https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 25 மே, 2018

அடையாளமாதல் - 343 * சார்புகாட்டுமானம் *

ஶ்ரீ:




பதிவு : 343 / 520 / தேதி :- 25 மே  2018

* சார்புகாட்டுமானம் *


நெருக்கத்தின் விழைவு ” - 37
விபரீதக் கூட்டு -04.






மரைகாயரால் தேர்தல் நேரத்தில் கைவிடப்பட்டு பொங்கி எழுந்த உளவெழுச்சியால் அவரிடமிருந்து விலகிய ஆனந்த பாஸ்கரன் , ஊழின் இயல்பால் சண்முகத்தை நாடி அவரிடம் சென்று அமைந்தும் , இது அவருக்கான இடமல்ல என அவருள் ஒன்று தொடர்ந்து எழுந்தபடி இருப்பதை வெளிப்படுத்தாமல் அமைய அவரால்  இயலுவதில்லை.
அவரிடம் சொல்ல விரும்புவது இந்த காழ்ப்பைப் பற்றித்தான் . அது அவருக்கு அரசியல் ரீதியாக நன்மை தர தக்கதல்ல. பெற்ற தகப்பனை தவிர யாரும் யாருக்கும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லது ஒரு காரியத்தை செய்ய மாட்டார்கள்  . யார் யாருக்கு எதை செய்த்தாலும் அதில் ஒரு கணக்கு இருக்கும் என்றேன்

அவர் என்னிடம்இப்போது என்னை தேடிவந்ததற்கு பின்னால் உனக்குள்ள கணக்கு என்ன?” என்றார் . இதுதான் அவரது பாணி . நான்உங்கள் அளவிற்கு அரசியல் அந்தஸ்த்தை உள்ளவர்கள் என்னிடம் இந்தளவு நெருக்கம் காட்டியதில்லை. அல்லது என்னால் அதைபோன்றவர்களிடம் நெருங்க இயலவில்லை , என ஏதோ ஒன்று . கிடைத்ததை இழக்க வேண்டாம் என்பதை தவிர உங்களைவைத்து எனக்கு எந்த அரசியல் கணக்கும் இல்லை . மேலும் அதைப்போல ஒன்றை உங்களுடன் உருவாக்கி கொள்வது எவ்வளவு ஆபத்தானது என நானும் அறிவேன்என்றேன் . அவர் சிரித்துக்கொண்டார்

நிலைமை சற்று சீர்பட்டது . மெல்ல நங்கள் சகஜ நிலைக்கு வந்தோம் . அன்று இரவு அவருடன் அங்கேயே எனது இரவுணவை முடித்துக்கொண்டு வீடு திரும்ப நடுநிசியாகியிருந்தது . அந்த நிகழ்விற்கு பிறகு அவருடனான நட்பு பிறிதொரு தளத்தை அடைந்திருந்தது , அவரும் கிளம்பும் முன்பாக அதையே சொன்னார் . அந்த முரணும் அவருடனான புதிய நெருக்கத்திற்கு வழிசெய்தது . அதன் பின்னர் நிகழ்ந்த பல உரையாடல்கள் எங்களுக்கு புதிய இணக்கத்தை கொண்டுவந்ததுடன் அவரது குடும்பம் சார்ந்த சிக்கலை கூட என்னிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு அது மலந்திருந்தது . எனக்கு அரசியல் ரீதியான நெருக்கடியின் போதெல்லாம் ஆனந்தபாஸ்கரனின் உதவி கேட்காமலேயே கிடைத்து விடும்

மிக நுட்பமாக புரிந்து கொள்ளக் கூடியவர்கள் நம்மை கவனிக்கும்  போது நமது சிந்தனை இயல்பாகவே கூர்கொண்டு விடுகின்றன . இயல்பாக பேசிக்கடக்கும் பல விஷயங்களை சொன்ன பிறகு அப்படி ஒரு போக்கை எப்படி கணித்தோம் என வியந்ததுண்டு. வெகு சிலர் மட்டுமே நம்மை நமது ஆழம் நோக்கி செலுத்துகிறார்கள் . அவர்களுடன் உரையாடுவதற்காகவே  நம்மை தயார் செய்து கொள்வதும் மகிழ்வளிப்பதே .


செய்திகளைக் கொண்டு எழுப்பப்படுகிற யூகங்கள் கட்டுமானங்களைப் போன்றவைகள் , அவை நிலையான ஒன்றை கட்டி எழுப்புவதற்கு உதவிடும் , அதுவே எப்போதும் நிரந்தரமாக நிற்பதில்லை .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்