https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 மே, 2018

அடையாளமழித்தல் - 11

ஶ்ரீ:


பதிவு : 524 / தேதி :- 31 மே  2018





இயல்பு ஒரு தனித்திறனல்ல .






"செயலாற்றுவது மனிதனின் அடிப்படை இயல்பு. எது தன்னுடைய இயல்புக்கு ஏற்றதோ, எதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியுமோ அதில் முழுமூச்சாகச் செயலாற்றுவதே ஒருவனின் கடமை. அவனுடைய நிறைவும் மகிழ்வும் அங்குமட்டுமே உள்ளது. அதையே கீதை தன்னறம் என்கிறது

அந்தத் தன்னறத்தை ஆற்றக்கூடியவன் முதல்கட்டத்தில் உலகியல்சார்ந்த நன்மைகளை அடைகிறான். இன்பம் புகழ் செல்வம் அனைத்தையும். அதை கீதை சாங்கிய யோகம் என்கிறது. அந்தச் செயலில் அவன் மூழ்கிச்சென்றான் என்றால் அச்செயல் அளிக்கும் நிறைவே அவனுக்குப்போதுமானதாக இருக்கிறது.அதை கீதை கர்மயோகம் என்கிறது. அச்செயல்வழியாகவே அவன் இப்பிரபஞ்சத்தை அறியமுடியும். அதுவே ஞானயோகம். அது அவனை முழுமையாகவே விடுவிக்கும். என கீதை விளக்கிச்சொல்கிறது

கீதை ஒரு தருணத்திலும் செயலாற்றாமலிருப்பதை முன்வைக்கவில்லை. மாறாக செயலாற்று செயலாற்று என்று மீண்டும் மீண்டும் அறைகூவுகிறது. மிகச்சிறந்த செயலை ஆற்றுவதெப்படி என்று மட்டுமே அது பேசுகிறது என்கிறார் ஜெயமோகன் .

தியானத்தை தைலதாரை என எண்ணை ஒழுக்கைப்போல சொல்லுவது  மனநிலையை அதே போல் சொல்லுகிறதா? எனத் தெரியவில்லை . ஆனால் இன்றைய லௌகீக உலகில் அத்தகைய நிலை சில நிமிடங்கள் நீடித்தாலே அது புடவியின் நியதி அவனுக்கு வழங்கி விட்டது என்றே நினைக்கிறேன். வேத வியாசர் அழைக்கையில் தன்னிலை மறந்து சென்ற சுகப்பிரம்மத்தை பற்றி பேசும் ஶ்ரீமத் பாகவதம் , அவர் பரிக்ஷித்தை வார்த்தைக்கு வார்த்தை ராஜன்னு , ராஜன்னு என விளிப்பதை பார்க்க முடிகிறது . எனவே மனதை ஒருமுகப்படுத்தல் லௌகீகனுக்கு க்ஷண நேரம் நீடித்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன் . ஒரு ஒழுக்குற்கு தன்னை ஒப்பு கொடுத்தவனை அந்த ஒழுக்கே பயணிக்க வைப்பது போல வாழ்கை மட்டுமல்ல மரணமும் இனிதே. ஜெயமோகன் சொல்லும் விடுதலை அளிக்கும் ஞானயோகம் இன்றைய நவீன உலகில் இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

எனது அனைத்து பயணங்களும் முழுவதும் திட்டமிடப்பட்டவைகளாகவே இத்தனை காலமும் இருந்தது . பயணத்தின் அறிதலை வேடிக்கையை நான் முழுமையாக உணர இயலாமல் போனதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம் . இப்பொழுதும்  என்னால் ஒரு முழு திட்டமில்லா பயணம் பற்றி யோசிக்க முடியவில்லை , நான் என்னை களைந்து கொள்ளும் முயற்சியைஅடையாளமழித்தல்என துவங்கி பதிவு செய்தபடி இருந்தேன் . அடையாளமாதலும் , இதுவும் இரண்டும் இணைகோடுகள் போல ஒன்றின் பிறிதொன்றாக இருந்தது . “அடையாளமாதல்முடியும் பொது இதை முழுவதுமாக தொகுத்துக்களோள்ளலாம் என்றிருந்தேன். செல்வராணியின் லடாக் பயணம் ஒரு சலனத்தை உருவாக்கி விட்டது. என்னுடையஅறிய நிகழ்வும் வெறுமையும்பதிவு கூடஅடையாளமழித்தலின்தொடர்ச்சியேஒரு குறிப்பிட்ட விஷயத்தை தொகுக்க அதை தனியாக பதிந்தேன்

வாழ்க்கையை முதலிலிருந்து துவக்குவது போல ஒன்று, பலருக்கு ஒரு தவிர்க்க இயலாத கணத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஆனால் எனன்னுடைய வாழ்வியல் அனுபவங்கள் எனக்கு வெவ்வேறு விதமான துவங்குதலை தொடர்ந்து ஏற்படுத்தி இருந்தது , சில வற்றில் நான் முற்றும் முரணபட்ட போதும் கூட யாராவது அதை தொடங்கி என்னிடம் கொண்டு விட்ட நிகழ்வினை இப்போது நினைத்துப் பார்ககிறேன் . ஒன்றை மறுபடியும் முதலில்  இருந்து துவங்குவது , என்பது  மறு வாய்ப்பாக பார்க்கின்ற போது, அது ஒரு வரம் போல தோன்றினாலும் அது அப்படித்தானா என்கிற கேள்வியும்  எழுகிறது .  
வாழ்க்கை முறையை முற்றாக மாற்றிக்கொள்ள நேரிடும் ஒரு காலம் எழுந்தபோது அதை எப்படி பகுத்துக்கொள்வது என்கிற புரியாமையும் சேர்ந்தே எழுந்தது  .

தன்னை பகுத்துக் கொள்வது ஓர் அரிய திறன் அல்ல. நாம் அனைவருமே செய்வதுதான். இதைச் செய்ய பழகிக்கொள்ளவேண்டும், அவ்வளவே. எண்ணிப்பாருங்கள் எந்தப் பெருஞ்சோகத்திலும் மனிதர்கள் உண்கிறார்கள், நீர் அருந்துகிறார்கள், தெரிந்தவரை வரவேற்கிறார்கள், அன்றாடம் என ஒன்றை பகுத்துக்கொண்டுதான் அனைவரும் வாழ்கிறார்கள். அப்பாலிருப்பதையும் அவ்வாறே பகுத்துக்கொள்ள முடியும் என்கிறார் ஜெயமோகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்