https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 13 மே, 2018

அடையாளமாதல் - 334 * உரமாகாத விழுமியங்கள் *

ஶ்ரீ:




பதிவு : 334 / 506 / தேதி :- 13 மே  2018


* உரமாகாத விழுமியங்கள்   *





நெருக்கத்தின் விழைவு ” - 29
விபரீதக் கூட்டு -04.





புதுவை அரசியலின் கடந்த முப்பதாண்டு கால வரலாற்றையும் அதற்கு பின்னல் இருந்த பல அரசியல் நிகழ்வுகளையும் , அது எங்கு பிறழ்ந்து மாற்றுரு கொண்டது என்பதையும் அதை தொடர்ந்து யார் எவ்விதம் முக்கியத்துவம் பெற்றார்கள் , அது புதுவை அரசியலை எங்கு நகர்த்திச் சென்றது  என  நாங்கள்  அறிந்து கொண்டது இவர்கள் வழியாகவே . அவர்களில் பெரும்பாலானவர்கள்  வயோதிகத்தை அடைந்தவர்கள் தங்கள் அரசியல் காலத்தை கசப்புடன் அணுகக்  கூடியவர்களாக இருந்தாலும் , கிடைத்த தகல்களை சரிபார்க்கவும், அவர்களின் மேலதிக தகவல்கள் புதிய திறப்புக்களை கொடுப்பவைகளாக இருந்ததாலும் அவர்களுடனான உரையாடல்கள் எங்களுக்கு சலிப்பை தந்ததில்ல  . 

இதுதான் பின்னாளில் சண்முகத்துக்கு நான் அணுக்கமான போது அவர் எந்த காலத்தை பற்றிய தனது அரசியல் கருத்தை சொன்னாலும் அவற்றின் வேரச் செய்திகள் என்னிடம் முன்னமே இருப்பதை புரிந்துகொள்ள முடிவதுடன் , அவரது மூலமாக அவற்றின்  புதிய திறப்புக்களை , அப்போதைய அரசியல் நிர்பந்ததையும் அறிய முடிந்தது

1981 ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்ததற்கான காரணங்கள் முக்கியமாக  இரு கோணங்களில் விரியக்கூடியவை. சண்முகத்தின் தலைமைக்கு சவால்களாக அவர் எண்ணியது  , பிறதொன்று அவரின் தனிப்பட்ட விழைவு அல்லது தில்லியின் நெருக்கடி . ஆனால் சண்முகத்தின் விழைவிருக்கு பின் இருக்கும் அவரின் நெருக்கடையைத்தான் என்னால் முதன்மையாக பார்க்க முடிகிறது

ஒரு கட்சிக்கு அனுதாபியாக அக்கட்சியில் நுழையும் ஒருவர்  அவரது குணாதிசியங்களை ஒத்தவர்களையே அங்கு சந்திக்க முடியும். காங்கிரஸ் மற்றும் திமுக இரண்டும் வெவ்வேறு  தளத்தை சேரந்தவர்களாக இருப்பதால் அவர்களின் குணாதிசயங்களை வேறுவேறானவைகள். காங்கிரசை சேர்ந்தவர்கள் பாரம்பரிய  பிண்ணனியில் இருந்து எழுந்தார்கள் அவர்களின் வாழகை அற்பணிப்பு மிக்க ஒழுங்கான முறைமையை கொண்டவர்கள், பொருளியல் மற்றும் சமூக அங்கீகாரம் உடையவர்களாகவும் , சுதந்திர போராட்ட காலத்தில் கட்சியில் இணைந்ததால் அவர்களுக்கு தலைமை ,கட்சி, நாடு போன்றவற்றில்  பல விழுமியங்கள் இருந்தது. அவர்களின் அனுக்கமானவர்களுக்கு , அவர்களை அறிவதனாலேயே தலைமை பண்பை பற்றிய ஒரு உருவகம் கிடைத்தது .

பொது மக்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர் காந்தி .  சுதந்திர காலத்திற்கு பிந்தய இந்தியா பலவிதமான கலசல்களை அடைந்துவிட்டநிலையில் , உருவான தலைமுறை வேறுவிதமானவை . திமுகாவின் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு  பல விதமான சமூக நிலைகளிலிலிருந்து கிளைத்து எழுந்தவர்கள் தங்கள் விழைவுகளையே அரசியல் விழுமியங்களாக சொல்லும் தயக்கமற்றவர்களாக , அதுவே இன்றைய அறம் என்கிற நிலைக்கு செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் . இது முற்றும் முரண்பட்ட இரு நிலைகள். இவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை பற்றிய சண்முகத்தின் கனவு தூர்ந்து போனது இயல்பானதே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...