https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 5 நவம்பர், 2018

அடையாளமாதல் - 415 * நிழலின் நிஜம் *


ஶ்ரீ:பதிவு : 415 / 579 / தேதி 05 நவம்பர்    2018

* நிழலின் நிஜம் * 


எழுச்சியின் விலை ” - 16
முரண்களின் தொகை -01 .

தலைவர்களுக்குள்ளான பனிப்போர் எனக்கான கால சூழல் கனிவதற்கு பதில் குறுகுவதை அது சொல்லிற்று . நான் நிதானிப்பதில் எனது வாய்ப்பு கைநழுவிப்போகும் சாத்தியக்கூற்றையே பார்க்கமுடிந்தது . புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முன்பாக அவர்களுக்கு தங்களின் இடம் பற்றிய புரிதலை ஏற்படுத்த நினைத்தேன் . அவர்கள் கட்சியில் தங்களின் இடம் என்ன என்பது நினைவுமட்டுமே , அது குறியீடு அதை ஒரு  கூடுகை மூலமே வளர்த்தெடுக்க முடியும்  . 

மாநில நிர்வாகிகளும் , நான் நினைக்கும் தகுதிவாய்ந்த பலதரப்பட்ட இளைஞர்கள் கூடும் கூடுகை அவர்களது இடத்தை உறுதி செய்தால் நான் அமரவேண்டிய களம் எனக்கு கிடைக்கும் . செயற்குழுவின் வெற்றிக்கு பிறகு இதை நடத்துவது எளிது . செயற்குழுவின் வெற்றிக்கு காரணமும் அதனால் விளைந்த அடையாளமும் காலத்தால் நீர்த்துப் போவதற்கு முன்பாக அது மீளவும் ஒருமுறை கூடிவிட்டால் , புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் எனக்கு சிறிது அவகாசம் கிடைக்கலாம் . இது ஏறக்குறைய மாவட்ட அளவிலான உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டம்போலவே நிகழ்ந்துவிடும். யாரும் எதிர் நிற்க விருத்பாத களமாக அது மாறும் வாய்ப்பையே என்னால் பார்க்க முடிந்தது.

பின்விளைவை அறியாது தலைவருடன் தகராறில் ஈடுபட்டு செயற்குகுழு கூடுகையின் முதல் நாள்  அதிலிருந்து வெளியேறிய சுகுமாரன். இறுதி நாள் கூடுகைக்கு வந்திருந்து அனைவரையும் திகைக்க வைத்தான் . நான் எதிர் நோக்காத நிகழ்வு . அவன் தனது பிழையையும் , அதன் பின்னர் கூடுகை வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதை பற்றியும் அறிந்துகொண்டிருக்க வேண்டும் . அல்லது கிருஷ்ணமூர்த்தி அவனுடைய பிழையை அவனுக்கு புரியவைத்திருக்கலாம் . அவனது முரண்பாட்டால்  எனது தலைமை யாராலும் தடுக்க இயலாது என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கி விடும் என கணித்திருக்க வேண்டும்.

பிறிதொரு காரணம் , அங்கு அமர்ந்திருந்தவர்கள்  மாநில கட்சி அமைப்பின் உள்ள  மூத்தவர்களின் ஆதரவாளர்கள்.அவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாக அது பார்க்கப்படலாம். கூடுகை கட்சி அலுவலகத்தில் நடைபெறுவதால் பெரும்பகுதியினர் இது தலைவர் முயற்சி என்கிற எண்ணத்தில்  தங்களது ஒத்துழைப்பை கொடுத்திருந்தனர் , அல்லது எனது செயல்பாடுகள் அவர்களுக்கு உடன்பட்டதாக  தெரிந்திருக்கலாம் , அவர்கள் தொகுதியில் அவர்களது ஆதரவாளர்களுக்கு மாற்றாக நான் பாலன் காலத்து நிர்வாகிகளை உட்புகுத்த முயலாததை அவர்கள் புரிந்து கொண்டார்கள் .

எல்லாவற்றையும் விட வெளிப்படையான உண்மை ,பல தொகுதிகளில் என்னால் மாற்று நிர்வாகிகளை கொண்டுவர முடியும் என்பது தான் அன்றைய சூழல் , ஆனால் ஒரே சமயத்தில் அனைத்து தரைப்பையும் விரோதித்துக்கொள்வதை போல மடமை பிறிதில்லை என்பதால் அதை நான் தவிர்த்திருந்தேன். அதே சமயம் எனக்கு அவர்களுடன் நல்ல தொடர்பிருந்ததால் மாற்று ஏற்பாடுகளுக்கு அவசியமில்லாது போனது. ஆனால் எனது அனுக்கர்களைத்தான் நான் இழக்கவேண்டிருந்தது.

கட்சியின் மூத்த தலைவர்களின் பகுதிகளை சேரந்த அவர்கள் என் கீழ் செயல்பட விருப்பம் கொண்டிருந்தார்கள் . அவர்களில்  பெரும்பான்மையினர்  அங்கு வந்து  அமர்ந்திருந்ததினால்தான் தலைவரும் எனக்கு சாதகமான முடிவை நோக்கி நகர்ந்தார் . சில மாநில தலைவர்களுக்கு எனது செயல்பாடுகள்  மீது முற்றாக உடன்பாடு இல்லாது போனாலும்  இரண்டு வகையில் அதை  வெளிப்படுத்திக் கொள்ள  விரும்பவில்லை .ஒன்று  அது தலைவருக்கு முரணாக தெரியும் இரண்டு , அவர்கள் இங்கு நடப்பதில் பங்குபெறாது போனால் அந்த இடத்திற்கு அவர்கள் தொகுதியை சேர்ந்தவர்க்க பழையஅமைப்பு உறுப்பினர் தயாராக இருந்தார்கள் .மேலும் அவர்கள் ஆதரவாளர்கள் இதில் இணைவது குறித்து விரும்பியதால் அவர்களால் வெளிப்படையாக ஆதரிப்பது போல தோற்றத்தை உருவாக்கி கொண்டார்கள் . ஆனால் மனதில் ஷாத்திரம் இருந்து கொண்டிருந்தது.

இந்த சூழலில்தான் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் களத்தில் திடீரென சுறுசுறுப்பானர்கள் . மாநில அளவில் நிர்வாகிகளாக நான் நியமிக்க எண்ணியிருக்கும் சிலர் தங்களை பாண்டியன் சந்தித்ததாகவும் விரைவில் ஒரு கூடுகை நிகழ இருப்பதை பற்றி சொன்னதாக என்னிடம் கூறி இருந்தார்கள்  . இதைப்போல ஒன்றை அவன் முயற்சிப்பான் என நான் அனுமானித்திருந்தேன்  . பாண்டியன் என்னிடம் பேசிய பின் எந்த முடிவும்எட்டப்படாததினால் , தனக்குள்ள வாய்ப்புகளை  முயற்சித்து பார்ப்பது துவங்கி இருப்பது தெரிந்தது . என்னால் நாராயணசாமியுடன் இணக்கமாக செல்ல இயலாத காரணத்தை இதில் முன்பே பதிவு செய்திருக்கிறேன். அரசியல் சூழல் மாறிவருவதன் சமிக்ஞை  தெரியத்துவங்கி இருந்தது . வானிலை மாறுதல் போல ஒன்று நிகழாத  வரை மட்டொன்றை யூகிக்க இயலாது

கட்சியின் மீது தலைவரின் கட்டுப்பாடு தளர்ந்து வரும் சூழலில் என்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள நான்  ஏதாவது ஒன்றை செய்தாகவேண்டிய நிர்பந்தம் . செயற்குழு கூடுகை கொடுத்திருந்த அதிகாரம் நீர்த்து போகும் முன்னர் அனைத்தையும் இணைத்திவிட வேண்டும் . பாண்டியன் வெளிப்படையாக நாராயணசாமியின் பக்க ஒருங்கிணைப்பை அவர் அறியாது செய்ய முடியாது . எனக்கு சிக்கலே தலைவர் என்னை அத்தனை வெளிப் படையாக எதையும் செய்ய விடமாட்டார் . சொல்லிவைத்த கூடுகையை பாண்டியன் தனது தலைமையில் வெண்புறா சேனை என்கிற அமைப்பை ஹோட்டல் மாஸ்  விடுதியில் கூட்டினான் . அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இயக்கம் எனபதை அறியமுடிந்தது இளைஞர் காங்கிரெஸ்ஸை சேர்ந்த பலர்  அதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் . நான் தவிர்க்கப்பட்டிருந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...