https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 டிசம்பர், 2022

மணிவிழா - 38

 



ஶ்ரீ:


மணிவிழா - 38


10.12.2022



* கற்பனை  *





ராமாநுஜர் ஆயிரமாவது அண்டு விழாக்குழுவை நான் அமைப்பது பற்றிய தருணம் பின்னால் உருவானதுதான் என்றாலும் அதற்குள் நான் வந்தது ஒரு விந்தையான நிகழ்விற்கு பிறகு. வேளுக்குடி ஸ்வாமியின் கிஞ்சித்காரத்தின் புதுவை தன்னார்வளர் தொண்டர் பரகாலன் வேளுக்குடி ஸ்வாமியின் ஶ்ரீரங்க இல்லத்தின் கிரஹப்பிரவேசத்திற்கு சென்றிருந்தார். நிகழ்வு நிறைவாக முடிந்த பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தவர். தனது பாணி வேடிக்கையாய் பரகாலனிடம்ஏன் என்னை புதுவைக்கு அழைக்க மாட்டேங்கிறீர்என்று கேட்க. நீண்டநாட்கள் அது பற்றி யோசித்திருந்த பரகாலன் புதுவை வைணவர்களின் இடையே நிலவும் பூசலால் அனைத்து ஆன்மீக செயல்பாடுகள் முற்றாக இல்லாமலாகி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்றார். வேளுக்குடி ஸ்வாமி புதுவையில் அவரது தந்தை காலம் முதல் செயல்பாட்டில் இருந்து குடும்பம் சிலவற்றை குறிப்பிட்டு சொல்லி அவர்களுக்கு என்னவாகியது என்றதற்கு, அவர்களில் பலர் மண்மறைந்தனர் என்றார். அவர்குறிப்பிட்ட கேட்டறிந்த சிலரில் என் தந்தையும் ஒருவர். பிறகு அவர்களின் குடும்பம் பற்றி கேட்டபோது என்னைப் பற்றி அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் திரும்பவும் வைணவ ஆன்மீக செயல்பாடுகள் புதுவையில் துவங்க வேண்டும் என்றால் நான் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என சொல்லப்பட்டது. அதில் உள்ள சிக்கலைப் பற்றி பல முறை பேசிய போதும் எனது ஆர்வமின்மை் அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னை அழைத்துக் கொண்டு திருகண்ணபுரம் வரச் சொல்லியிருக்கிறார்


அந்த நிகழ்விற்கு ஒரு வருடம் முன்பாக அயோத்தி யாத்திரை ஜீயர் ஸ்வமிகளுடன் சென்ற போது ஆயிரமாவது ஆண்டு விழா குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆவல் அனைவரிடமும் இருந்தாலும் அதன் கேட்கும் கடின செயல்பாடுகள் காரணமாக யாரும் அதை முன்னெடுக்க விழையவில்லை. முயன்ற சிலரும் அதை சிறிய அளவில் துவங்கி பின் நடத்திச் செல்வதில் உள்ள சிக்கல் காரணமாக கைவிட்டிருந்தனர். அந்த முயற்சிகள் தோல்வியடையும் வாய்புகளை அதிகம். வென்றிருந்தால் ஆச்சர்யம். காரணம் அதை வழக்கம் போல மரபார்ந்த தளத்தில் துவங்கினர். முன்பே பலவித ஆன்மீக நிகழ்வுகளுக்கு மத்தியில் மேலும் ஒன்றென ஆகியது. நிதி உதவி செய்யும் சிறு குழு மேலும் அழுத்ததற்கு உள்ளானதால் நீர்த்து போனது. அதன் காரணமாகவே நான் அதை வேறு விதமாக வடிவமைக்க முயன்று கொண்டிருந்தேன்


என்னிடம் ஜீயர் ஸ்வாமிகள் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம பற்றறி பேசிய போது அதை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றிய முன்பே அவதானித்திருந்த எனது எண்ணத்தை அவருக்கு சொன்னேன். அகில இந்திய அளவில் அதற்கான முயற்சிகள் துவங்கப்பட வேண்டும் என்கிற கருத்து அவரை திகைக்க வைத்திருக்க வேண்டும். அதை எனது வீன் கற்பனை என நினைத்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.என் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக அவருக்கு முதலில் தோன்றினாலும் அது பற்றிய மிக விரிவான வரைவு அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனால் அதை வழமையான முறையில் துவங்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். முதல் கட்டத்தில் நான் நினைத்த வடிவத்தை அது அடையவில்லை என்பதால் அதற்கான முயற்சியை கைவிட்டாலும் எண்ணத்தை விடவில்லை அதற்கான சூழல் பிறகு உருவாகும் என்கிற நம்பிக்கை இருந்தது . அதுவரை பிறர் முயன்ற எந்த முயற்சிக்கும் நான் உடன்படவில்லை. அதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கவில்லை. அதை புரிய வைப்பது எளிதல்ல. அதற்கு அலாதியான கற்பனை அவசியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக