https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 19 டிசம்பர், 2022

மணிவிழா - 40

 ஶ்ரீ:


மணிவிழா - 40


19.12.2022






விழா துவங்கும் முன்பாக ஆழ்மனம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த அந்த முதல் சிக்கல் உருவெடுத்தது. வேளுக்குடி ஸ்வாமி ஒரு நிகழ்வை ஏற்று வருவதாக சொல்லுவைப்பது எளிதில் நிகழ்வதில்லை. ஆனால் தேதி கொடுத்த பின் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. அதை ஒரு நெறி போல வைத்திருந்தார். அவரிடம் நேர மேலான்மைக்கும் அதற்கு ஈடான இடம் இருந்தது. துவக்க விழா அவரை மட்டுமே நம்பி ஏற்பாடாகி கொண்டிருந்தது. அங்கிருந்து அதை மேலதிக நிலைக்கு கொண்டு செல்ல வேறு சில திட்டங்களை வைத்திருந்தேன். அவர் அழைத்து எனக்கு விழா துவக்கத்திற்கான தேதி கொடுத்த போது அவர் வருவதை பற்றிய எந்த சந்தேகமும் இல்லாமல் வேறு பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து விழாக்குழுவிற்கு எதிரான கருத்துக்கள் அவரிடம் சென்று கொண்டிருந்தன. அவர் புதுவை வருவதை தவிர்க ஒரு சிறு காரணம் போதுமானதாக இருந்தது என்பது எனது ஐயமும் அப்படி நிகழாது என்கிற நம்பிக்கைக்கும் இடையே மனம் ஊடாடிக் கொண்டிருந்தது


புதுவை வந்தவரை வரவேற்று தங்குவதற்கு ஒருங்கி இருந்த வீட்டிற்குள் அழைத்து வந்தேன். அங்கு விழாவிற்கு வந்திருந்த பலர் கூடி இருந்தனர். அனைவரும் விழா துவக்க உற்சாக மனநிலையில். அவர்களுக்குள் அங்கு அமர்ந்து கொண்டு மனமொன்றி உரத்த குரலில்ராமநமத்தை ஜெபித்துக் கொண்டிருந்த விழாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஆடிட்டர் கணேசன் வேளுக்குடி ஸ்வாமியை ஏதோ ஒரு வகையில் சீண்டியிருக்க வேண்டும்


மரபான வைணவ மேடைகளில் மட்டும் உபன்யாசம் செய்வது வருபவர் . பின்னாளில் அது குறித்த அவரது பார்வை மாறியது. ஆரம்ப கட்டத்தில் தனக்கென கறாரான நியாயங்களை கொண்டிருந்தார். துவக்கத்தில் தென்கலை சார்பாக நின்று பேசியவர். பின்னர் இரண்டு கலைக்கும் பொதுவில் தன்னை வைத்துக் கொண்டார். அதைப் போல பஜனை மற்றும் சனாதன தர்மம் என பேசுவது தனக்கு நெறியல்ல எனும் கடும் நிலைப்பாட்டை குறித்த தனது எண்ணத்தை விழாக் குழு சார்பாக நிகழ்ந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் வெளிப்படுத்தினார். 2012 களில் அவரின் வைணவம் மற்றும் புதிதாக துவங்க இருந்த விழாக் குழு குறித்த மிக கறாரான பார்வையால் சில முக்கியஸ்தர்கள் விலகும்படி ஆனது . அதில் ஆடிட்டர் கணேசன் மிக முக்கியமானவர்


ஸ்மார்த்தர் போன்ற பிற மரபினரை அமைப்பிற்குள் கொண்டுவந்து அதை நீர்க்கச் செய்கிறேன் என்பது என்மீதான பிரதான குற்றச்சாட்டு. அது சரியானது என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் சில காலம் கடந்து நடைமுறை எதார்த்தம் காரணமாக தனது பார்வையை மாற்றிக் கொண்டார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடிட்டர் கணேசன் ஒரு சமயம் என் வீட்டிற்கு வந்திருந்திருந்தார் அப்போது எனது ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்ட திட்டம் பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதுவரையில் அது ஒரு கனவாக இருந்தது. விழா குறித்த எனது எண்ணத்தை அவரிடம் முழுவதும் வெளிப்படுத்திய போது அதற்கு அவரது உற்சாகமான ஆதரவு கிடைத்தது என்வரையில் இந்த விழாவிற்கான துவக்கம். அவர் கொடுத்த உத்வேகம் காரணமாக விழா குழுவில் அனைத்து சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களை இணைத்துக் கொள்ள இயலும் என்கிற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார் என்பது மட்டுமின்றி அதற்காக என்னுடன் இணைந்து பயணப்படவும் தயராக இருந்தார். புதுவை வைணவ இயக்கங்களில் அதுவரை நிகழாத பாய்ச்சல்அதுவரை வைணவ நிகழ்வுகள் அனைத்தும் குறுங்குழு செயல்பாடுகள் போல எதிலும் இணையாத தனித்தது. அதுவே பிற எவருடனும் இயந்து செல்லும் வாய்பை அவர்களுக்கு கொடுக்கவில்லை. பல நிகழ்வுகள் நீர்த்து போனதற்கு இதுவும் பிரதான காரணம்

பொது மக்களை ஈர்க்கும் விழாவாக ஒன்று உருவாகாமல் போனால் அது வெற்றி பெறாதாக கருத முடியது என்பது எனது எண்ணமாக இருந்தது. சம்பிரதாயத்திற்கு எதிராக எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் அதை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக சொல்லும் குழுக்களின் மனநிலை குறித்து எனக்கு கடுமையான மன விலக்கமும் விமர்சனமும் உண்டு  . துவக்கத்தில் இருந்து நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். அதுவரை மரபாக இயங்கிய அமைப்புகள் எதனுடனும் இணையாது தனித்து செயல்பட வேண்டும் என்பது. அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்பே அவதானித்திருந்தேன். அவர்கள தொட முடியாத உயரத்திற்கு அதை கொண்டு செல்வது மட்டுமே அதை எதிர் கொள்ள முடியும். அதற்கான களம் மிக செறிவாக உருவாகி வந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக