https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 அக்டோபர், 2016

தந்தையின் முதல் தொடுல் -2

ஶ்ரீ:
தந்தையின் முதல் தொடுல் -2



இரண்டு நாள் கழித்து அப்பாவும் புதுவை திரும்பினர்.என் சிறிய தங்கை ஓடிவந்து அதைச் சொல்லிவிட்டு அதன் நீட்சியாக அம்மாவின் திரவண்ணாமலை விஜயம் குறித்த வேரொரு தகவல் சொன்ன பிறகே அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

அம்மாவின் எதிலும் உள்ள உச்சகட்டமான உணர்வு வெளிப்பாடுகளை அறிந்திருக்கிறேன். அதில் அன்பு,ஆதரவு,வரவேற்பையும் கூட வெறுப்பின் மொழியாகத்தான் வெளிப்படுத்துவார். எதையும் கற்பனையாக நாடகத்தனமாக புரிந்து கொள்வார் அதற்கு எப்பொழுதும் மற்றவரகள் திகைக்க வைக்கும்படியாக எதிர்வினையாற்றுவார்.பேச்சில் மட்டுமல்லாது அவரது உடல்மொழியும் எவரையும் நிலையழிச்செய்து விடும்  , ஆனால் தன் கற்பனையை உண்மையென உருக்கொடுத்து அதை தான் நம்பி பெண்கொடுத்த வீட்டுவரை சென்று  எதிர்வினையாற்ற கூடியவர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

அப்பாவிடம் சென்ற போது அவர் சொன்ன தவலை கேட்டு உறைந்து போனேன், அது முற்றிலும் பைத்தியக்காரத் தனமானதாக பட்டது. நான் அம்மாவை திருவண்ணமலைக்கு பஸ்சேற்றியது மாலை சுமார் ஆறு மணிக்கு இருக்கும் இன்று போல் மூன்று மணி நேரப் பயணமல்ல .  அவர் போய் சேருவதற்கு எப்படியும் இரவு பத்தரை மணிக்குமேல் ஆகி இருக்கும் . இழவு வீட்டில் நுழைவது போல் தெரு முனையில் இருந்தே சப்த்தமாக அழுதும் அலற்றி கொண்டும் சென்றதை ஊரே கூடி வேடிக்கை பார்திருக்கிறது. திருவண்ணாமலை ஊர் என்றாலும் மாமா வாழ்ந்த பகுதி கிராமம் போலத்தான் இருக்கும் மாமாவின் அப்பா ஊர் தலைகட்டுப்போல மிகவும் கௌரவமாக வாழும் குடும்பம்.

அப்பா சொன்னது ஒருநிமிடம் மனக்கண்முன் மின்னோட்டமென என் முதுகெலும்புகளில் பட்டு சொடுக்கியது போல் இருந்தது.

மாமா வீட்டிற்குள் நுழைந்த அம்மா பத்ரகாளி போல நடுநிசியில் சமந்தியை உலுக்கி எழுப்பி தன் மகளை  பாவிகளே  கொன்றுவிட்டீரகளே அவளை எங்கே புதைத்தீர்கள் என கேட்டதுடன் நிற்காமல் பின கட்டு கதவை மோதித்திறந்து தோட்டத்தில் அங்கும் இங்கும் தேடி அலைந்து  விட்டு , பின்னர் நடு வீதிக்கு வந்து மன்னை வாரி தூற்றிவிட்டு திரும்பி இருக்கிறார்.

