https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 439 *தடம் *

ஶ்ரீ:

பதிவு : 439 / 613 / தேதி 12 மார்ச்  2019

*தடம் 


எழுச்சியின் விலை ” - 41
முரண்களின் தொகை -03 .


தலைவர் சண்முகம் நேரு குடுப்பத்திற்கு விசுவாசியாக அறிபட்டவர்.அதன் பொருட்டே அவர் இந்திராகாந்தி தொடக்கமாக தலைமையால் பேணப்பட்டவர் . தலைமைக்கு எதிராக நிஜலிங்கப்பா , காமராஜ் போல பெரும் ஆளுமைகள் எழுந்தபோது அவர்களிடமிருந்து தள்ளியே இருந்தார் .  அகில இந்திய காங்கிரஸ் கட்சி அரசியலில் அந்த குடும்பத்தை தீவிர பிறர் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என உறுதியாக இருப்பதாக சொன்னார் . ராவ் பிரதமரான போது . கட்சி தலைமை பிரதமர் பதவியுடன் ஒட்டி பிறந்தது , அதில் அமர்பவர் இதிலும் அமர்ந்திருப்பவரே என்றானது . அந்தக் குடும்பம் தலைமை பொறுப்பில் இல்லாத காலம் ,ராவ் பிரதமர் பதவியிலிருந்து விலகி , கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டு சீத்ராம் கேசரி தலைமைக்கு வந்திருந்தார் . சண்முகத்திற்கு  அவருடான நட்பு முப்பதாண்டு காலம் . உறவு சீராக   இருந்தும், பல தில்லியுடன் தலைவர் சண்முகத்திற்கு இருந்த  தொடர்பு எங்கோ சமன் குலைந்திருந்தது .  ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியுற்றிருந்தது காரணமாக சொல்லப்பட்டு அவருக்கு சீட் மறுக்கப்பட்டது .அனைவரின் பதவிக்கு சிபார்சு செய்யும்  மாநில தலைவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அவரது இருப்பை நிலைகுலையச் செய்வது  பிறிதொன்றில்லை.

காலத்தின் கணக்குகள் எப்போதும் விசித்திரமானவை. 1996ல் நடைபெற்ற தேர்தலில் பாராளுமன்ற தேர்தலில் கட்சி வென்றிருந்தாலும் , மூப்னாரின் எழுச்சி காரணமாக மாநில தேர்தலில் கட்சி தோல்வியுற்றிருந்தது . பிளவுபட்டிருந்த போதும் காங்கிரஸ் கட்சி 1996  தேர்தலில் வெற்றி பெற அதிமுக வின் கூட்டணி தேவையிருந்தது . இம்முறை கூட்டணி முறிந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் நிற்க யாரும் தயாரில்லை .அந்த சூழலில் அதிமுக கூட்டணியின்றி தனித்து நிற்பது  சாதகமில்லாதது என மரைக்காயர் உடல்நிலையை காரணம் சொல்லி தேர்தலில் நிற்க மறுத்துவிட்டார் .

ஆனால் சணமுகத்தின் கணக்கு வேறு விதமாக இருந்தது.அவர் தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து அகில இந்திய கட்சியில் ஏற்படவிருக்கும் மாற்றத்தையும்  அதை ஒட்டி தனது எதிர்கலாத்தையும் இணைத்த பார்வையை கொண்டிருந்தார் .அகில இந்திய காங்கிரஸ்  தலைமையில் மாற்றம் வரும் என அவரது கணக்கிட்டிருந்தது  .1991 வருட சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. மரைக்காயர் இல்லாத கங்கிரஸ் மந்திரிசபை முதல்முறையாக அமைந்திருந்தது .முதலவர் வேட்பாளராக சண்முகம் தேர்தலை சந்தித்தார் .ராஜீவ் காந்தியின் முழு ஆதரவு அவருக்கு இருந்தது .உட்கட்சி சிக்கலால் அவர் தோல்வியுற்றார் .

அவரது தலைமையில் அரசாங்கம் அமையவிருந்ததால் பெரும்பான்மையான காங்கிரஸ் வேட்பாளர்கள் சண்முகத்தின் ஆதரவாளர்கள்.அவர் சட்டமன்றத்திற்கு செல்ல முடியாத சூழலில் , தனது ஆதரவாளர்களை கொண்டு அரசாங்கத்தை வெளியிலிருந்து இயக்கத் துவங்கினார் .அதனால் பலவிதமான புதிய சமன்பாடுகள் உருவாகி வந்தது .அரசியல் தலைவர்கள் அஞ்சுவது , இந்த புதிய சமன்பாடுகளுக்குத்தான்.அது தெரியாத தேவதையைப் போல”புதிய சமன்பாடுகளினால் அரசு நித்தம் ஒரு சிக்கலை எதிர் கொள்ள நேர்ந்தது .தில்லிக்கு தகவல் சொல்ல சண்முகம் நாராயணசாமியை சார்ந்திருக்க வேண்டிய தேவை எழுந்தது.நரயணசாமி தனக்கான இடத்தை உருவாக்கி கொண்டார் .அதுவே பின்னாளில் அனைவரும் அஞ்சும் சண்முகத்தை எதிர்க்கும் களத்தை அமைத்துக் கொடுத்தது.

நரசிம்ம ராவ் பழைய நேரு குடும்ப விசுவாசிகளை துரத்தில் வைத்திருந்தார் .அனைத்து அமைப்பிற்கும் மேல் கீழ் அடுக்குகள் உருவாகி வந்தன .சண்முகம் இயல்பில் பெரும் கூச்ச சுபாவி .அரசியல் கோட்பாடுகளை தனது அனுபவத்தால் அனுகக்கூடியவர்.எதையும் பொதுவில் வைத்து விளக்குவது அவரது பாணியில்லை .அரசியல் கணக்குகள் கடைசி நேர விளையாட்டின் பயனாக விளைபவை. அதற்கு இந்திராகாந்தி போன்ற ஆளுமைகள் தலைமை பொறுப்பில் இருந்தவரை கடைசீ நேர முடிவடுக்கும் வாய்பபு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது .அது அவரது விசுவசத்திறகான பரிசு .நரசிம்ம ராவ் பிரதமரான பிறகு கட்சி அமைப்புகள் தங்களின் ஜனநாயகத்தை நோக்கிய ஆவலை எழுப்பிக்கொண்டது .

கட்சியின் புதிய அனுகுமறை சண்முகத்திற்கு ஒவ்வமையை கொடுத்திருக்க வேண்டும் .ஒருவேளை சோனியா காந்தி தலைமை பொறுப்பிற்கு  வருவாரென்றால் தனக்கான பாதை திறக்கும் என அவர் நம்பியிருக்க வேண்டும்.மூப்பனாரின் எழுச்சி கூரை கொட்டகையை யானை உலுக்கியது போலானது”. தமிழக காங்கிரஸ் சின்னாபின்னமானது. புதுவையில் அதன் பாதிப்பு மிகுதியாக இல்லாது போனாலும் , முக்கிய தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் மேலதிக வாக்குகளை தமக” சிதைத்து விட்டது .அதன் பிறகு மெல்ல தனது இடத்தை நோக்கி கட்சி நகர்ந்தாலும் , பராளுமன்ற தேர்தலில் தெளிவான வெற்றிக்கு வாய்ப்பில்லாத சூழலே நிலவியது .அதிமுக ஆதரவை பெற சண்முகம் முயன்று கொண்டிருந்தார் . தனது ராஜ்யசபை தேர்தலுக்கு இதை செய்திருந்தால் தலைவருக்கு இந்த நிலை வந்திருக்காது என என்னிடம் நாராயணசாமி சொன்னது நினைவிருக்கிறது. அப்படி ஒரு கணக்கு உண்மையில் இருக்கிறதா ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக