https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 மே, 2018

அடையாளமாதல் - 331 * அரசு சூழ்தல் *


ஶ்ரீ:




பதிவு : 331 / 503 / தேதி :- 10 மே  2018

* அரசு சூழ்தல்  *


நெருக்கத்தின் விழைவு ” - 26
விபரீதக் கூட்டு -04.






கூட்டணி மந்திரிசபை பற்றிய சண்முகத்தின் கணக்கு தேர்தலுக்கு முன்பாகவே கையை மீறி இருந்தது . காங்கிரஸ் கடந்த மூன்று தேதர்தலில் சந்தித்த தோல்வி அதை கூட்டணி கட்சியுடன் சீட்டுக்கு பேரம்பேசும் நிலையில் வைத்திருக்கவில்லைதனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி ஆமைக்கக் கூடிய நிலையில் கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெறும் சூழலில் அப்போது அது இல்லை என்பது முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்

காங்கிரஸ் மத்தியில் ஜனதா அரசின் வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டு வளர்த்துக்கொண்டு தில்லியிலும் , புதுவை மாநிலத்தில் ஆளுநர் மூலம் அதிகாரம் பெற்றிருந்த போது , அதே கட்சியை சேர்ந்த   சண்முகத்தற்கு பிறிதேதோ ஒரு சமன்பாடு குலைவால்ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற முடிவின் எல்லைக்கு சென்றார். சொந்தக் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடைசீவரை தெரியாது என்கிற ஒரு மாயமான சூழலில் அது நடந்தேரியது . என்ன மாதிரியான காரணம் சொல்லி சண்முகத்தால் அதற்கு தில்லியின்  ஒப்புதல் பெற்றார்  என்பதை , பின்னொருநாள் அவர் சொன்ன கோணத்தை பிறிதொரு பதிவில் பார்ப்போம் அரசு சூழ்தலின் உச்சம் அது எனநாங்கள் , நினைத்ததுண்டு . "இயல்பில்லாத ஒன்றின் இயல்பு அது என நம்பவைப்பது " என்பார் சண்முகம் . "சிறுத்தையின் சிரிப்பை" போல .

இந்தப்பதிவு அப்போது நிலவிய விசித்திர சூழலை பற்றியும், சண்முகத்தின் போதாமை குறித்தும் எங்களிடம் பரவலாக இருந்த கருத்துக்கள் முற்றாக உண்மையில்லை என ஒதுக்குவதற்கில்லை. அப்போதுஅரசியல் கற்றலைநோக்கிய  மாணவர்களின் ஆர்வம் எங்களுக்கு மிகுந்திருந்த  காலம் . மாநில அரசியல் களதில் வலுவாக இளைஞர் காங்கிரஸ் வேரூன்ற முயற்சித்துக் கொண்டிருந்தது . சில குறிப்பிடத்தக்க  வெற்றிகளை அப்போது அது அடைந்திருந்தது . இளைஞர் காங்கிரசின் தலவராக கண்ணன் பெரும் தொண்டர்பலத்தின் பிண்ணியில் தனக்கும் சீட்டு கேட்டு ஏமாற்றப்பட்ட நிகழ்வுகளும் அப்போது நடந்தேறி இருந்தது

அன்றைய இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நகர் புற இளைஞர்களின் தேவை வேறுவிதமானவைகள் , நாங்கள் அவற்றை கடந்து கிராமப்புறங்களில் உள்ள மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் , தலைவர்கள் போன்றவர்களுடன் மிக அணுக்கமாக இருக்கும் வாய்ப்பை அப்போதுதான் நாங்கள் அடைந்தோம் . அவர்களில் பலர் சுதந்திர போராட்ட காலத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ,சிலர் அரசியல் களமாடலில் நழுவி விழுந்தவர்கள், , மூன்றாவது தரப்பு  குபேர் ,  சண்முகம் அரசியலில் நிலை எடுக்க முடியாது வெறுத்து ஒதுங்கியவர்கள் , நாங்கள் மூன்றாவது தரப்பை சேந்தவர்களைத்தான் பெரிதும் சார்ந்திருந்தோம் . கற்றுக்கொள்ள அவர்களிடம்தான் எங்களுக்கான  பாடங்கள் இருந்தன .  அரசியலில் எனக்கான வாய்ப்பு கிடைத்த போது அமைப்பு  நான்  ரீதியாக எடுத்த சில பல முயற்சிகளுக்கும் அவற்றின் பெரிய வெற்றிகளுக்கும்  இவர்கள்தான் பின்புலமாய் இருந்தார்கள் . அதனாலேயே சண்முகம் எங்களையும் ஒரு தரப்பாக அங்கீகரித்தது அதன் பிறகுதான் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்