நான் பிரம்மை பிடித்தார் போல் அப்பாவையே பார்த்து நின்றிருந்தேன்.எதை யோசித்து பார்பது?அம்மா ஆடிய ருத்ரதாண்டவத்தையா,மாமாவின் குடும்பத்தார்  இருந்திருக்கக்கூடிய மனநிலையா,அவர்கள் குடும்ப பெருமை சந்தி சிரித்ததையா. அக்காவின் எதிர்காலத்தையா. எல்லாவற்றையும்  விட பூதாரகரமாக எழுந்து வந்தது அந்த சந்தர்ப்பத்தில் அப்பா அங்கு இருக்க நேர்ந்த கொடும் ஊழ்  . பிரச்சனையை கொட்டுவாயிலேயே எதிர் கொள்வது கொடுமையானது. கால அவகாசம் தேவை எதையும் அவதானிக்க. நிச்சயம் தன் மான மரியதையை பணயம் வைத்து அக்காவை அங்கு விட்டு வந்திருப்பார் . என்னவொரு மனவழுதத்திற்கு ஆளாகியருப்பார் என உணர முயற்சித்தேன்.

அம்மாவை மனநல மருத்துவரிடம் காட்டியே ஆக வேண்டும் என்பதில் அப்பா பிடிவாதமாக இருந்தார்.

அவரிடம் அம்மாவின் மனநிலையை எடுத்துக் கூறி இந்த இரவுக்குள் அவர் அம்மாவிடம் பேச வில்லையென்றால் எந்த தவறான முடிவிற்கும் அம்மா செல்வார் என்றதும் , அப்பா தன்  பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தார் .அம்மாவிடம் அவர் ஒப்புக்காக திட்டியும் பின் சமரசபேச்சும் சூழ்நிலையை  நிரவியது . அவரது நாடகத்தனமான நடவடிக்கையே கூட ஒரு வடிகாலாகி அவரை ஆற்றுப்படுத்தியிருக்கலாம் .இதில் வேடிக்கை சில மணி நேரத்திற்கு பிறகு அம்மா அப்பாவற்கான பணிவிடைகளை எந்த குற்றவுணர்வுமில்லாது செய்யத்துவங்கிவிட்டார் அவருக்கு நிகழ இருந்த பரிபவப்படல் நிலுவையில் கூட இருத்தி வைக்கப்படாமல் காலம் புறந்தள்ளியது .அதை அவர் இன்றும் உணரவில்லை. அன்றைய பொழுது ஒருவாறு முடிவிற்கு வந்தாலும் அதை கொண்டு அம்மாவை அளப்பதைப் பற்றியெல்லாம் எதுவும் சிந்திக்கவில்லை அது அப்போது என் வயதிற்கும் உகந்ததல்ல.

இன்று என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க ஆரம்பித்தேன் . அவர் சொன்னது இது ஒருவகையான மனப்பிறழ்வு தானாக யோசித்து செயலாற்றி அனைவர் வாழ்க்கையையும் நரகத்தில் தள்ளிவிடுவார் என்றார்.

இப்பொழுது அதை பற்றிய பேச்சுக்கான காரணத்தை கேட்டதற்கு அவர் கண்கள் பனிக்க சொன்னது தன்     அண்ணனுக்கும் தனக்குமான இடைவெளி தன் கால இறுதிக்குள் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை என் அம்மாவின் பொருட்டு நான் மாற்றவேண்டி வந்தது இது ஆரம்பம் .

ஆண் எக்காரணத்தாலும் ஒருகாலத்திலும் மற்றவர்களிடமிருந்து கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் குறிப்பாக பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது .

இனி அவள் சார்ந்து இருந்து என் காலம் போய்விடும் ஆனால் உன்னை நினைத்து தான் கவலைப்படுகிறேன். அம்மாவிறகு உன்மீது நிறைய பாசம் உண்டு அவள் என்னுடனான அனைத்து  பிரச்சனைக்கும் நீ துருப்புசீட்டு எனக்கூறிச் சிரித்தார்.இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. புரியாமல் பேசுவதையே வழக்கமாக கொண்டவர்.

