ஶ்ரீ:
மணிவிழா - 73
03.04.2026
* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-3 *
ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப்பிடுகிறது. ஒருவர் பிறிதொருவரை அப்படித்தான் புரிந்து கொள்கிறார். அவை உலகலாவியவை என்கிற எண்ணம் உருவாகிவிடுகிறது. மீள மீள அதை உறுதிபடுத்தும் செய்திகளை வாரி அதன்மீது குவித்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அவை எண்ணிக்கையில் மிக பிரம்மாண்டமானவை என்பதால் நவீன உள்ளம் மயக்கமடைகிறது. தனது லாபம் கருதி அதை மேலும் மேலும் அணுகி இன்னும் உறுதியுடன் நம்புகிறது. பொரும்பான்மை என்பது எல்லாவற்றின் குறியீடாக பார்ப்பது சரியல்ல அந்த முறை அறக் கோட்பாடுகளுக்கு அணுக்கமானதுமல்ல. “வல்லவன் வகுத்தே வாய்க்கால்” என்பதை உலகியல் நியாயமாக பார்பதற்கு பதில் அதில் உள்ள “பகடியை” தான் என்னால் ஊகிக்க முடிகிறது.
புறவய உலகில் அரசியல் சரிநிலைகள் என மனதை சந்தை பொருளாதாரம் மயக்கச் செய்யும் இது போன்ற பகடி சொற்கள் பல்லாயிரம் அதன் உண்மை பொருளை உணராது நியாயப்படுத்துதல் அல்லது குறைத்தல் வாதத்தில் உள்ள உண்மை நிலை உணராமல் சமூக பயன்பாட்டின் பொருளை மட்டும் உறுதியாக நம்பி குடும்ப உறவுகளில் அவர்கள் உருவாக்கும் கடும் சீரழிவுகள் எளிதில் கடந்து செல்ல இயலாதவைகள் மட்டுமல்ல அப்படி சென்னவர்கள் நல்லூழின் வழியாக ஒருகால் மாற்றமடைந்து திரும்பி வர நினைத்தாலும் மீள இயலாதபடி அவை பாதைகள் அற்றவைகளாக தூர்ந்து போயிருப்பது துரஷ்டவசமானது.
ஆழ்மனம் ஒருபோதும் ஞானிகள் அல்லாது பிறரால் கட்டுப்படுத்த இயலாது. ஞானிகளே கூட பல சந்தர்பங்களில் அதிலிருந்து நழுவி விழுவதை புராணங்கள் எங்கும் சொல்லப்பட்டிருக்கின்றன . ஆழ்மனம் பேரிருப்பின் வல்லமையால் இயங்குவது. அது அறம் மற்றும் விழுமியங்களால் மிக நெருக்கமாக பயணிக்க முயலலாம். அறக்கோட்பாடுகளை விழுமியங்கள் உருவாக்கி அளிக்கும் கருவியான ஆழ்மனதின் மேலடுக்கை சமாதனப்படுத்தி விட இயலலாம் என்பது கூட ஒரு பாவனை மட்டுமே அதன் அடியில் உறையும் பிறிதொன்று எதனாலும் அடங்குவதில்லை.
இந்திய தொல்மரபு ஞானேந்தியங்களான “கண், காது, மூக்கு, நாக்கு என்கிற நிரையில் “தொகு” என்கிற தோலை இறுதியில் வைக்கிறது. தோல் எப்படி ஞானேந்திரியமாக இருக்க முடியும். தோல் நேரடியாக மனதுடன் தொடர்புடையாது அதன் மயிர்கால்கள் பிறிதொரு உள்வாக்கும் மற்றும் வெளிபடுத்தும் கருவியாக செயல்படுகிறது. பல்லாயிரம் கோடி கண்களுக்கு புலனாகாத சரடுகளால் இணைக்கப்பட்டு புறவய உலகை மானுட உடல் எல்லையை கடந்த தொடர்புறுத்துகிறது . மனம் நேரடியாக தோலுடன் தொடர்புடையது என்பதால் மனுட இன்பங்களில் பலவற்றை அது அந்த தோலின் வழியாக அடைகிறது. உடல் மொழி என்பதும் உணர்வு நிலைகளை மிக துல்லியமாக வெளிப்படுத்தும் கண்களை கடந்து ஒருவரை ஆழ்மனம் புரிந்து கொள்ள உதவுவது அவரது உடலின் வெளிப்பாடு. அது நமது அவதானிப்பை புறந்தள்ளி நமக்குள் பிறிதொரு உணர்வை கடத்திவிடுகிறது. எல்லோருரையும் அந்த நுண் செய்தி தொந்தரவு செய்கிறது ஆனால் மிக சிலரே அது சொல்லும் செய்திகள உய்த்துணர்கிறார்கள் தங்கள் நிலைபாடுகளில் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்கிறார்கள். தங்கள் செயல்பாடுகளை அதிலிருந்து மறுவரையறை செய்து கொள்கிறார்கள்.
நவீன இளைஞர்களின் மனம் உலகியல் நியாயங்களை எடுத்துக் கொள்ள அவர்களின் சிந்தனையில் அறம் உருவாக்கி அளிக்கும் விழுமியங்களை மறுதளிக்கின்றன.
நவீன தலைமுறை தங்களுக்கு கையளிக்கப்பட்ட அல்லது இன்னதென அறியாத ஆழ்மனம் தெரிவு செய்து அளித்து அதுவரை கொண்டிருந்த விழுமியங்களை கூட வெறும் பொருளியல் நோக்கின் அடிப்படையில் கைவிட நேரும் போது உருவாகும் அறக் குழப்பம் அவர்களை மனப்பிளவிற்கு இட்டுச் செல்கிறதா? என்றால் என்னால் அதை அறுதியிட்டு சொல்ல இயலவில்லை. ஆனால் அனைவரையும் அது மிக நுண்மையாக பாதிக்கிறதா? என்றால் பதில் ஆம் என்றே நினைக்கிறேன் .
யாரை நோக்கி இது பேசப்படுகிறது? என்பது அடுத்த கேள்வி. மனம் கட்டுக்குள் அடங்காமல் மனப்பிளவை நோக்கி செல்லும் சிலரை பற்றி அவதானிக்க ஒட்டு மொத்த கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் அவதானிக்க தோன்றுகிறது. அதற்கு இலக்கியம் ஆகச் சிறந்த கருவி. அங்கு மட்டுமே சமூகம் வழியாக ஆழ்மனம் வெளிப்படுகிறது. வரலாற்றில் பொதிகிறது பின் எல்லோருக்குமானதாக எக்காலத்திற்குமானதாக உருவெடுக்கிறது.
வாழ்வியல் முறைகளில் விழுமிய கோட்பாடுகளை கொண்ட ஒருவர் சட்டென உணர்வு பெருக்கால் தன்னறம் நோக்கி மிக ஆழமான கேள்வியை உருவாக்கிக் கொள்ளும் போது அப்படி நிகழு வாய்பிருப்பதாக நினைக்கிறேன். தன்னை ஏமாளியாக உருவகிக்கும் மனப்பான்மை மிக எளிதில் அந்த உலையின் அருகில் கொண்டு சென்று விடுகிறது. அதுவரை உருவாக்கி வைத்திருந்த விழுமியங்களை் அனைத்தின் மீதும் உருவாகும் நம்பிக்கை இழப்பு ஒருவித விசை போல அனைத்தையும் புரட்டி விடுகிறது. மன ஊஞ்சலின் பிறிதொரு முனை தன்னிறக்கத்தின் பக்கம் சாய்ந்து விட்டபின் உருவாகும் வெடிப்பு அனைத்தையும் துவக்கி வைக்கிறது.
ஏறக்குறைய அதன் அருகில் இருந்த எனக்கு அந்த உச்ச நிலை ஏன் ஏற்படவில்லை என்பதை இப்போது கேள்வியாக எழுப்பிக் கொள்கிறேன். முக்கியமான காரணியாக நான் நினைப்பது மனத்தின் செயல்பாட்டை ஒரு புள்ளியில் முற்றாக கைவிடுதலில் இருந்து அது துவங்குவதாக இருக்கலாம் . தர்க்க மற்றும் தத்துவங்களை அப்போது மனம் முழுமையாக நிராகரிக்கரிக்கிறது. எனது நல்லூழின் காரணமாக என்மனம் ஆழ்மனதின் பிறிதொரு அலகால் அழகியல் உணர்வை நோக்கி செலுத்தப்பட்டேன்.
அதுவரை மதம் சார்ந்த தர்க்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு அந்த உளக் கொந்தளிப்பு சூழலில் அதன் அருகில் கூட செல்ல முடியாது விரட்டப்பட்டேன். கிருஷ்ண பிரமி எனது ஆச்சாரியனின் குரு என்கிற முறையில் அவர் எனக்கும் குருவிற்கு சமானமானவர். பலர் எனக்கு அவரின் உபன்யாசம் குறித்து சொன்ன போதெல்லாம் நான் அவரை முழுமையாக நிராகரித்தேன். ஆழ்மனத்தில் எங்கோ அவரிடம் எனக்கிருந்து ஈர்ப்பு என்னை முழுமையாக அவரை நோக்கி செலுத்தக்கூடும் என்கிற அச்சம் இருந்தது. அன்று அத்வைத கோட்பாடுகள் மீது எனக்கு வெறுப்பில்லை என்றாலும் அது மனதை குழுப்புவது என ஊகித்திருந்தேன் என்பதால் அது எனது அடிப்படை நிலைப்பாட்டிற்கு எதிரானது என உறுதியாக நினைத்தேன். பற்றி இருக்கும் சரணாகதி தத்துவத்திற்கு எதிரான எதை நோக்கியும் ஒருவித பாராமுகம்.
உளக் கொந்தளிப்பின் உச்ச தருணத்தில் சிந்தனை செயல்பாடுகள் கடும் தொந்தரவை கொடுத்த சூழலில் அதிலிருந்து விடுபட மனத்தின் ஒழுக்கிற்குள் பயணபட முடிவெடுத்த போதுதான். நீங்கள் ஒருவருடன் காரில் பயணத்த போது கிருஷ்ணபிரேமியின் உபன்யாசம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அது ஒரு கீதா முகூர்த்தம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக