாள்வதில் ஏற்பட்ட , புரியாமை , தொய்வு , அலட்சியம் , பண்ணையார் மேட்டிமை போன்ற நடத்தையும், நவீன குடிமை சமூகம் அடைந்திருந்த மாற்றத்தையும் காங்கிரஸ் தலைவர்கள் கணிக்க தவறியதும் அவர்களுக்கு அரசியலில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தி இருந்தது .

தியாகத்திற்கு முன்பாக பரப்பியும் மூலம் செய்யப்படுகிற உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் , சாயமிழந்து போகும் என்கிற மிகை நம்பிக்கையும் , காலத்தால் இவை சரி செய்யப்பட்டு விடும் பிழைக் கணக்கும் ஒருகட்டத்தில் பொய்த்து போனது . ஒரு பிரச்சாரத்திற்கு  பின் பிறிதொன்று என கிளம்பி ஒரு மாதத்திற்கு முன்பாக பேசப்பட்டது மறக்கடிக்க பட்டது . முதல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எழவே இல்லது அடுத்த சவாலை சந்திப்பது போன்றவை மரபான அரசியலாளர்களுக்கு திகைப்பை கொடுத்தது  . ஜனநாயக அரசியலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த்தவர்களுக்கு  அதன் வளரும் பரிமாணம் பிடப்படவில்லை . குடிமை சமூகத்தின் மறதி , பல்வேறு முனை ஜனநாயகம் இப்படிபட்ட முரணியக்கத்தால் வளரக்கூடியது என அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. காலமும் பாதையும் , திசையும் புரிதலுக்கு உட்பட்டது . அவை நிகழலுலகில்  பல்வேறு காட்சிகளை வழங்கக் கூடியவைகள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்