அனால் என் பிச்சனை நீ அல்ல உனக்கும் உன் உடன்பிறந்தவர்களுக் இடையேயான உறவுபற்றியது . உன் அம்மாவுடைய குணத்தால் நான் பெரிய விலை கொடுத்தேன் என்னுடன் பிறந்தவர்களுடைய பிரிவுக்கும் உன் அம்மாவுடன் பிறந்தவர்களுடனான உறவு சீரழிந்தற்கும் காரணமாக இருக்கிறாள்.எக்காரணம் கொண்டும் உன் உடன் பிறந்தவர்களுடான உன் உறவை சரியாக வைத்துக்கொள்.குடும்ப நல்லது கெட்டதற்கு உறவுகளின் ஒத்தாசை தேவை உனக்கு நான் ஏற்படுத்திக்கொடுத்ததும் உன் அக்கா தங்கைகளின் உறவுமே இனி உனக்கான உறவுகள் என்பதை புரிந்துகொள் என்றார்

திருவண்ணாமலை நிகழ்வுகளில் நானும் உடன் இருந்ததால் அது எப்படி அடங்கியது எனத் தெரியும் .சிதைந்த உறவு அதன் பின் இன்றுவரை அப்படியே நீடிக்கிறது.

ஆனால் அப்பாவிடம் அம்மாவுக்கிருந்த பணிவும் பயமும் அவரை நேர்கொள்ளச் செய்யும் விசையாக செயல்பட்டது. அது எப்படி எனக்கு விசையென்றாகும் என்கிற எண்ணம்மெல்லாம் அப்போது இல்லை.

என்னளவில் அப்பாவின் சொல்லை நடைமுறை படுத்த தொடங்கினேன்.

அப்பாவின் மறைவிற்கு பிறகு அம்மா எப்படி இருக்கப்போகிறார் என்பது முதல் கவலையென இருந்தது . அப்பாவிற்கு பணிவிடையிலேயே அவர் தன் காலத்தை கழித்தவர் அப்பாவின் மரணத்திற்கு பின் எப்படி தன் வாழ்வினை வடிவமைத்துக் கொள்வார்  என்பது பெரிய கேள்வியாக இருந்தது . ஆனால் மிக இயல்பாக அதைத்தாண்டி வந்தார் , தனக்கென எழுந்து வந்த பிரச்சனைகள் வரை .

அம்மாவிற்கு  திடீரென மாரடைப்பு வந்தது , கடைவீதிக்கு சென்று வீட்டு பொருட்டகளை வங்கி வந்தவரிடம் வழக்கம் போல் கடிந்து கொண்டேன் . அவர் உடலநிலை சிறிது காலமாக சரியில்லை வேளைக்கு நிறைய ஆட்கள் இருப்பினும் எதையும் தான் செய்வதில் திருப்தி காண்பவர் , அன்று மிகவும் சோர்ந்து காணப்பட்டவர் தன் உடல் உபாதையைக் கூறும் போதும் அடுத்து அடுத்து அவர் சொன்னது மாரடைப்பின் அறிகுறிகளை . மருத்துவமனையில் சேர்த்த உடன் ஐந்து முறை அடுத்தடுத்த மிக கடுமையான மாரடைப்பிற்கு ஆளானார் . குறிப்பட்ட நிமிடம் முற்றிலும் முழ்கிப்போனார் பிறகு ஷாக் டிரீட்மெண்டில் மீண்டார் என டாக்டர் பின்பு சொன்னார். அவரை ஐசீயூ வில் பார்த்த பொழுது உருவெளித்தோற்றம் அல்லது கனவு என ஒன்றின் பாதிப்பில ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார் , அது அவருக்கு  மறுபிறப்பு .

உடன்பிறந்தாருடன் மற்றும் அவர்கள் உறவினர்களுடனான என் நெருக்கத்தை சரியாக வைத்துக்கொள்ள முயற்சித்தேன்

வாழ்கையில் அம்மா வரையில் அப்பாவின் அனுகுமுறையே எனக்குமானதாக இருந்தது.

ஆனால் ஒரு சிறிய பொருளியல் என் வீடு மறு சீரமைப்புக்கு பிறகு கசப்பு உறவுகளில் எழுந்து. அது எழுந்து வந்த விதம் செய்பவர்களுக்கும் இன்று வரை புரியவில்லை ஆனால் பலியான எனக்கு அது முற்றி அனைத்தையும் சிதைத்த பிறகே புரிந்தது.

