https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 11 மே, 2018

அடையாளமாதல் - 332 * அரசியல் கோட்பாடுகள் *

ஶ்ரீ:
பதிவு : 332 / 504 / தேதி :- 11 மே  2018* அரசியல்  கோட்பாடுகள் *
நெருக்கத்தின் விழைவு ” - 27
விபரீதக் கூட்டு -04.

எந்தவித அடிப்படை ஆதார சக்தியும் அரசியல் பின்புலமும் இல்லாதவர்களின் கூட்டமாக இளைஞர் காங்கிரஸ் இருந்ததால்  செயல்பாட்டிலிருந்து கிடைக்கும் இடைவெளிகளில் தொற்றி தங்களை நிறுவிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்அவர்களுக்கு , இயக்கத்தின் கடந்த கால வரலாறு ஒரு பொக்கீஷம் போன்றது ,நடந்தவைகள் மீளவும் நிகழுக் கூடும் என்பதாலும் , கீழமட்ட அமைப்பின் ஆதரவிலிருந்து மட்டுமே கிளைத்தெழ இயலும் என்பதாலும், அவற்றிலிருந்து அப்போதைக்கு அப்போது அவை சொல்லும் பாடங்கள் என்ன என்பதாக அவர்களின் அறிதல்கள் இருக்கும்

தகவல்கள் அளவற்றவைகள் . அவற்றை நிகழ் அரசியலில் பொறுத்தி புரிந்து கொள்ளாது போனால் ,அவை பிழை பாதைகளையும் , கணக்குகளையும் காட்டக்கூடியவை . அவை நிகழ்ந்த காலத்தில் அவற்றின்  நாயகர்கள்  தவறவிட்டவைகளை சரிசெய்து கொள்ளும் வாய்பினூடாக முயற்சிப்பவர் தன்னை நிறுவிக்கொள்ள முடியும் . அது ஒரு மூட நம்பிக்கையைப் போல இருந்தாலும், சமயத்தில் அவை நிகழத்தான் செய்கிறது. ஆகையால் அது அனைவருக்கும்  எப்போதும் ஒரு கையேடு போல . அவை கோட்டபாடுகளாக சொல்லப்படுபவை. அப்போதைய எங்கள் அரசியல் செயல்பாடு என்பது தொடர்ச்சியான உரையாடல்கள் , உரையாடல்கள் , உரையாடல்கள்  மட்டுமே என்றிருந்தது .

அதிலிருந்து கிளைத்த ஒரு கோட்பாடுஅரசு சூழ்கை சிந்தனை வடிவில்  எத்தனை நுட்பமானதாக இருந்தாலும் , அவற்றின் அடிப்படை முக்கோண சமன்பாட்டிற்குள் வந்தாக வேண்டும் என்பது விதி. எந்த சிக்கலையும் அதில் கொண்டுவந்தது உடைத்துப் பார்த்துவிடலாம்என்றார்முதல் முறையாக இப்படி ஒரு கருத்தை ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் சொன்ன போது , அது வயோதிகத்தால் விளந்ந பைத்தியக்காரத்தனம் என எண்ணியதுண்டுஅது பற்றி பலர் அன்று ஒரே குரலில் சொல்லியும்,என்னால் அதை ஏற்கமுடியாது  போனாலும் . அதை அப்படியே கணிசியதுவைத்திருந்தேன் , அது என்னுடன் வினையாற்றவில்லை. அதற்கு சுமார் பத்து வருடம் கழித்து மிக நுட்பமான விளக்கத்தை சண்முகத்திடமிருந்து அடைந்தேன் .
குபேர் , சண்முகம் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த மோதல்கள் அத்தகைய பரிமாணங்களை கொண்டவை . அரசியல் முரண்பாடுகள் , தலைவர்களுடனான ஆணவத்தை பின்னுக்குத் தள்ளி கடந்து ஒரு பொது நோக்கம் அதில் இருந்தது , அதிலிருந்து தங்களது இலக்கை அடையும் வழியை அவர்கள் கரந்து வைத்திருப்பதைத்தான் ஒரு அழகியல் பார்வை கொண்ட அரசியல் சூழ்தலாக இருக்க முடியும் என இப்போதும் நம்புகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...