https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 மே, 2022

அடையாளமாதல் * இறந்தகாலத்தின் துளி *

 



ஶ்ரீ:



பதிவு : 622  / 812 / தேதி 20 மே  2022

  •                                  * இறந்தகாலத்தின் துளி *

ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 19.





மனிதனின் மென்னுணர்வு அவனது அன்றாட வாழ்கையை மிக அழகானதாக மாற்றிவிடுகிறது. சிறு கற்பனை , அழகுணர்வு ரசிப்பு மற்றும் முதிரா இளமையின் மிச்சக்கூறு போன்றவைகளை கொண்டு அவற்றை மெல்ல உருவாக்கிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். சட்டென எதிர் கொள்ளும் புறவயமான அகச் சீண்டல் நிகழும் கணம் அது அந்த மெல்லுணர்வுகளை தகர்த்து தள்ளி அகத்தை கொதிப்படைய வைத்துவிடுகிறது். அன்றாடங்களை இதன் பொருட்டே தவிற்க நினைக்கிறேன். அங்கிருந்து மீண்டு வர சில மணி நேரம், சில நாட்களாகிவிடுகிறது . அது ஒரு ஓயாத கூச்சல் போல அதன் ஓசை அடங்க நீண்ட நேரமாகிறது1991 களில் வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது புதுவை மின்துறை அவரின் இலாக்காக்களில் ஒன்று .ஊசுடு பெருமாள் புதுவை மின்துறையில் தினக்கூலி உதவியாளனாக பாலனின் பரிந்துரையின் அடிப்படையில் இணைந்திருந்தான் . அது மிகக்கடுமையான உடல் உழைப்பைக் கோரும் சாலையோர கம்பம் நடும் வேலை . அவனது தகுதிக்கு அது மிக தாழ்ந்த பணி என்பதால் அதை தவிற்க ஸ்டோரில் ஒரு வேலை வாங்கிக் கொண்டு வெளி வேலைக்கு செல்லாமலிருந்தான் . அவனது அரசியல் தொடர்பை அறிந்து கொண்டவர்களால் அது சலுகையாக அவனுக்கு வழங்கப்பட்டது . அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து தினசரி காலை 11:30 மணிக்கு என்னை சந்திக்க வந்துவிடுவான். நாங்கள் கடற்கரை சாலையில் உள்ள தலைவர் சண்முகம் இல்லத்திற்கு அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்பும் வழியில் கடற்கரை சாலையில் இருக்கும் இந்தியன் காபி விடுதியில் காபி சாப்பிடுவதுடன் அன்றைய காலை அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலில் தீவிர பணிகளை துவங்கி பின்னர் பெரிய இயக்கமாக உருவெடுத்ததெல்லாம் 1997 களுக்கு பிறகு. 1994 களில் பாலனுடன் நான் முரண்பட்டு வெளியேறியதால் அவருக்கு மிக அணுக்கமானவனான ஊசுடு பெருமாள் சிறிது காலம் என்னுடன் தொடர்பில் இல்லாமலிருந்தான் .ஊசுடு பெருமாள் தலித் வகுப்பைச் சேர்ந்தவன் . அவர்களே அன்று எங்களது அடிப்படைப்பலம் . ஒரு காலத்தில் பாலனுக்காக தொண்டர்களைத் திரட்டித் தந்தவன். திரட்டிய கூட்டம் தங்களின் சிக்கலுக்கு தீர்வையும் அதற்கு பதிலும் வேண்டி நின்றபோது அதை நிகழ்த்த முடியாமல் பாலனால் கைவிடப்பட்டு சிறுக சிறுக தன் செல்வாக்கிழந்தான்


1996 களில் பாலன் காங்கிரஸில் இருந்து விலகிதமாகசென்று இணைந்த போது மூன்று கார்களில் அவரது அணுக்கர்கள் சென்றனர் அவர்களில் பெருமாளும் ஒருவன். ஒரு வருடத்திற்கு முன்புதான் கடற்கரை காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட பாலனின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருந்தது. கூடிய கூட்டம் இளைஞர் காங்கிரஸின் பலமாக அன்று பார்க்கப்பட்டது . இன்று அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? என தெரியவில்லை . கண்ணனுடன் இணையப் போகிறார்கள் என தெரியாமல் அவர்களுடன் சென்று தமாக அலுவலகத்தை பார்த்தது அதிர்ந்து போயிருந்தான் . சம்பிரதாயமான இணைப்பிற்கு பிறகு யாரும் பார்த்திராத நேரத்தில் நழுவி என்னிடம் வந்ததாக கூறினான். பெருமளை நான் சந்தித்து ஓராண்டிற்கு மேலாகிறது. நான் சண்முகத்துடன் இணைந்து சில வாரங்களே ஆகியிருந்தன . அவன் என்னை வந்து சந்தித்தது மகிழ்வாக இருந்தாலும், அரசியல் எதிர்காலம் குறித்த எனக்கு எந்த நோக்கமும், இலக்கும் இல்லை கால நதியில் ஒரு ஓராமாக பயணிக்க முடிவு செய்ததை சொல்லி என்னிடம் அவனுக்கு தீவிர அரசியலுக்கான வாய்ப்பில்லை என்பதைச் சொன்னேன். அவன் என் மனநிலையை அறிந்திருக்க வேண்டும். தனக்கும் பெரிய திட்டமொன்றும் இல்லை உடன் பயணிக்கிறேன் என்றான். நான் மிக உச்ச நிலை அரதியலுக்குள் வந்ததெல்லாம் அதன் பின் நிகழ்ந்தது . பிறகு  2010 களில் அரசியலில் இருந்து நான் முழுமையாக விலகும் அந்த இறுதி கணம்வரை என்னுடன் இருந்தான்


எனது அரசியல் களம் ஊசுடுவின் அந்த இரண்டு நிகழ்வின் பின்னணியில் இருந்து உருவானது. ஊசுடு பெருமாள் எப்போதும் அனைத்திலும் என்னுடன் இருந்தான் . அவனது பழைய தொடர்புகளில் சிலர் தங்கள் சிக்கல் குறித்து  சண்முகத்துடன் உரையாட வந்து அவரை அவரது இல்லத்தில் அல்லது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் போது என்னுடன் இருக்கும் பெருமாளை பார்த்து திகைத்தனர். ஒரு சிறு தலயசைப்பில் கடந்து சென்றாலும் அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை ஒரு போதும் ஒதுக்குவதில்லை. அவர்களின் சிக்கல்கள் நீண்ட பின்தொடர்சியை கோருபவை யாராவது ஒருவர் அதை இறுதிவரை தூக்கி சுமக்க வேண்டி இருக்கும். எனவே அவர்கள் மிக எளிதில் அணுக இயல்பவரை முதலில் தொட முயல்வார்கள் . அரசியலின் அடிப்படை விதிகளில் ஒன்று . அவர்கள் ஒருவர் பின் ஒருவராக பெருமாளை தொடர்பு கொண்ட போது. வெவ்வேறு சந்தர்பங்களில் அவர்களை என்னிடம் கொண்டுவந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் . அது ஒருவகையில் எனது அரசியல் கணக்கை மீண்டும் துவக்கி வைத்தது. அரசியலில் எப்போதும் திட்டமிடல் என ஒன்றில்லை. அது சந்திக்கும் சிலருக்கு உதவ முற்படுப்போது உருவாகி வருவது . ஒன்றிலிருந்து ஒன்று பல்கிப் பெருகுவது . ஒருவர் சொல்லில் இருந்து பலருக்கு சென்று சேர்வது. அரசியலில் தகவல்கள் காற்றைவிட மிக வேகமாக சென்றடைவது


பாலனுடனான எனது கடந்த கால அனுபவத்தில் இருந்து தொகுதி அரசியலைப்பற்றி தெளிவான வரையறைகளை உருவாக்கித் வைத்திருந்தேன் . யார் எந்த தொகுதியில் இருந்து தங்கள் சிக்கல் சார்ந்து கட்சியில் முறையிட வருந்தாலும் என்னை பார்பதுண்டு அவர்கள் நான் முன்பு பார்த்த அந்த திரளில் ஒருவர் . சிலரின் முகம் நினைவில் இருக்கும் அல்லது அவர்கள் கொண்டுவரும் சிக்கலை நான் எங்காவது முன்பே அறிந்திருப்பேன். அவர்கள் விரும்புவது தலைவருடன் தங்கள் எண்ணத்தை தனிப்பட்ட முறையில் சொலும் ஒரு சந்தர்பத்திற்கு. அது அவர்களுக்கு சிக்கலை உருவாக்குபவர் பற்றிய நேரடியான குற்றச்சாட்டு . அதை பிறர் அறிய பகிரங்கமாக தலைவர் முன்னே சொல்ல இயலாது . வெளித்தெரிந்தால் அதற்கு உரிய விலை அவர் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் எளிய மக்கள் வல்லமையுள்ள அரசியலாளாலர்களை அஞ்சினர். கடந்த கால அரசியலில் அவர்களை பலரை அவர்கள் வாழ்விடத்திற்கு சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பிருந்ததால் அதை இப்போது உபயோகப்படுத்த நினைப்பார்கள். பெருமாளுக்கு என்னைவிட அவர்களை மிக அணுக்கமாக தெரியும் மேலும் அவன் எப்போதும் அவர்களில் ஒருவன். என்னுடன் அவன் இருப்பது அவர்களுக்கு தெரியும் அந்த கணம் என்னை சந்திக்க அவனது துணையை நாடுவார்கள் . அவர்களை என்னிடம் அழைத்துவந்து அவர்கள் சிக்கலை எனக்கு சொல்ல அவனுக்கு தயக்கமிருந்ததில்லை. மெல்ல பழைய தொடர்புகள் அணுக்கமாவதுடன் அவர்கள் வழியாக புதிய நட்புகள் உருவாகிக் கொண்டிருந்தன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்