அப்பா சொன்னது சத்தியம்.அவரின் மரணத்திற்கு பிறகு வீட்டில் அடுத்த பெரிய பொது நிகழ்வென ஏதுமில்லாத்தால் ஒருவரை ஒருவர் உற்று நோக்கும் தோரும் கசப்பு பேருறு கொண்டு எழுந்து வந்தது .

அம்மாவிடம் பெரும் மாறுதலை பார்க்க ஆரம்பித்தேன் , அவர் தன்னை மையப்படுத்திய உலகில் வாழ்ந்து கொண்டுப்பது மிகத் தாமதமாக புரிய ஆரம்பித்தது . மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர்கள் அந்த நிகழ்விற்குப் பின் தலைகீழ் குணமாற்றம் அடைவது இயல்பு , ஆத்திகன் நாத்திகனாவது போல , வாழ்கையில் அதுநாள் வரை இருந்த விழுமியங்கள் முற்றாகவே மாறுபாடுகளை அடைகின்றன .

நவீன மருத்துவமும் அளிக்கும் உடல்நலம் சார்ந்த நம்பிக்கையும் , நுகர்பொருள்களும் சமூக ஊடகங்களும் அவர்களை இழந்த வாழுதலை மீண்டும் முதலிலிருந்து எனத் தொடங்க வைக்கலாம் . நிச்சயம் இது பல் நெடுங்காலமாக இருந்து வரும் சமூக அறத்திற்கு புது பரிணாமத்தை அளிக்க வல்லது . இளந்தலைமுறைக்கு தொல் மரபுகளில் நம்பிக்கை பற்றிய விழுமியங்களை ஊட்ட விழையும் போது இருவருக்குமே நிச்சயம் இது முரணென வெளிப்படாலாம் .


அவருக்கும் எனக்குமான விஷயம் சர்ச்சையில் முடிய ஆரம்பித்தது . எதற்கும் கட்டுபடாதாவராக உருவெடுத்தார் நவீன உலகின் ஊடகங்கள் அவரை பேருரு கொண்டவராக எழுந்து வர வைத்தது காரணம் அவர் என்னை விடுத்து தன் மகள்களை சார்ந்து வாழத்தொடங்கிவிட்டதை மிகத் தாமதமாக உணர ஆரம்பித்தேன் ஆனால் காலம் கடந்து விட்டது நானும் அம்மாவும் நேருக்கு நேர்ரென மோதத்தொடங்கினோம். வீட்டில் பெண்கள் பிளவுபட்டால் வீடு நரகம் . வெளியில் போகிற போக்கில் கிள்ளி விடுவது உள்ளே பிரளயமாக வெடிக்கத்தொடங்கி , உடன் பிறந்தவர்களுடனான உறவு முற்றிலும் சிதைந்து போனது

எது நடக்கக் கூடாதென்று அப்பா நினைத்தாரோ அது நடந்து முடிந்தது .

எங்கு கூடினாலும் முதலில் எழந்து செல்பவர் மற்றவர்களின் இளிவரலுக்கு ஆளானார்கள். மற்றவர்கள் எவரிடமும் இனைந்திருக்க முடியாமல் தனியெனப் பிரிந்து யாரோ ஒருவரின் தவறென மற்றவர் இனைந்து மணிக்கணக்கென பேசி வளர்த்தெடுத்தது கசப்பன்றி வேறல்ல ஒருநாள் அதற்கு தன்னையும் இரையாக்கினர். ஒன்று மறந்து விடுகிறது  அவர்களின் பிள்ளைகள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . எந்த அறத்தை பழங்கதைகள் என புறந்தள்ளி நவீன உலகில் பிரவேசிக்கும் இவர்கள் நாளை என்ன விழுமியங்களை தன் விழுதுகளுக்கு சொல்லப் போகிறார்கள் .

நவீன உலகில் இந்திரலோகத்திற்கு இணையான இன்பத்தில் திளைப்பதாக உணரும் பெரியவர்கள் தான் இன்னும் வாழ்ந்து முடிக்காத உலகின் நுழைவாயில்களின் வெளியே அவர்களின் பிள்ளைகள் தங்கள் முறைவர வரிசையில் காத்து நிற்கவில்லை , அவர்களும் உள்ளே மௌன சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் வாழ்வியலில் வளர்ச்சிதைவு என்ன கோணத்தில் இருக்கப் போகிறது ? யார் அறிவார் .

சில சமயம் பெண்கள் தங்களின் சுதந்திரத்தை விடுதலை உணரவென நினைத்து கட்டுபாடு அற்றவர்களாக உருவெடுக்கிறார்கள் . அது அவர்களுக்கு நீண்ட கால அடைப்படையில் சிக்கலை உருவாக்குகிறது .அது அனைத்து எல்லைகளையும் அழிந்து வீங்கிப்பெருக்கெடுத்து நொதித்து நாறிப்போன ஆணவம் அன்றி பிறிதில்லை என்றானது . பின் மனித கரம் விலகி , கொடுந்தெய்வத்தின் விளையாட்டு களமென்றானது

மருமகனோட வாரா பெண்ணிற்கு பிறந்தகத்தில் சொல்லெழ பெற்றவர் அனுமதிப்பதில்லை என்பது நெறியாயின் பெற்றபிள்ளையின் சேவையை மற்றவர் இடத்து விட்டுக்கொடுத்து பேசி அனுதாபம் விலையெனப் பெறும் வயோதிகத்தாயின் புலம்பலுக்கு செவிசாய்காது எள்ளும் நீரும் கையல்லி இடும் பிள்ளையை பழிச் சொல்லெழுதலுக்கு  இடம் தாராதே என்பதும் நெறியே . அதை விடுத்து தான் சகோதரனுக்கு மாற்றென அவர்கள் கிளம்புகையில் தாயை உயிருடன் சிதையேற்றி நரகத்தில் தள்ளுபவரே .

அப்பா நலமாகி வீடு திரும்பிய சில நாட்களில் பெரியப்பா இறந்த சேதி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியை காட்டிலும் அவர் தன் கடைசி விருப்பாக சொன்ன தன் அண்ணனுடான சந்திப்பு அதை அவசியம் நிறைவேற்றுவதாக நான் கூறியது .
இந்த செய்தியால் அப்பா உடல்நிலை என்னவாகும் என மிகவும் பாதித்தது.வீட்டில் அனைவரிடமும் அப்பாவிற்கு தகவல் கசியலாகாது என எச்சரித்தேன்

அப்பாவிடம் பெரியப்பாவின் உடல்நிலை சரியில்லை , மருத்துவமனையில் இருப்பு உடல்நிலை மோசம் எனப்படிபடியாக இறந்த செய்தி சொன்னேன்

அவர் கதறியதைப் பார்த்து எனக்கேற்பட்டது குற்றவுணர்ச்சி, அம்மாவை புரிந்துகொள்ள செய்ய இயலாமை எல்லாவற்றிலும் மிகை நின்றது எந்த சந்தர்பங்களிலும் தத்துவங்களின் விசையால் எதையும் கடந்து செல்பவர் என நான் அறிந்தவரின் துக்கம் எப்படிப்பட்டதான வல்லமையாக இருக்கும் என யோசிக்கலானேன்.

முதலில் அப்பாவுடன் அம்மா இழவு வீட்டிற்கு வரமறுத்தது என்னை பற்றியெரியச்செய்தது என் கடும் வார்தைகளூடே அவர் மௌனமாக அப்பா பின்னால் வந்தார்.

அப்பாவிடம் என் வாக்கு நிற்கவில்லை பிராயசித்தமாக என் பெரியப்பாவின் குடும்பத்தினரால் வரும்  அவமானங்களை பொருத்து காரியம் முடியும்வரை அங்கிருந்து என துணிந்தேன், அங்கு எண்ணியபடி ஏதும் தவறவில்லை . இறுதிவரை அங்கிருந்துவிட்டு வீடு திரும்பினேன்

அப்பா அதற்கு பிறகு மனம் தேறியிருந்தார் . பெரியப்பாவின் இறுதி  காரியங்கள் எந்த விகல்பமும் எதிர்பார்ப்புமின்றி நான் இருந்து வந்ததை அப்பா பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் சென்றபோது தங்கைகள் அப்பாவை சுற்றி அமர்ந்திருந்தார்கள் நானும் சென்று அமர்த்தும் சற்றே சிந்தனை வயப்பட்டிருந்தார் சூழல் புரிந்து தங்கைகள் ஒருவர் பின் ஒருவர் எழுந்து விலகினர்.

தன்னிலை திருப்பியவராக அம்மாவிடம் நான் பேசியது சரியே என்றார் .

கடந்த சென்ற அந்த நாட்களில் என் தீர்மாணங்கள என்னை எங்கு நிறுத்தியுள்ளது . மூன்றாவது தமக்கை அவள் பெண்ணிற்கு இட்ட கண்ணாடி வளையலை என் மனைவிடம் திருப்ப அன்று அவர்களுக்கிடையேயான நல் உறவு அம்மா என் தமக்கையை  நோக்கி சொன்ன புண்சொற்கள் என்னை அம்மாவின் இளைய தங்கை களுக்குமான இரட்டைநிலைபாட்டென பட்டதால்.தொடங்கியது என் நரகம் .பின் வீடு கிரகபிரவேசம் , என் அம்மாவின் உளத்திரிபு என் அரவணைப்பு அவசியமற்று என் இடத்தை பெண்கள் எடுத்துக்கொள்ள .

எந்த என் நிலை குடும்மபத்தில் ஒற்றுமை நிலவ அப்பாவின் கணக்கு பொய்தல் எனத்தொடங்கி சிறு வயது தொடங்கி என் வாழ்கையை வழிநடத்தியது எது எனத் திரும்பிப்பார்கிறேன் பாலபிராயத்தை வியாபாரத்தில் நிலைநிருத்தி என் கைப்பிடித்து கடைக்கு அழைத்துச்சென்ற தாத்தா, நண்பர்களோட என் வீட்டில் கழியும் நாட்களை வீட்டின் பெணபிள்ளைகள் இருப்பதை காரணமெனக் காட்டி என்னை கண்டித்த அப்பா . அப்பாவின் மரணத்திற்கு பின் அம்மாவின் நெருக்குதலுக்கு தயங்கி புது மணநாட்களை இழந்தது அக்கா தங்கைகளின் சுயநல போக்கால் யாரும் என் உதவிக்கு வரவில்லை

தன்தவறென ஏதுமற்ற நிலையில் தன் தவறான புரிதலின்படி நெருங்கிய சொந்தங்களின் விலகல் , என்றாவது திரும்பும் அன்று நாம் சொல்லவேண்டியது பற்றிய விளக்கங்களை மனதில் பல்லாயிரம் முறை நடத்தி பார்த்திருப்போம் , இனி அந்த சந்தர்பத்திற்கு வாய்பில்லை என்பதும், அவர் தன்னைப்பற்றிய தவறான புரிதலோடேயே சென்றார் என்பது இனி ஆறாத புண்ணென இருக்கப் போகிறது.அப்பாவிற்கு நிகழ்ந்தது இதுவேதான்

பெருவிசும்பின் கண்ணியெனப்படுவது இது காலம் இயற்கை பண்பாடு வாழ்வியல் என எதை நோக்கினும் அது நம்மிடைய முரணிலைகளை முரணியக்கமென விட்டுச் செல்கிறது. அது ஒருநாளும் நம் தரப்பு நியாயங்களைக் கொண்டு மறுநிலயை நிரப்பி சமன்படுத்துதலில் நம் இழப்பை நகர்நிலை கொள்ளச்செய்யும் எனபது ஒருநாளும் நடவதாது ஏனெனில் அதுவும் சேர்ந்தே முழு உண்மை எனப்படுவது . நாம் ஏற்றாலும் நிராகரித்தாலும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்