https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 30 மே, 2018

அடையாளமழித்தல் - 10 செல்வராணி லடாக் பயணம்

ஶ்ரீ:


பதிவு : 523 / தேதி :- 30 மே  2018


அடையாளமழித்தல் -  10


செல்வராணி லடாக் பயணம் 




வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தலும் சில மட்டுமே ஒரு விதைபோல மனதில் விழுந்து சில காலம் கழித்து வளர்ந்து பெருகுவதை அறிந்து கொள்ள முடிகிறது . எனக்குசெல்வராணிபற்றி அப்படித்தான் நினைக்க தோன்றியது. வாழ்கை முழுவதும் ஒரு தொடர்ச்சி அல்லது ஒழுங்கிற்கு உட்பட்டது என்றும் அது அப்படி அல்ல என்று பிறிதொன்றும் விவாதித்தபடி இருக்கநான் எனது பாதையில் பயணப்பட்ட படி இருக்கிறேன்.

உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்ட போது

அப்படி எதுவும் சொல்ல முடியாது. இந்த கேள்வியே எனக்கு அபத்தமாக படுகிறது. பயணத்தின் நோக்கம் பயணிப்பது மட்டுமே. அது உள்ளிருக்கும் ஒரு அனல். பயணவிரும்பி அல்லாத ஒருவரை நீங்கள் வெளியிலிருந்து ஊக்குவிப்பதன் மூலம் பயணிக்க வைக்க முடியாது. இதில் பயணம் சார்ந்த காணொளிகளோ புத்தகங்களோகூட ஒருவரை மாற்றிவிட முடியாது. தானாகவே உள்ளார்ந்த ஆர்வம் இருக்க வேண்டும்”. என்றார் செல்வராணி

ஏதோ ஒரு வகையில் இது என்னை இந்தப்பதிவை எழுத வைத்தது.லடாக் செல்ல விழைந்து மணாலி வரை சென்று திரும்பிய செல்வராணி கட்டுரை (பேட்டி) படிக்கும் முன்புவரை அதைப்பற்றி எனது எண்ணத்தை பதிவு செய்ய வேண்டி இருக்கும் என நான் நிச்சயமாக நினைக்கவில்லை . அவரை புதுவை வெண்முரசு கூடுகை ஓராண்டு நிறைவு நாளுக்கு ஜெயமோகன் வந்த போது சந்தித்தேன். அப்போது ஜெயமோகனின்  வழக்கமான ஜமா ஒன்றை எதிர்நோக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைத்தது . சிவாத்மாவாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் . வழமையாக அனைத்தையும் திட்டமிட்டபடி நிகழ்ந்த வேண்டும் என முயன்ற போது சிவாத்மா நாளுக்கு நான்கு அலைபேசி மூலம் நிறைவு விழாவிற்கு யாராரெல்லாம் வரக்கூடும் என சொல்லி கிலியேற்படுத்தியபடி இருந்தார் , வருபவர்களின் எண்ணக்கை கடைசீவரை ஒரு முடிவிற்கு வரவில்லை . சிவாவின் நட்பை பேணும் பாங்கு என்னைஉறையவைத்ததுஎன்றே சொல்ல வேண்டும்.

நிகழ்வு மிக நிறைவாக நடந்தேறியதற்கு மறுநாள் , அனைவரும் தங்கியிருந்த விடுதியின் காலை சிற்றுண்டி அறையில் குழுமி இருந்தனர் . ஜெ சுற்றும் நண்பர்கள் கூடி அரட்டையில் இருக்க , நான் அதை மௌனமாக ரசித்துக்கொண்டிருந்த போதுதான் , எனது டேபிளில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரை பார்த்தேன். தன்னை செல்வராணி என அறிமுகம் செய்து கொண்டார். முதல்முறையாக அறிமுகமாகும் ஒருவரிடம் பொதுவில் உரையாடும் சாமர்த்தியம் எனக்கு இல்லாததால் , நான் எதையும் முதலில் துவக்குவது இல்லை . ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் என்கிற முறையில் , நீங்கள் சாப்பிட்டீர்களா? என்றதற்கு, தான்சாப்பிடுவதில்லைஎன்றார். இந்த பதில் எனக்கு சரியாக புரியவில்லை , சாப்பிடவில்லை என்பதுதான் அப்படி கேட்கிறதோ என நினைத்தேன் , ஆனால் அவர் பேலியோ டயட் எடுப்பதாக சொன்னவுடன்  நீண்ட நாட்களாக அது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் உரையாடத் துவங்கினேன். காரணம்ஒத்திசைவு ராமசாமிஅதன் மீது எனக்கொரு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தார் . செலவராணி விரிவாக தயக்கமற பேசினார் . பின்னர் அவரை பற்றி நாங்கள் பேசிக்கொண்டது மெலட்டூர் சென்றபோதுதான்.

கம்பன்விழா அழைப்பிதழை நேரடியாக ஜெயமோகனிடம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத் போது , முதலில் சென்னை , அது முடியாமல் போக நாகர்கோவிலுக்கு செல்வதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்த போதுதான் கடலூர் சீணு ஜெயமோகன் மெலட்டூர் வருவதை பற்றி சொன்னார் . பாகவத மேளா பற்றி நான் அறிந்து கொண்டது அப்போதுதான் . மெலட்டூர் பயணமான போது என்னுடன் தனது சீன பயணத்தை முடித்து வந்திருந்த சிவாத்மா , கடலூர் சீணு, மணிமாறன் இணைந்து கொண்டனர். மயிலாடுதுறை பிரபு அங்கு வந்து இணைவதாக சொன்னார் . பயணத்தின் போது  செலவராணி லடாக் பயணம் பற்றி  சிவா சொன்னார் . எனக்குள் ஒரு திகைப்பு எழுந்தது. தனித்து வடஇந்திய பயணம் என்பது என்னால் யோசிக்க இயலாததாக இருந்தது. மயிலாடுதுறை பிரபுவின் தனித்த கங்கை பயணம் எனக்கு கொடுத்த கனவை இது சிதறடிப்பதாக இருந்தது. அது சாகசம்மல்ல விளைவால் உந்தப்பட்டு நிகழ்வது என்கிற புரிதலை அடைந்தேன்.

பயணம் பற்றிய கனவு என்னுள் எப்போதும் நிலை கொண்டிருந்தாலும் அது அகவயமான ஒரு இலக்கை பற்றியதாகவே எப்போதும் இருந்தது. எனது வழமையை உதறி முற்றும் எந்த ஏற்பாடுமில்லாது சென்றது மெலட்டூருக்குதான் . நண்பர் ராகவ் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு . பாரம்பரியமான வீடும் உபசாரமும் மறக்க முடியாத நினைவுகளை மனதில் விதைத்து சென்றது. மெல்ல மெல்ல எனது வாழ்கை முறையை மாற்றத் துவங்கியிருந்த போது இது நிகழ்ந்தது. முதல் நாள் இரவு செலவேந்திரனின் அரட்டை அமைதியாய் இருந்தேன் . மறுநாள் காலை ஜெ வுடன் பேச்சி உணவு என அற்புதமாய் சென்றது . கம்பன் விழா அழைப்பிதழை நேரில் வழங்கினோம் . அரட்டையின் மத்தியில் மீளவும் செல்வராணி பற்றி பேச்சி எழுந்தது . அதுபற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க இயலவில்லை.

கடந்து சென்ற காலத்தில் நிகழ்ந்தவைகளிலிருந்து முன்று கருத்தை நுண்சொல் போல பெற்றுக்கொண்டேன். வாழ்கையை முற்றும் வேறு ஒரு இடத்திலிருந்து தொடங்க என்னை தொகுத்துக் கொள்ள அது எனக்கு பெரிதும் உதவியது . எழத்து எனது உளக்கொதிப்பிளிருந்தும் நிலையழித்தலிலிருந்தும் மீட்டெடுக் கூடியது என்கிற புரிதலை அடைந்த பிறகு என்னை பற்றி அவதானிக்க தொடர்ந்து நான் எழுத துவங்கினேன். இது எனது சுய சரிதையல்ல . என்னுடன் எனக்கான உரையாடல் மட்டுமே . நான் பயணம் பற்றிய தீவிர எண்ணத்தில் இருந்த போதுதான் செல்வராணியின் அந்த பதில் ஒரு உளத்தூண்டலை எனக்கு கொடுத்தது. நான் எனக்கான உளத்தூண்டலை ஜெயமோகனின் எழுத்துக்களில் பெற்றுக் கொண்டிருந்தேன்

மனித மனம் புரிந்து கொள்ள முடியாத பல அடுக்குகளை கொண்டது . அவற்றில் சிலதில் கூட நான் நுழைய முயற்சிக்கவில்லை என்கிற திடுக்கிடலை உணர்ந்த போதுதான் . என்னைப்பற்றிய அவதானிப்பில் துவங்கினேன். என்னை என் அனுபவங்களை இரண்டு அலகுகளாக பிரித்துக்கொண்டேன் , ஒன்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள நான் பயணப்பட்ட பாதைகள் பலவாக இருந்தாலும் அவற்றில் அரசியல் பெரிய இடத்தை பிடித்துகொண்டது , அது எனது அனுபவத்திலிருந்த நான் அடைந்த புரிதல்களையும் அவற்றுன் வழியாக என்னை இன்னும் அணுகி புரிந்துகொள்ள முயலும் ஒன்றாக பார்க்கிறேன்

கனவுகள் களைந்ததைப் போல வாழ்கை வெறுமையின் ஒரு புள்ளியில் வந்து நின்றபோது , நான் எப்படி மீண்டேன் என என்னை அவதானித்தபோது , எனது இயல்பாக சில போக்கை நான் அறிந்ததை விட எனது ஆழ்மனம் அறிந்திருப்பதை உணரமுடிந்தது . எனது அனுபவத்தின் மூலம் அடைந்ததை மீளவும் தொகுத்துக்கொள்ளுவதன் மூலம் எனக்கான மெய்மையை அடைய முயன்றபடி இருக்கிறேன். எனது பயணம் எப்போதும் அகவயமான இருந்து கொண்டிருந்ததால் நான் புறவயமான பயணத்தை பெரிதும் விரும்பியிருக்க வேண்டும்  . ஆனால் எனது பயணம் நான் விழைந்த உகப்பை கொடுக்க முடியாது போனாலும் , பயணம் என்னை ஓரளவிறகு மீட்டது. எனது வழமையான பயணமுறையை மாற்றுவது பற்றி நீண்ட நாட்கள் யோசித்தபடி இருந்தபோது மயிலாடுதுறை பிரபுவின் கங்கை ஏற்படுத்திய தாக்கத்தை ஒன்றுமில்லாதபடி செய்து விட்டது செல்வராணியின் பயணம். அவருக்கு எனது வாழ்த்துக்கள் . அதைப்போல தனித்து என்னால் பயணிக்க முடியாது , உற்ற நண்பர்களுடன் அதை முயன்று பார்ப்பது என்கிற முடிவிற்கு வந்திருக்கிறேன் . பார்ப்போம் எவ்வளவு தூரத்திற்கு அது செல்கிறது என்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்