https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 நவம்பர், 2018

அடையாளமாதல் - 417 *கண்ணுக்குள் கனவு *

ஶ்ரீ:



பதிவு : 417 / 581 / தேதி 10 நவம்பர்    2018

*கண்ணுக்குள் கனவு 


எழுச்சியின் விலை ” - 18

முரண்களின் தொகை -01 .




அரசியல் நிலை ஒரு கனவுலக வாழ்வு , அதில் அது  விண்ணகத்தை பரிசளிப்பது . சில நேரம் நாம் அறியவியலா தருணங்களில் , நம்மை தன்னகத்தே கொண்டுவிடுகிறது . நீரில் தெரியும் வாணம் போல. எந்த தர்க்கத்திற்கும் இடமளிக்காதது  . யாரும் அதில் முழமையாக அமைந்திருக்க முடியாதபடி சிக்கலால்  சதாசர்வ காலமும் முணையறாத சிந்தனை சரடு , ஒன்றிலிருந்து பிறிதவன்றுக்கு , நம்மையும் அறியாமல் இழுத்துச் சென்று கொண்டே இருக்கிறது . ஒரு நாழிப் பொழுது கூட அது தான் சிந்திப்பதை நிறுத்துவதில்லை . அதற்கு நமது மெனக்கெடல் தேவைப் படுவதில்லை . அந்த சரடு அறுபடாதவரை , யாரும் எதிலும் திருப்தியுற முடியாது என அறிந்திருந்தேன்.  

அரசியல் எந்நேரமும் தனக்கான சிக்கலை எதிர்நோக்கி இருப்பது. சில சமயங்களில்  நாமே அதை ஊதி பெருக்கி விடுவதும் உண்டு . எது எங்கு தொடங்கி , யாரிடம் எப்படி சென்று முடியும் என்பது தெய்வங்கள் மட்டுமே அறிந்தது , அல்லது அதுவும் அறியாதது .   சாதக சூழல் என்பது ஊசி முணை அளவே கொண்டது போலும் , யாரும் அங்கு நிலைத்து வாழம்  காலத்தை அது கொடுப்பதில்லை. அது பல தொடர் நிகழ்வுகளின் மேல் கீழ் உள்ள உச்சப்புள்ளி என இருக்கலாம் . அதை அடைந்தவர் , அடைந்த அந்தக்கணம் முதலே வீழ்ச்சியடையத் துவங்கிவிடுகிறார்கள். அதன் பின்னர் பிறிதொரு உச்சத்தித்திற்கு காத்திருப்பதே அரசியலின் "இருப்பு" என உணராதவருக்கு அரசியலில் இடமில்லை என நினைக்கிறேன்.

எனக்கான மற்றொரு வாய்பபை பெற்று வெற்றியின் கால நீட்டிப்பு கிடைக்க அனைத்து தள நிர்வாகிகள் அமரும் அந்த கூடுகையை நுண்மையாக ஒருங்குவது பற்றியக் கனவிலிருந்தேன். நான் நினைக்கும் தடைபடாத களம் எனக்கு அதிலிருந்து உருவாகி வரலாம் . பிறருக்கு கிடைக்காத கணங்களை எனக்கு அது கொடுக்கக்கூடும் . அது பற்றிய திட்டத்திலிருந்தபோதுதான் , தில்லியின் பயிற்சி முகாம் பற்றிய செய்தியும், அதன் செய்முறை விளக்கத்திற்கான கூடுகையின் பொருட்டு, என்னை தில்லி கூட்டத்தில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பும் வந்திருந்தது. மிக குறுகிய கால அவகாசத்தில் அது கூடவிருந்ததால் . தகவல் கிடைத்த மறுநாளே நான் தில்லி கிளம்பிச் சென்றேன். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றது எனக்கு அகில இந்திய அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றம் குறித்த புதிய புரிதலை கொடுத்திருந்தது நான் நினைத்ததை அதில் கொண்டுவரும் திட்டத்தை அங்குதான் விரிவுபடுத்திக் கொண்டேன் .

புதுவை திரும்பியவுடன் முழு மூச்சில் பயிற்சி முகாம் குறித்த முன்வரைவை வைக்கும் கூடுகையை கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன . அது ஒரு நடிப்பு மட்டுமே . என்னால் நேரடியாக பயிற்சி முகாமை நடத்தியிருக்க முடியும். ஆனால் அதற்கு முன்பாக அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்கிற கனவை பிறருக்குள் விதைக்க விரும்பியே அந்த கூடுகையை பிறிதொரு தளத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன்ஹோட்டல் சற்குருவில் அதற்கான அனைத்தும் ஒருங்கியது.   விஷேச அழைப்பாளராக தலைவரை நான் அழைத்தபோதுதான்  , அவர் தான் வர மறுத்து  நாராயணசாமியை அழைத்து அதை நடத்த சொன்னார் . கடும் அதிருப்பதியில்,  “எனக்கு உடன்பாடில்லைஎன  நான் மறுத்து அவரது வீட்டிலிருந்து வெளியேறினேன் . கூடுகை தள்ளி வைக்கப்பட்டது.

வழமைப்போல தலைவர் என்னை விடுவதாக இல்லை . ஒருசில நாள் கழித்து அவரை சந்தித்த போது நான் ஏறக்குறைய கூடுகை திட்டத்தை கைவிட்டிருந்தேன் . தலைவர் தனது முடிவிலிருந்து மாறப்போவதில்லை . அது வெடித்து வெளிவரும் காலம் என் கணகளுக்கு ஒரு பருப்பொருளைப் போல  தெரிந்திருந்ததுதலைவர்களுக்குள் நடைபெறும் பனிப்போர் வெளிப்படும் அந்த நிமிடத்திற்கு  சில கணம் முன்புவரை, அமைப்பு ரீதியில் நான் வல்லமையுடன் இருப்பது அவசியமாகிறது. அதற்கு கட்சி தலைவர்களுக்குள் நடக்கும் பனிப்போரின் பின்னனி குறித்து அமைப்பில் உள்ளவர்களுக்கு சரியான புரிதல் இருக்க வேண்டும் . அது வெடித்து பறக்கத் துவங்கிய பின்னர் யாருக்கும் எதையும் புரியவைத்துவிட முடியாது . அரசியல் கருத்துகளுக்கு ஒன்றுக்கு மாற்று மற்றொன்று என  கிளம்பியபடி இருக்கும்.  

நான் அதுவரையில் வெளிப்படுத்த முடியாது தினம் சந்தித்துக் கொண்டிருந்த  உள்சிக்கலிருந்து வெளிவரும் முயற்சியே நான் நடத்த விழைந்த அந்தக் கூடுகையின் அடிப்படை நோக்கம் . அதற்கு நாராயணசாமியை அழைப்பது எனக்கு எதிர் விளைவை உருவாக்கும் என்பதை விட அது அர்த்தமிழந்து போய்விடும் . அதனால் கூடுகையை கைவிடும்படி நேர்ந்தது .அரசியல் சூழ்தல் மிக நுட்பமானது நிஜமான காரணங்கள் மேலெழுந்து வராமல் அடியாழத்தில் இருந்து கொண்டு  அதன் தன் உட்பொருள்வராது பொதுநலனுக்காகவும் , அனைவரின்  வளர்ச்சிக்காகவுமே என அது  வண்ணக்கலவைகள் போல மயக்கும் ஒலிக்கொண்டிருக்கும், என்பதல் எவராலும் அதனை பிரித்து அறிந்து கொள்ள அதன் உப்பக்கம் காணவியலாது .

நான் நாராயணசாமியை வைத்துதான் அந்தக் கூடுகையை ஏன்  நிகழ்த்த வேண்டும் எனபதற்கு  சண்முகம் தனது  தரப்புக்  காரணமாக பல விஷயங்களை சொன்னபோதும் நான் அவற்றை மறுத்தபடி இருந்தேன் , அவர் இறுதியாக , “உன்னுடைய முயற்சி அதற்கான உன்னுடைய உழைப்பு அனைத்தும் எனக்கு தெரியும் , அதை மீளமீள  என்னிடமே  நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியமில்லை எனபதை நீ ஏன் உணரவில்லை . நாராயணசாமிக்கு உன்மீது என்ன காரணத்தினாலோ கடும் அதிருப்தி உள்ளது அதை சரிசெய்யும் வாய்ப்பாக இதை ஏன் நீ  பயன்படுத்திக்கொள்ளக்கூடாது " என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...