https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 4 மே, 2018

அடையாளமாதல் - 326 * பறக்கும் சொற்கள் *


ஶ்ரீ:



பதிவு : 326 / 497 / தேதி :- 04 மே  2018


* பறக்கும் சொற்கள்  *




நெருக்கத்தின் விழைவு ” - 21
விபரீதக் கூட்டு -04.







ஆனந்த பாஸ்கர் என்னுடனான உரையாடலில் முரண்பட்டு பாதியில் எழுந்து சென்றது முதலில் என்னை வருத்தமடைய செய்தது . வயதை மீறிய ஒரு நட்பாக அது இத்தனை நாள் இருந்தது . இனி அவருடன் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற கேள்வியே என்னை திகைக்க செய்தது. எப்படி நடந்து கொள்வது ? பார்த்தும் பாராதது போலவா?. இல்லை , என்னால் அப்படி செய்ய இயலாது , சரி அவர் அப்படி செய்தால் ? நான் செய்வதற்கு ஒன்றில்லை . விலகிவிடுவது எனக்கு மிக இயல்பாக வருவது என நினைத்துக் கொண்டேன் .

அவருக்கு சண்முகத்தின் மீதிருக்கும் காழ்பபை நான் அறிவேன் , அதனால்  அவரைப் பற்றிய விவாதங்களை ஆதரித்தோ எதிர்த்தோ நான் பேசுவதில்லை. காரணம் ஒரு அவர் கருத்திற்கு வந்துவிட்டாரென்றால் முற்றும் மூடிய அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, பின் யாரின் சொற்களையும்  விவாதத்திறகு  எடுத்துக் கொள்ளமாட்டார்  . அதை மீறி அவரே அதை ஒரு விவாதம் போல நிகழ்த்தினாலும் அதில் உள்ளுறைப் பொருள் மாறுவதில்லலை . வெவ்வேறு கோணத்தில் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். பொதுவாக அவர் பிறிதெவருடன் விவாதிக்கையில் நான் அதில் ஊடுபாவுவதில்லை . நான் ஒரு மௌன சாட்சி மட்டுமே

அவர் சொல்லும் நிகழ்வுகளும் , அதன் விளைவுகளும் பிறிதெவரோ அவருக்கு சொன்னதை. அவரை மிகைப்படுத்தி பேசியதை அப்படியே நம்பி அதை அவர் பிரதிபலிப்பதைத் தவிர தனக்கென ஒரு மையக் கருத்தை உருவாக்கிக் கொள்வதில்லை . அதை தனது கோணமாக சொல்லிச் சொல்லி நன்கு மெருகேற்றி , அதைத் தனது முன்முடிவுகளால் நன்கு  அடுக்கப்பட்டதாக மாற்றிக் கொள்வார். ஆனால் ஒரு வலுவான எதிர்க் கேள்வியை அவர் தன்னை தானே கேட்டுக்கொண்டார் என்றால்  , அவரது தர்க்கம்  அனைத்தும் நொடியில் சரிந்து போவதை , அவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்

அவருடன் விவாதித்த பலரும் அவரது சுபாவத்திற்கு அஞ்சி அவரது கூற்றை ஏற்றுக்கொள்வதாக நடித்து விலகினாலும்அதை ஒரு இளிவரலாக பிறரிடத்தில் பேசி நகைப்பதை நான் பார்த்திருக்கிறேன் . அரசியல் என்பது யாருடன் முரண்படாத பேச்சும் நடிப்புமாக எல்லாரும்  பேணப்படுவது. அதை நான் எப்போதும் வெறுத்திருக்கிறேன் . நானும் ஆனந்த பாஸ்கரும் பொதுவான விஷயங்களில்  உரையாடிக் கொண்டிருக்கையில் அவர் திடீரென எல்லோரிடமும் சொல்லும் வார்த்தை பிசகாத அதே கூற்றை என்னிடமும் வைப்பர் என நான் எதிர் நோக்கவில்லை

பலநாட்கள் அவரை பற்றிய எண்ணங்கள் , அவர் உண்மை என நம்பும் பல அத்தகையது அல்ல , எல்லா பெரிய மனிதர்களை சுற்றி நிற்கும் கூட்டம். அது எந்தளவு ஒருவரை பாதிக்க முடியும் என நான் வியந்ததை அவரிடம் சொல்ல வேண்டும் என விழைந்தேன் . அவை என் தலைக்குள் எப்போதும் ஒயாது முயங்கிக் கொண்டிருந்தவைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்