https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 4 ஜூன், 2025

அடையாளமாதல் * ரேகை *

 



ஶ்ரீ:



பதிவு : 679  / 868 / தேதி 04 ஜூன்  2025



* ரேகை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 77.






ஒவ்வொருவரின் செயல்படும் தன்மை அவர்களது கைரேகை போல தனித்துவம் கொண்டது. பிறர் அதை ஒருபோதும் நகல் செய்ய முடியாது. அதை தனியாளுமையாக நினைக்கிறேன். தலைமை பொறுப்பு பெற்று எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் மேலதிக முன்னகர்வு பற்றிய புதிய திட்டங்களும் அதற்கான பாதைகளும் அந்த பயணத்தின் போது அடைவது என் இயல்பு. அந்த திட்டங்களுக்கு முன் மாதிரிகள் என எதுவும் எப்போதும் இருந்ததில்லை. அவை சவால்கள் நிறைந்த களத்தில் நடைமுறை சிக்கல்களால் சூழ்ப்பட்டு பிறர் முயற்சிக்க அஞ்சும் ஒன்றின் மிக அருகில் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். முதல் முறையாக அவற்றை புரிந்து கொள்ள முயலும் போது அதன் நடைமுறை சிக்கல்களை தாண்டி அதிலுள்ள செயல்படும்படி தூண்டும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படும். பிறகு அதை முயற்சிக்க நான் தயங்குவதில்லை. நான் எடுத்த துறையில் வெற்றியடைந்ததற்கு முக்கியமான காரணி. என்னை சுற்றி நின்ற நட்பு வளையம் அதை உறுதி செய்தது 


அதில் ஒரு வகை வாய்ப்பும் அதன் பலன் பற்றிய ஊகங்களும் கற்பனையை துவக்கி கொடுக்கிறது. அதன் இடக்கரடகல்களை முதலில் அவதானிக்க துவங்கி பின் அதற்கான பின்புல சிக்கல்களை கலையத் துவங்குவேன். அதன் துவக்கமும் காரண காரியங்களும் மிக சரியாக பொருந்தி வரும் வரை காத்திருப்பது அதன் அடுத்த கட்டம். அவைகளே எப்போதும் எனது பாதைகளாக இருந்திருக்கின்றன. ஆகவே அந்த பாதைகளில் அதுவரை சட்டங்கள் என ஏதும் இருந்ததில்லை . நான் அங்கு புதிய நெறிகளை உருவாக்க துவங்குவேன்


மிக கவனமாக ஆட வேண்டிய விளையாட்டு. முப்பது வருட அரசியல் அனுபவம் துணை செய்தது. தேர்ந்தெடுத்திருந்த இளம் தலைவர்களைக் கொண்ட தொகுதி அமைப்பை உருவாக்கினாலும் மாநில நிர்வாகிகளில் பெரும்பான்மையினர் எனக்கெதிராக திரண்டபடி இருந்தனர். அது அரிசுவடி அரசியல். அதை கடந்தே வளர விரும்பும் ஒருவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மாநில தலைவரால் தன் கீழ் பணியாற்ற வரும் நிர்வாகிகளை தில்லி தலையகத்திற்கு சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். நியமிப்பது அவர்களின் கைகளில் இருந்தது என்பதால் நினைத்த படி மாநில நிர்வாக அமைப்பை மாற்றியமைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அதை மாற்றியமைக்க முயலும் தோரும் புதிய சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி வரும். தில்லி எப்போதும் தலைவர் சார்ந்து செயல்பாடாது. அது எப்போதும் அனைத்து தரப்பு தலைவர்களின் இடையே ஒரு சமரச புள்ளியை உருவாக்குகிறேன் என்று ஆரம்பித்து குழப்பியடிப்பதை பல பத்தாண்டுகளாக பார்த்திருக்கிறேன். அது காங்கிரஸின் சாபங்களில் ஒன்று. ஒரு முரண்நகை. தலைவரை தேர்ந்தெடுத்து விட்டு அவருடன் இணக்கமாக செல்லவிரும்பாத பல உள்ளூர் தலைவர்களின் சிபாரிசுகளை உள் கொண்டு வருவதன் வழியாக அவர்களால் எப்போதும் செயலின்னமைத்தான் உருவாக்க முடியும்.அதை எதிர்த்து போராடுவது வெட்டிவேலை என்பதால் பல மாநிலங்களில் அமைப்பு முழுமையாக செயல்பாடாது திகைத்து நின்றிருப்பதை பார்க்க முடியும்


புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் வல்சராஜ் உள்ளூர் கட்சி அரசியல் குளறுபடிகளை கையாள்கிறேன் என துவங்கி அதன் உள் நுட்பம் அறியாது செய்து வைத்து தலைவர் சண்முகத்திடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வழமையானது. நான் அவருக்கு உதவ முடிந்தாலும் அதை செய்ததில்லை. காரணம் உள்ளூர் அரசியல் சிக்கல்கள்களை நான் கையாண்டு கொண்டிருந்தேன். அவரிடம் செல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஏதாவதொரு வகையில் எனக்கு சம்பந்தப்பட்டதாக இருக்கும். எனக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வல்சராஜிக்கும் நல்ல உறவு எப்போதும் இருந்தது. கட்சி நிர்வாகத்திற்காக எனக்கெதிராக திரள்பவர்களை வல்சராஜ் எப்போதும் ஆதரித்தார். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். நடுநிலை வகிப்பவராக தன்னை முன்னிறுத்தியது காரணம். தலைமை பண்பு என்பது அனைவருக்கும் பொதுவில் தன்னை வைத்துக் கொள்வது தான் .ஆனால் சிக்கல் எழும்போது என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்தாக வேண்டும். அதை செய்ய மறந்தால் ஆளுமை பாழ்பட்டுப் போகும். உட்கட்சி அரசியலில் எழும் சிக்கல்கள் அனைத்திற்கும் தனிப்பட்ட அரசியல் காரணமும் நோக்கமும் இருக்கும். அதன் உண்மைத்தன்மையை அறிய அந்தந்த பகுதியில் நிலை கொண்டிருக்கும் பலவித சமன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு உள்ளூர் தலைமையும் கண் அறியாத சராடால் தொடுக்கப்பட்டிருப்பார்கள். சிக்கல் எதிர்படும் போது எந்த சரடை பற்றி இழுக்க வேண்டும் என்பதை அறிய அங்கு நிலவும் முரணியக்கத்தை அறிந்திருக்க வேண்டும்


வல்சராஜ் தன்னை வைத்திருந்த இடம் யாருக்குமானதாக இல்லாமலாகி அவரது நிலையை சங்கடமாக்கியது. ஒரு கட்டத்தில் அனைத்திலிருந்தும் விலகி நின்றார் . அதன் பின் உருவன இடைவெளியை நிறைக்க நான் அமைப்பை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததேன் . மாநில நிர்வாகிகளில் சிறு கூறு தொடர்ந்து எனது செயல்பாடுகளை நிராகரித்து வந்தது. ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு அழைப்பிதழை அனுப்பும் போதும அந்த நிராகரிப்பு தொடர்ந்தது. அதன் பின்னரே நான் மாநில நிர்வாக அமைப்பை ஒதுக்கி என்னுடன் இணைந்து பயணிக்க விரும்பும் இளம் தலைவர்களை கண்டடைந்து அவர்களைக் கொண்டு தொகுதி அமைப்பை உருவாக்கினேன்


அவர்களை கொண்டு தொகுதி அமைப்பை நியமிப்பது பொதுச் செயலாளரான எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதில் தனது ஆதராவளர்களை மட்டும் நியமிப்பது என அதுவரை இருந்த மாநில தலைவர்கள் செய்த தவறை நான் செய்ய விரும்பவில்லை. மாநிலம் முழுவதும் பலம் பெற்றிருந்த இளம் தலைவர்களை கண்டடைந்து அல்லது உருவாக்கி அவர்களைக் கொண்ட தொகுதி அமைப்பை உருவாக்கி இருந்தேன். அவர்களுக்கான செயல்பாட்டு களத்தை உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்பத்திற்கு காத்திருந்த போதுதான் மத்திய வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்து சமச்சீர் வரியும் அதற்கு எதிராக நடத்த போராட்டங்களும் எனக்கான வாய்ப்பை கொடுத்தது. அதை ஒரு கட்சி போராட்ட திட்டத்தில் இருந்து விரிவு படுத்த நினைத்தேன். பலகட்சி அமைப்பை ஒருங்கிணைக்கும் திட்டம் அப்போது உருவானது. அதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்று.


புதுவை மாநில கட்சி அரசியல் களத்தில் பல அமைப்புகளின் இளைஞர் அணிகள் புதுவை இளைஞர் காங்கிரஸ் தலைமையில் ஒருங்குதிரளும் வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.மிக முக்கிய நகர்வு. அதில் உள்ள சிக்கலான உள்ளீட்டு சமன்பாடுகள் பிறரை அதை முயற்சிக்க முடியாமல் வைத்திருந்தது. அரசியலில் கட்சிக்கு வெளியே பிற அமைப்புகளுக்கு தலைமை ஏற்பது ஒரு மிக முக்கிய தருணம். அது எளிதில் அமைவதில்லை. அதை ஒருவர் முணைந்து உருவாக்கிட முடியாது. களம் சூழல் நிர்பந்தம் போன்ற பல காரணிகள் ஒருங்கு திரண்டு வரும் சமயத்தில் மிக எளிய துவக்கமாக அமைந்து விடுவதை முதல் நகர்வாக எடுத்துக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக