https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 27 நவம்பர், 2018

அடையாளமாதல் 422 * உள்கை*


ஶ்ரீ:



பதிவு : 422 / 587 / தேதி 27 நவம்பர்    2018

* உள்கை


எழுச்சியின் விலை ” - 23
முரண்களின் தொகை -01 .





என்ன காரணத்தினாலோ நாராயணசாமியின் மீது எனக்கு ஒரு வித ஒவ்வாமை இருந்தது . தலைவருக்கும் அவருக்குமான முரண் அதில் எந்த பங்குமாற்றவில்லை. எனது முடிவுகள் எப்போதும் என்னுடன் நிகழ்வதை கொண்டே இருந்தருக்கிறது. பிறரின் அனுபவங்கள் அதில் சில மாற்றங்களை கொண்டுவரலாம். அடிப்படையை மாற்றுவதில்லை . அவர் தனது விழைவுகளை அடைவதற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற லௌகீகமான , லோகாயதமான கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராக எனது மனம் மதிப்பிட்டிருந்ததால் என. மனதில் அவரை பற்றிய விலக்கம் இருந்தது.

1996 ல் ஆட்சியை இழந்த பிறகு ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுவது தேவையற்ற சிக்கலை கொண்டுவரும் என தலைவர் கணித்திருந்தார். ஆனால் அதில் உறுதியாக நிற்க இயலாத இடத்திற்கு அவர் எப்போதோ வந்து சேர்ந்திருந்தார் . எல்லா தர்க்ககளையும் தகர்க்கும் எதிர்வாதம் எப்போதும் அவரிடம் உண்டு , அதை பலமுறை செய்து தான் நினைத்ததில் வெற்றியும் பெற்றிருக்கிறார். காலத்தினால் தனக்கு எதிராக தனது உள்ளமைப்பிற்குள் ஒன்று எழும் என அவர் எப்போதோ கணித்திருக்க வேண்டும் , இப்போது இந்த ராஜ்யசபை தேர்தல் மூலம்  அது எழ வாய்ப்பிருந்ததால் அதை தவிர்க்க நினைத்தார்

1986ல் நாரயணசாமி ராஜ்யசபை உறுப்பினாராக சென்றபோது சண்முகத்தின் வீழ்ச்சிக்கான விதை விழுந்தது என அவர் நினைத்திருக்க  வாய்பபில்லை. தில்லியின் சண்முகத்தின் முகமாக அவர் சிற்ப்பாக செயல்பட்டதாகவே நானும் நினைகிறேன் . ஒருவரின் தயவில் பதவிக்கு வந்த பிறிதொருவர் அவருக்கு கடன்பட்டவரே , ஆனால் அதற்கு ஒரு எல்லை இருந்திருக்க வேண்டும் . யாரும் யாருக்கும் எதையும் சாஸ்வதமாக கொடுப்பதோ , பெருவதோ நிகழ்வதில்லை . அந்த மாற்றத்தை துரோகம் என ஒற்றைபடையாக எடுத்துக் கொள்ள இயலாது
அரசியலில் பல காலம் நிகழ்ந்து வந்த கொள்வதும் , கொடுப்பதும் ஏதாவதொரு புள்ளியில் முரண்பட்டேயாகவேண்டும் . ஒருவரை பிறிதொருவர் சந்தேகிப்பது நடைமுறை யதார்த்தம். அதை கலைந்து கொள்ள இருவருக்குமான பலவித உரையாடல்கள் எப்போதும் நடந்தேறிய படி இருக்கும் . ஏதோ ஒருப் புள்ளியில் ஏற்படும்  கசப்பு ,அவர்கள் தங்களை எதிரெதிரே என நிறுத்தக் கொண்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் நீண்ட நெடுங்காலம் ஒருவர் பற்றிய பிறிதொருவரின் ஐயம் அனைத்தும் முழு உண்மையாகி விடுகிறது.

தலைவரின் தில்லியின்  குரலாக நாரயணசாமி இருந்தவரை தில்லியிலிருந்த தலைவரின்  தொடர்புகள் பலம் வாய்ந்தவை.புதிய தலைமுறை எழுச்சி அவரால் முன்போல நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதபடி பலத்தடைகள் உருவாகி வந்தன . மொழி அதில் பிரதானமாக இருந்தது. பழைய விசுவாசங்களுக்கு பெரிய மதிப்பில்லாத காலமாக காங்கிரஸ் மாறியிருந்தது . அதன தொடக்கம் ராஜீவ் காந்தியின் காலத்தில் கட்சிக்குள் நிகழ்ந்த மாற்றம் வேகமெடுத்த காலம். பல புதிய தலைவர்கள் எழுந்து வந்தார்கள் . ராஜ்யசபை நடவடிக்கைகளில் அன்று மூன்று சாமிகளின் பெயர் வராத நாளில்லை திமுக வின் கோபாலசாமி, சுப்ரமணியசாமி மற்றும் நாராயணசாமி.

இந்த சூழலில் நாராயணசாமியின் அபரிதமான வளர்ச்சி சண்முகத்திற்கு கலக்கத்தை உருவாக்கியிருந்தால் அதில் ஆச்சர்யமில்லை. மூன்று முறை தொடர்ச்சியாக ராஜ்யசபை உறுப்பினராக பதவி வகித்து நான்காவது முறை அதற்கு முயற்சித்த போதுதான் , அவர்களுக்குள் பனிப்போர் மூண்டது. இம்முறை நாராயணசாமிக்கு வாய்பளிக்க சண்முகம் விரும்பவில்லை . ஆனால் அவரின் கருத்துக்களின் அடிப்படையில் செயல்படவேண்டிய நிரபந்தத்தலிருந்து நாராயணசாமி எப்போது வெளியேறியிருந்தார் . அதுநாள் வரை அனைத்து முடிவுகளும் சண்முகம் எடுக்க அதை செயல்முறை படுத்திய நாராயணசாமி ,தனித்து செயல்படத் துவங்கியது இந்தப் புள்ளியிருந்து

சண்முகத்தை அவர் நன்கு அறிந்திருந்தார் . தன்னுடனான முரண்பாட்டின் பொருட்டு நேர்முக எதிர்ப்பில் அவர் இறங்க மாட்டார் என்பது சண்முகத்தின் பலமும் பலவீனமும். ஒரு கட்டத்தில் அவர் அதை நேரடியாகத் துவங்கும் போது , நாராயணசாமி தனது பாதையில் நீண்ட தூரம் சென்றிருப்பார். ராஜ்யசபை தேர்தல் வியூகத்தில் நாராயணசாமிக்கு தில்லியின் ஆதரவிருந்ததால் உள்ளுக்குள் அவருக்கு எதிராக ஏதாவது செய்யதாலன்றி தடுக்க இயலாது என்கிற சூழல் உருவாகியது. சண்முகம் நிகழ்த்திய சில கூடுகை அவருக்கு எதிரான பலனையே தந்திருந்தது

நாராயணசாமி நிற்பது உறுதியானது. அங்கிருந்து அவர் தனித்து செயல்படத் துவங்கினார். ராஜ்யசபை தேர்தல் வேறுவிதமானவை . சட்டமன்ற உறுப்பினர்களே அதன் வாக்காளர்கள் . புதுவையின் மொத்தம் 30 உறுப்பினர்களில் 16 வாக்கு பெற்றால் அவர் வெற்றியடைந்து விடுவார் , அன்றைய சட்ட சபை நிலவரம்.காங்கிரஸ் 9 தனது கூட்டணியான அதிமுக 3 வுடன் சேர்த்து 12 சுயேட்சைமொத்தம் 14 , சபாநாயகரை சேர்க்காமல் பார்த்தால் சம பலம் ஒரு ஓட்டு மாறி விழுந்தால் நாராயணசாமி வெற்றி பெற்றுவிடுவதுடன் , ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அரசு கவிழ நேரிடும் . பல விதமான குதிரை பேரம் நடப்பதாக பெருங் கூச்சல் எழுந்து கொண்டிருந்தது


1996 முதல் தில்லியிலும் ஸ்திரத்தனமை இல்லாத அரசுகளே வந்தன . மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த பஜக அரசு 13 நாள் 13 மாதம் என இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து. அதிமுக வின் ஓட்டு பெற இயலாது வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது . அதில் காங்கிரஸுடன் இணக்கமாகியிருக்க வேண்டிய ஜெயலலிதா சட்டென காங்கிரஸிடமிருந்து விலகிப் போனார் . இந்த சூழலில் அதிமுக வின் வாக்கு ராஜ்யசபை தேர்தலுக்கு மிக முக்கியமான ஒன்று , நாராயணசாமி , தலைவர் ஜெயலலிதாவிடமுள்ள அவரின் தனிப்பட்ட செல்வாக்கை பயண்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க . சண்முகம் மௌனமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...