https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 8 நவம்பர், 2018

அடையாளமாதல் - 416 * நீர் வாணம் *

ஶ்ரீ:



பதிவு : 416 / 580 / தேதி 08 நவம்பர்    2018

* நீர் வாணம்


எழுச்சியின் விலை ” - 17
முரண்களின் தொகை -01 .





பாண்டியனை பொதுச்செயலாளராகக் கொண்ட  வெண்புறா சேனை என்கிற அமைப்பு , வெகு நாட்களுக்கு முன்பாக துவங்கப்பட்டிருந்து. வழமைபோல முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சபாபதியின் மறைமுகமான ஆதரவு அதற்கு இருந்தது என பலர் நினைத்தனர் . காரணம் அவருக்கு அனுக்கமான சிலர் அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலிருந்தார்கள். அது ஏன் அதுநாள் வரை செயல்பாட்டில் இல்லை என தெரியவில்லை. அந்த இயக்கத்தின் பின்புலத்தில் தான் , பாண்டியன் புதுவை அரசிற்கு எதிராக சென்னை உயரநீதி மன்றத்தில் பஞ்சாயத்து தேர்தல் குறித்து வழக்கு தொடர்ந்திருந்தான். புதுவையில் பஞ்சாயத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த வழக்கு நிலுவையில் இருந்ததே அதற்கு காரணம்

புதுவையில் 40 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை . அது நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு முனைப்பு காட்டிய தருணத்தில்தான் இந்த வழக்கால் அது தடைபட்டுப் போனது. இது குறித்து விரிவாக பின்னர் பதிவு செய்ய விழைகிறேன்வெண்புறா சேனையின் திடீர் சுறுசுறுப்பு, திட்டம்மிடப் பட்டிருந்த எனது  அனைத்து அரசியல் கட்டுமானங்களையும்  நிலை பிறழ செய்யத்  துவங்கின . என் சிக்கலை குறித்து  யாரிடமும் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை . குறிப்பிட்டபடி அவர்களின் கூட்டம் நடந்து முடிந்தது . அதில் விஷேச அழைப்பாளராக நாராயணசாமி கலந்து கொண்டார் . பலம்மிக்க இளைஞர் இயக்கமாக அந்த கூடுகையில் அவரால் அது வர்ணிக்கப்பட்டது . காங்கிரஸ் இயக்கத்திற்கான  தனியான இயக்கம் இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருக்குபோது, எதற்கு தனியாக ஒரு இயக்கம் என்கிற கேள்விகளுக்கு அவரிடம்  பதில்லை . மேலதிகமாக கட்சியின் பலவேறு பொறுப்பிலிருந்தவர்களே  அதிலும்  முக்கிய பதவி வகித்தாரகள்.
வெண்புறா சேனை கூடுகையில் நாழாயணசாமி உரையாற்றும்  போதுமுதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவி விலக வேண்டும்", என அவர் பேசியதாக செய்திகள்  அடுத்தநாள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பானது . பத்திரிக்கை செய்திகளைக்கொண்டு அரசியலை நிர்ணயிக்க முடியாத என்றாலும் , யார் அந்த முதியவர்கள் . அவர்கள் எந்த இயக்கத்தின் இளைஞர்களுக்கு  விட வேண்டும் . மேலும் இளைஞர்களை கொண்ட ஒரு தனி இயக்கம் ஏன் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது. கட்சியின் மூத்தவர்கள் பலர் இதுபற்றி முணுமுத்தனர் பிரதானம் சபாபதி , அவருக்கு என் மீது இருக்கும் அசூயை பாண்டியன்மீதும் உண்டு .காரணம் பாண்டியன் அவரது ஊரை சேர்ந்தவர் . சபாபதியின் அனுக்கர் திருநாவுக்கரசு . அவரும் வெண்புறா சேனை அமைப்பில் இருந்தார் . என்ன காரணத்தினாலோ அவரால் அதில் பாண்டியன் அளவிற்கு பிரகாசிக்க இயலாது போனது.

அந்தக் கூடுகையை பற்றி தலைவரே சிலரிடம் மறைமுகமாக கிண்டலடித்தாலும் நிலைமை அவர் கைகளை விட்டு நழுவிக்கொண்டிருப்பதை எங்களை போன்றவர்கள் அப்போது உணரவில்லை. என்னை பொறுத்தவரை நாராயணசாமிக்கு பின்னால் நின்றுகொண்டு பாண்டியன் தனது சொந்தக்கணக்கை துவங்கி இருக்கிறான் என்பதை வெளிச்சமான விஷயமானது .அவனது செயல்களுக்கு  நாராயணசாமியின் ஆதரவு உள்ளதாக எங்கும் அலர் இருந்தது , அரசியலில் சில விஷயங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியாது

அது  ஒரு நிழல் யுதம்போல துவங்கி விட்டதால் நான் உருவாக்கிய அமைப்பிருக்கும் பலருக்கு  இது சவாலாக இருக்கப் போவதை உணர்ந்தேன் . தனி நபரை சார்ந்திருந்த இயக்கத்தினரை பொது அமைப்பிற்குள் கொண்டுவரும் முயற்சிக்கு மத்தியில் வெண்புறா சேனை நுழைய முயல்வதை தனி நபர்  இயக்கம் என்பதை என்னால் வெளிப்படையாக விளக்க இயலாது . சில விஷயங்களில் அவர்கள் செய்வதை போன்று  என்னால் நான் நினைத்தபடி செய்ய முடியாது. அதை விளக்க முற்படுவதை போன்ற அரசியல் மடமை பிறிதொன்றில்லை . நான் கூட்டிய செயற்குழு கூடுகைக்கு எதிராக தலைவர் தரப்பிலிருந்து ஒன்று புறப்படும் என நான்நினைத்திருக்கவில்லை 

இளைஞர் காங்கிரஸ்அமைப்பிலுள்ள பலருக்கு என்னால் நிகழ்வதை வெளிப்படையாக பேச இயலாது போனது. என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் விரிவாக விளக்க இயலும் என்றாலும் அது பாண்டியனை எதிர்ப்பதாக துவங்கி பின்னர் ஒரு புள்ளியியல் நாராயணசாமியில் வந்து முடியும் . நான் அதற்குஅஞ்சியதில்லை . இதுபோல் ஒன்று சூல் கொள்ளும் என முன்பே அறிந்திருந்தேன். அதன் சுவடுகளை தெரிந்திருந்தாலும் , பாதையை கணித்திருக்கவில்லை . நான் வெளிப்படையாக பேச முயன்ற போது அதை செய்ய தலைவர் என்னை அனுமதிக்கவில்லை. நான் வேறொருசந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்

அந்த சந்தர்ப்பம் வாய்த்தது . மாவட்ட ரீதியில் தொகுதியின் பிரதிநிகளை கூட்டும் கூடுகை அமைப்பை முழுமையாக செயல்பாட்டில் கொண்டு வைக்கும் . பிற சிக்கல்களை அதுவே களைந்து கொடுக்கும் என்பதால் அந்த கூடுகை  பற்றிய சிந்தனையில் இருந்தேன் , அப்போதுதான் தில்லையிலிருந்து அரசியல் பயிற்சி முகாம் நடத்துவது பற்றிய செய்தி வந்தது . நான் முன்பே திட்டமிட்ட கூடுகையை பயிற்சி முகாம் பற்றிய முறைமைகளை கலந்து பேசும் கூடுகையாக  மாற்றி வடிவமைத்தேன் . அதற்கு தொகுதி தலைவர்களாக மற்றும் மாவட்ட பொறுப்புகளில் நான் நியமிக்க இருக்கும் இளம் தலைவர்களை கொண்ட கூடுகையாக அது இருந்தது  , ஹோட்டல் சர்குருவில் அதற்கான அனைத்தும் ஏற்படு செய்யப்பட்டது.  விஷேச அழைப்பாளராக தலைவரை நான் அழைத்தபோது , அவர் நாராயணசாமியை அழைத்து அதை நடத்த சொன்னார் . எனக்கு உடன்பாடில்லாததால் நான் மறுத்துவிட்டேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக