https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 1 நவம்பர், 2018

அடையாளமாதல் - 413 *இணை உலகம் *

ஶ்ரீ:


பதிவு : 413 / 576 / தேதி 01 நவம்பர்    2018

*இணை உலகம் 


எழுச்சியின் விலை ” - 14
முரண்களின் தொகை -01 .




மாறி வருகிற அரசியல் சூழலையும் அதனால் எழவிருக்கும் விளைவுகளையும்  பிறிதெவரையும் விட எனது அனுக்கர்கள் முதலில் உணர்ந்திருந்தார்கள்  என நினைக்கிறேன் . அவர்கள் அமைப்பின் புதிய பதவிகளுக்கு தங்களுக்கு நெருக்கமானவர்களை உட்புகுந்த காட்டிய ஆர்வம் என்னை அப்படி சிந்திக்க வைத்தது . அது ஒரு அபிப்ராயம் போல என்னிடம் சொல்லப்படும் என்றுதான் நான் முதலில் யூகித்திருந்தேன் , ஆனால் நிர்பந்தித்து கருத்தால் என்னை சுற்றி வளைப்பார்கள் என நினைக்கவில்லை. என்னைப் பற்றிய சரியான புரிதலை அவர்கள் உருவகிக்க நான் இடம் தரவில்லை என்பதை அது காட்டியது என்கிற முடிவிற்கு வந்ததும்  , சரி அது அப்படியனால் என்னைப் பற்றிய புரிதலும் எனது இலக்குகளும் அவர்களுக்கு இங்கிருந்து தொடங்கி வேண்டும் என முடிவு செய்தேன் .

எனது அரசியல் என்னை நிலைபடுத்திக் கொள்வதை மட்டும் நோக்கமாக கொண்டதல்ல . அது அஅரசியலின, ஆரம்ப கால பால விளையாட்டு. அதன் உட்பக்கம் என்ன எப்பதை அறிந்த கசப்பு , இனி ஒருநாளும் அதை நோக்கி பயணிப்பதில்லை என்கிற தெளிவை எனக்கு கொடுத்திருந்தது. அதை இவர்களிடம்  என்னால் விளக்கிக் கூற இயலாது , ஒரு கட்டத்திற்கு அப்பால் அது நடிப்பாக பார்க்கப்படலாம்  , தத்துவங்களுயுமகோட்பாட்டு அரசியலையும் சொல்வது கைசரக்கில்லாதவனின்  பாதை என்றே புரிந்து கொள்ளப்படும் .

அவர்கள் சிபாரிசு செய்த நபர்களைவிட நான் நியமிக்க நினைத்திருந்தவர்கள் வேறு வகையானவர்கள் . அது அவர்களுக்கும் தெரியும் . காரணம்  அனைவரிடமிருந்து எழுந்து வந்தவர்கள் .அவர்களுக்கு மத்தியில் புழங்கியவர்களேஎவ்விதத்திலும்  பிற எவருக்கும் ஈடு இல்லாதவர்கள் . இருந்தும் தங்களின் பரிந்துரையை நான் ஏற்க வேண்டும் என எனது அனுக்கர்கள் தங்களின் அரசியலை என்னிடமிருந்தே துவக்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது
பரிந்துரைகள்  வெளிப்படையாக மறுத்தால்  அது அவர்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லக்கூடும் . அதனால் எழும் முரண்களை அவர்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முடியாது. காலம் அதை செய்யும் . அப்போது அவர்களாகவே தங்கள் முரண்களைக் களைந்து கடந்து வர நான்  காத்திருக்க. என்னை பொறுத்தவரை அனைவருக்கும் நான் உருவாக்க நினைத்த அமைப்பில் ஒரு இடம் கொடுக்கப்பட்டது , கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்கள் விழையும் இடத்திற்கான பாதையும் இருக்கிறது.

என்னால் முக்கிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சிலரும் கூட  தங்களை இன்னும் உயரத்தில்  கொண்டு நான்  வைத்திருக்க வேண்டும் என விரும்பினார்கள் , அது சாத்தியமில்லாதது . கட்சிப் பதவி என்பது அரசாங்க உத்யோகம் போல ஒரு சட்டக வரைமுறைக்கு உட்பட்டதல்ல , தங்களின் சாமரத்தியத்தால் தங்களுக்குள் உறையும் அழகியலால் , யாரால் எவ்வளவு தூரம் அதை விரித்தேடுக்க முடியுமோ அதன் எல்லைகளையும் அது தாண்டி விரியக்கூடியது , அழகியலும் கற்பனை வளத்தாலும் அதை விரித்தெடுக்க முடியும் சிந்தனை வறண்டவர்கள் மட்டுமே எது கொடுக்கப்படுகையிலும் அனைத்தும் அதில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் . அது தன்னம்பிக்கை இல்லாதவன் பாதை

அனைத்து கமிட்டிகளையும் மிக குறுகிய காலத்தில் ஒருங்கி அதற்கான வரைவு தயாரான பிறகு அதுபற்றி தலைவரிடம் பேச ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன் . ஒவ்வொரு செயலுக்கு ஒருக்காரணமும் சூழலும் தேவை என நினைப்பவர் , அவர் பொறுத்தவரை தான் நினைத்ததைவிட நிகழ்ந்த செயற்குழு கூடுகை சிக்கலில்லாது முடிந்தது , அத்துடன் அவருக்கான இடர் தீர்ந்துபோனது , அதில் எனது  மேலதிக செயல்பாடு சிக்கலை வலிந்து அழைப்பது . அவருக்கான சிக்கல் வேறு தளத்தில் முளைவிடத் துவங்கியிருந்தது.

ராஜ்யசபை தேர்தலுக்கு பிறகு தலைவருக்கும் நாராயணசாமிக்கும் கருத்து முறைப்பாடு வெளிப்படையாக தெரியாதுபோனாலும் அனைவராலும் அது மிக ஆழத்தில் உணரப்பட்டது . அந்த ராஜ்யசபை தேர்தலில் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார் நாராயணசாமி. ஜெயலலிதாவின் அதிமுக தன்னை ஆதரிக்காத்தால் தோல்வியுற்றார்  நாராயணசாமி. அவர் வெற்றி பெற்றிருந்தால் ஜானகிராமன் தலைமையிலான திமுக கூட்டணி அரசு கவிழ்ந்நிருக்கும். சண்முகத்தின் உத்திழைப்பு கிடைக்காததால் தனது தோல்வி நிகழ்ந்தது என்பது அவரது எண்ணமாக இருந்தது . அதற்கு பின்புலமாக முதலியார் ஜாதி அரசியல் இருந்தது என்பது வெளிப்படையான குற்றச்சாட்டாக இருந்து கொண்டிருந்தது

சண்முகம் ஒத்துழைக்கவில்லை , அது உண்மையாகக் கூட இருக்கலாம். தன்னை தற்காத்து கொள்ள அரசியலில் யாருக்கு என்ன வரைமுறை என சொல்லப்படவில்லை. அவரவர் தங்கள் எண்ணத்தால் , சாமர்த்தியத்தால் , வாய்ப்பால் அதை விரித்தெடுக்கின்றனர். இதில் யார் சரி யார் தவறு எனக் கூறுவது சாத்தியமில்லாதது . நாராயணசாமி எண்ணியது போல சண்முகம் ஜெயல்லிதாவுடனான தனது தொடர்பை பயண்படுத்த மறுத்தார் என்பது உண்மை என்றாலும் , அதை தனக்கான சண்முகத்தின் துரோகம் என அவர் நினைத்திருந்தால் அது சரியானதுமாக கூட இருந்திருக்கலாம் . ஆனால் நிகழ் அரசியலில் எது சரி எது தவறு என அவரவர் மனசோட இயல்பில் எழுவது , மூன்றாம் நபருக்கு அதில் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இதன் பின்னர் நாராயணசாமி தனித்து இயங்க துவங்கினார் , அவரது இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி கூடுவதும் சில செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுமாக , அங்கு பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது . தலைவர் எப்போதும் போல அவர்களுக்கு எந்த முரண்பாடுமில்லை  என்பதுபோல தன்னிறுப்பில் இருந்தார் , அவர் சுபாவம் அது. அதற்கு எதிர்மறையாக எதையும் முன்வைக்க விழையும் பிறிதொரு தலைமை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்த நாள் விழா

  2022 ல் எனது மணிவிழாவிற்கு சரியாக ஒரு மாதம் முன்பு கோவையில் ஜெயமோகனுக்கு நண்பர்கள் எடுத்த மணிவிழாவில் கலந்து கொள்ளவும் உடன் ...