https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 ஜூன், 2025

அடையாளமாதல் * கிளிக் *

 




ஶ்ரீ:



பதிவு : 682  / 871 / தேதி 20 ஜூன்  2025



* கிளிக் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 80.






புதுவையில் காங்கிரஸ் கட்சித் அதன் தலைவரின் நிலைப்பாடுகளால் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வல்லமை உள்ளதாக வெளிப்படையாக அறியப்பட்டது ஆனால் அதன் பின்புலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வீழ்ச்சி சட்டென உருவானதல்ல ஏறக்குறைய 1970 களில் ஆரம்பித்து மெல்ல மெல்ல சரிந்து பலமிழந்து அதன் பின் தொடர்ந்து சில காலம் ஆட்சியமைக்க இயலாமலாக்கியது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களில் முதலானது அடுத்த தலைமுறை தலைவர்களை நோக்கி கட்சி செல்லாதது குறிப்பாக விளிம்பு நிலை சமூக இளைஞர்கள்.


அந்த காலகட்டங்களில் அரசியல் நிலமுடைய சமூகத்தில் கையிலிருந்து பல வேறு உலகியல் மாற்றங்களால் நழுவிக் கொண்டிருந்தது தங்களை தக்க வைத்துக் கொள்ளும் அரசியல் செயல்பாடுகளால் அவர்களை எதிர் கொண்ட விளிம்புநிலை சமூகத்தின் எழுச்சியாக வெளிப்பட துவங்கிவிட்ட காலம் அதை காங்கிரஸ் போன்ற இயக்கத்த தலைவர்கள் கணிக்க  தவறினார்கள்.


நிலமுடை சமூகத்தின் மைய பொருளியல் விவசாயம் சார்ந்தது அதை நம்பி இருந்த விவசாய கூலிகள் விளிம்பு நிலை சமூகத்தினர். இரு சமூகத்திற்கிடையே ஆரம்ப காலத்தில் இருந்த புரிதலால் நிலமுடை சமூகத்தால் அவர்கள் மீது மறைமுகமாக செல்வாக்கு செலுத்த இயன்றது அதைக் கொண்டு தேர்தல் சமயங்களில் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை உருவாக்கி கொண்டனர். பின்னர் அதை நிரந்தர பலமாக ஆக்கிக் கொண்டனர்.


கால மாற்றத்தால் அவர்களின் பிடி நழுவ பல காரணிகள் உருவாகியிருந்தது. முதன்மையாக புதுவை போன்ற சிறிய நிலப் பகுதியில் நில மதிப்பு சட்டென எண்ணியிராத விலைக்கு உயர்ந்தது நிலங்கள் வீட்டு மனைகளாயின விவசாயக் கூலி உயர்ந்து விவசாயம் லாபமில்லாமலானது. அதை ஈடுகட்ட நவீன இயந்திர உபகரணங்கள் விவசாய கூலிகளின் தேவையை குறைத்தது.வயல் வேலைகள் குறையத் துவங்கின தங்களை தக்க வைத்துக் கொள்ள முதல் தலைமுறை வேலையற்றதாகியது விளிம்பு நிலை சமூகம் இரண்டாம் தலைமுறை மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள துவங்கியது.


இதற்கிடையே விவசாயம் கை கொடுக்காததாலும் தங்கள் பிள்ளைகளின் எதிர் கால கல்வி மற்றும் வேலை வாய்ப்பை எதிர் நோக்கி நிலமுடை சமூகம் கிராமங்களை விட்டு நகர்புறங்களுக்கு இடம் பெயர்ந்தது அதனால் கிராமத்தில் விளிம்பு நிலை சமூம் மீதான பிடியை தளரத் துவங்கியது.  

அதுவரை பெற்றிருந்த அரசியல் செல்வாக்கை இழக்க வேண்டி வரும் என்கிற அச்சத்தால் நிலமுடை சமூகத்தினர் கிராமத்தில் தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. கிரமத்து பெரியவர்களிடம் பழைய நிலை தொடர எடுத்த முயற்சி விளிம்பு நிலை சமூக இரண்டு தலைமுறைகளின் இடையே பிளவை உருவாக்கியது  மூத்தோர் சொல் மரியாதை இழந்தது.விளிம்பு நிலை சமூகத்தின் அடுத்த தலைமுறை மாற்று வேலை வாய்ப்பை நோக்கி நகர்ந்தனர். நீண்ட காலமாக நிலைத்த இரண்டு சமூகத்தின் சமரச புள்ளி குலைந்தது. கட்டுப் படுத்தும் மூத்தோர் ஒதுங்கிக் கொள்ள அது சமூகத்திற்கு இடையேயான மோதலாக உருவெடுத்தது. விளிம்பு நிலை சமூகத்தின் மீதான நேரடி செல்வாக்கு செலுத்த முயன்ற போது அந்த சமூகத்தின் இளைஞர்கள் மத்தியில் கசப்பை உருவாக்கி இருந்தது. அவ்வப்போது சிறு சிறு மோதலாக உருவெடுத்த பிறகும் நிலமுடை சமூகத்தின் புதிய தலைமுறைகள் கிராமங்களில் தங்கள் ஆதிக்கத்தை கைவிட மறுத்தது. பிளவு பெரிதாக விளிம்பு நிலை இளைய சமூகம் அரசியல் வழியாக தங்கள் அதிகாரத்தை மீட்டெடுக்க நினைத்தனர்


நீண்ட காலம் நீடித்த இரண்டு சமூகத்திற்குமான உறவு எப்போதைக்குமாக சிதையத் துவங்கியது. மெல்ல மெல்ல கிராமங்களை மையமாக கொண்ட விளிம்பு நிலை சமூகத்தின் மீதிருந்த மொத்த பிடியும் நழுவியது. அவர்கள் மீதான தங்கள் பிடியை அரசியல் ரீதியில் எதிர் கொள்ள சிறு சிறு மோதல்களாக வெளிப்படத் துவங்கியது மிக விரைவில் கொதிநிலையை அடைந்தது. நிலமுடை சமூக முக்கியஸ்தர்கள் மாநில காங்கிரஸ் கட்சியில் உயர்நிலை நிர்வாகிகளாக இருந்தனர் அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கலுக்கு தீர்வளிக்கும் இடத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நேரடியாக அல்லது மறைமுகாக ஈடுபடுத்தப்பட்டார். அதில் உருவான இடை வெளியால் மாநில தலைமைக்கு விளிம்பு நிலை சமூக இளைஞர்கள் மத்தியில் நேரடி தொடர்பு உருவாகவில்லை. அது தொகுதி தலைவர்களுடன் நின்றுவிட்டதாக பிழையாக புரிந்து கொள்ளப்பட்டது


கிரமாங்களை விட்டு நிலமுடை சமூகம் நகர்புறத்திற்கு இடம் பெயர்ந்தாரும் கிராம அரசியில் இருந்து ஒதுங்கவில்லை. அதனால் மோதல் இன்னும் தீவிரமாகியது . அதிகார அரசியலை அடைந்தவர்கள் அதை கொண்டு கிரமங்களை அடக்க முயன்றனர். மாநில கட்சி அரசியலில் அவர்களின் இடம் உறுதியாக இருந்ததால் மாநில கட்சி அமைப்பு அவர்களை பாதுகாக்க அதனூடாக விளிம்பு நிலை சமூகத்தின் மதிப்பை இழந்ததுஇரண்டு சமூகத்திற்கு இடையேயான பிளவு பல நுண் அலகுகளால் ஆனது என்பதால் அதன் உட்பிரிவுகளை உணர்ந்து தீர்வளிக்கும் இடம் சிக்கலாக உருவெடுக்க மாநில தலைவராக தொகுதி தலைவர்களுடன் மட்டும் தொடர்புறுத்திக் கொண்டால் போதுமானது என தலைவர் சண்முகம் நினைத்திருக்கலாம். அது மிக விரிவான களம் அதனுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவது மைய இலக்கை சிதைக்கலாம் எனவும் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது . ஆனால் தனது செயல்பாடுகள் வழியாக  மிக விரிவாக மனிதர்களை சென்று தொடும் அவர்களுடன் எந்த தயக்கமும் தடையும் இல்லாதவரான சண்முகம் அப்படி நினைத்திருக்க வாய்ப்பில்லை


பின் என்ன நிகழ்ந்திருக்கும். சம பலமுள்ள பிற தலைவர்களுடன் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்ள விழையும் சூழலில் விரிவான தொடர்புகளை பேணக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை அல்லது அப்படி உருவாகும் வாய்ப்புள்ளவர்களை தொடர்ந்து நிராகரித்தார். எதிர் கால திட்ட வெளிப்பாடு என்பதுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தலைவர் சண்முகம் அன்றாட அரசியலில் சமரசங்களுக்கு மத்தியில் அல்லாடிக் கொண்டிருந்தார் அந்த சூழலில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாவது பல சிக்கலுக்கு வழிவகுக்கும் என ஊகித்திருந்தார் என்றால் அது நிஜம். இரண்டாம் நிலை தலைவர்கள் கிடைத்த அதிகாரத்துடன் நின்று விடுவதில்லை அவர்களின் முன்னகர்வு மூத்த தலைவர்களை நிராகரித்தே நிகழ்ந்திருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...