https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 20 மே, 2018

அடையாளமாதல் - 340 * பொருந்தாமை *

ஶ்ரீ:





பதிவு : 340 / 513 / தேதி :- 19 மே  2018


* பொருந்தாமை  *




நெருக்கத்தின் விழைவு ” - 34
விபரீதக் கூட்டு -04.






அரசியலில் விருப்பமற்று இருந்த வைத்தியலிங்கம் சண்முகம் தரப்பில் கொடுக்கபட்ட அழுத்தம் அதிகரித்ததும் திடீரென ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் காணாமலானார் . தேர்தல் வேட்பு மனு இறுதி நாளில் பழனிக்கு அருகில் ஏதோ ஒரு ஊரில் அவரை கண்டடைந்தவர்கள், புதுவைக்கு கொண்டுவந்து தேர்தலில் நிற்க வைத்தனர்  . மடுகரை வண்ணியர் சூழ்ந்த பகுதி , வைத்திலிங்கம் சிறுபான்மை  ரெட்டியார் பிரிவை சேர்ந்தவர், பெருநிலவுடமை சமுதாயத்தை பின்புலமாக கொண்டவர்  . அவருக்குள்ள பலம் அவர் தந்தை வெங்கடசுப்பா ரெட்டியாரின் சுதந்திரப் போராட்டத் தியாகம் . முன்னாள் முதல்வரின் புதல்வர் என்கிற அடையாளம்.

பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சுப்ராய கவுண்டர் திமுக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற , முதல் முறையாக தேர்தலில்  நிற்க மறுத்த வைத்திலிங்கம் எதிர்பாராத விதமாக  தோல்வியடைந்தார்.சொந்த தொகுதியில் தேர்தலில் அடைந்த தோல்வி அவரை உசுப்பி விட 1985 தேர்தலில் அவர் மறுமுறை நின்று வெற்றி பெற்று சட்டமன்ற நுழைந்தது மட்டுமின்றி , அந்த அமைச்சரவையில்  அமைச்சரும் ஆனார் என்பது இந்த பதிவின் பிறிதொரு கோணம் . புதுவை சுதந்திர போராட்டத்தில் வெங்கடசுப்ப ரெட்டியிரின் புகழால் அவரது மகன் மீளவும் அந்த தொகுதியில் நிற்பதாக முடிவெடுத்த பிறகு சண்முகம் அவருக்கு மடுகரையை ஒதுக்க வேண்டி நேர்ந்தது .

தன்னை தோற்கடித்த சுப்ராய கவுண்டருடன் சண்முகத்தின் அரசியல் உறவும், அவரை சார்ந்து நிகழ்ந்த 1983 ஆட்சி கலைப்பு நடவடிக்கைகளும்  வைத்திலிங்கத்திற்கு , அரசியலின் பல பரிமாணங்களை பற்றி  புரிதலை கொடுத்திருக்க வேண்டும் . வைத்திலிங்கத்தின் பொருட்டு  மடுகரைக்கு மறுபடியும் சீட்டு கேட்ட சுப்ராய கவுண்டருக்கு , சிக்கலின் தீவிரம் புரியாது என்பதால் அவர் கடைசி நிமிடத்தில் வில்லியனூர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வில்லியனூரில் காங்கிரஸ் சார்பாக நிற்க விரும்பிய ஆனந்த பாஸ்கரனின் விருப்பம் மறுதளிக்கப்பட்டது இந்த சூழலில்தான் . இத்தனை அடிப்படை காரணங்களுக்காக  ஆனந்த பாஸ்கரன் வில்லியனூரில் தேர்தலை சந்திக்கும் வாய்ப்பை இழந்தார் . இது வெறும் சண்முகம் மரைக்காயர் முரண் மட்டுமே பிண்ணி என அவர் நம்புவது சரியானதல்ல என்பது எனது வாதமாக இருந்தது.

என்னுடன் முரண்பட்டு பாதி உரையாடலில் எழுந்து சென்றுவிட்ட ஆனந்த பாஸ்கரனின் நினைவு மாறி மாறி எழுந்த வண்ணம் இருந்தது . சரி இதை விட்டு உன் வேலையைப்பார் என்று ஒன்றும் , இல்லை இதுபற்றி ஆரம்பிக்கும் முன்பு யோசித்திருக்க வேண்டும் . அவரது ஆணவம் சீண்டப்பட்டதால் அவர் அப்படி நடந்து கொண்டார். அது ஒரு கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே என்றது பிறிதொன்று . இரண்டின் மத்தியில் அன்று முழுவதுமாக இருந்து கொண்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்