https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 12 மே, 2018

அடையாளமாதல் - 333 * வேடிக்கை அரசியல் *


ஶ்ரீ:


பதிவு : 333 / 505 / தேதி :- 12 மே  2018* வேடிக்கை அரசியல்  *


நெருக்கத்தின் விழைவு ” - 28
விபரீதக் கூட்டு -04.


குபேர் சண்முகம் மோதல் தங்களை நிறுவிக்கொள்ளும் இருவருக்குமான முரணாகக்கூட  அது பார்ககப்படவில்லை. குபேருக்கு முன் அன்று சண்முகம் ஒரு ஆளுமையே அல்ல. அது ஒரு ராஜாவிற்கு முன்னே விதூஷகனின் கோமாளி விளையாட்டைப் போல அன்று அனைவராலும் பார்க்கப்பட்டிருக்கலாம் . ஆனால் சண்முகம் குபேரின் அடித்தளத்தை ஒரு சிற்றுளியாய் சிதைத்துக் கொண்டிருந்தார் என் பதை ஒருவரும் அறியவில்லை. குபேர் சண்முகம் மோதல் புதுவை சுதந்திர போராட்ட வரலாறு   பின்புலம் கொண்டாது  . அது புதுவை சுதந்திர போராட்டத்தை பிறிதொரு கோணத்திற்கு கொண்டு செல்வது . அதை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்

அன்று செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய குபேரரை எதிர்த்து காரைக்கால் நெடுக்காட்டு சண்முகம் என்ன செய்துவிட முடியும் என்கிற பார்வை அனைவருக்கும் இருந்தது. அறம் ஒருவரின் சுபாவத்தில் இல்லை என்பது . அது கொந்தளிப்பாக சில இடத்தில காணப்பட்டாலும் அதற்கு  வெகுஜன ஆதரவு ஒருபோதும் காலத்தில் கிடைப்பதில்லை . அவர்கள் வெற்றிபெறும் கூட்டத்தை நோக்கியே எப்போதும் பயணப்படுபவர்கள் . அந்த நிலை சக்தி ஒரு கட்டத்தில் குலையும் போது , அதற்கு எதிர் நிலை எடுத்த அணியுடன் சென்று இணைந்து கொள்வார்கள் , ஆனால் இதில் அப்படி ஒரு நிலையை தீவிர அரசியலில் இருந்தவர்களால் எடுக்க முடியாது போனது . காரணம் சண்முகம் மிக எளிய மனிதர் . அவருடன் மோதி குபேர விழுந்ததாக யாரும் நம்பவில்லை . அவருடைய வீழ்ச்சியை ஒரு இடறல் என்றும் அவர் அதிலிருந்து மீண்டெழுவர் என நம்பிய அமைப்பு இறுதிவரை அவருடன் தங்கிவிட்டது

சண்முகத்தின் பின்புலம் வேறு மாதிரியானவைகள் . அன்றைய காங்கிரஸ் அரசியலில் இருந்தவரகளால் அவரை கணிக்க முடியாதது வியப்பில்லை . சில ஆண்டுகளுக்குள்ளாக சண்முகம் கட்சி அரசியல் மற்றும் அரசிலும் தனது இடத்தை பெற்று விட்டார் . குபேர்  ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இருந்து விலகி திமுக சென்று இணைந்தது விட்டார். அவரது ஆதரவாளர்களுக்கு  அது பேரதிர்ச்சியாக இருந்தது . அவர்களின் தவறான கணக்கிடல் , எடுத்த முடிவிலிருந்து மாறுபட்டு திரும்பவும் சண்முகத்தை சென்று சந்திக்கும் வாய்ப்பை அவர்கள் சுய கௌரவம் ஏற்கவில்லை. அவர்கள்  முற்றாக வெளியேறி தங்களின் அரசியலை  முடித்துக்கொண்டார்கள் . ஆனால் அரசியல் ஆர்வம் விலகததால் நோக்கர்போல எப்போதும் நிகழ் அரசிலிலிருந்து புதிய புரிதல்களை தங்களுக்குள் பேசிக்கொள்வதை தாண்டி அவர்களை தங்களை வெளிக்கொணர விரும்பவில்லை

நாங்கள் இவர்களை கண்டடைந்து தற்செயலானது . அது பின்னர் என்னுடை செயல்பாடுகளில்    பெரிய திருப்புமுனையானது .சரியாக அவதானிக்கஇயலாமையால் அரசியலில் நிலை எடுக்க முடியாது வெறுத்து ஒதுங்கியவர்கள்  , நாங்கள்  பின்னாளில் இவர்களைத்தான் பெரிதும் சார்ந்திருந்தோம் . நான் எனக்கான வாய்ப்பு கிடைத்த போது அரசியல் ரீதியாக எடுத்த சில பல முயற்சிகளுக்கும் அவற்றின் பெரிய வெற்றிக்கும்  இவர்கள்தான் பின்புலமாய் இருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக