https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 17 நவம்பர், 2018

* பாதை அறியும் கால்கள் * அடையாளமாதல் - 419

ஶ்ரீ:



பதிவு : 419 / 583 / தேதி 17 நவம்பர்    2018

* பாதை அறியும் கால்கள்  * 


எழுச்சியின் விலை ” - 20
முரண்களின் தொகை -01 .




நான் அங்கிருந்து உடனே வெளியேற விரும்பினேன். தலைவர் சொன்னதில் சொல்லாதது புரியத் துவங்கியிருந்தது. அதிலிருந்த நேரடித்தண்மை என்னை சீண்டியதால் எனது மனக்கணக்கு முகத்தில் வழிந்து விடலாம் . அங்கு நின்று அவர் என்னை வெற்றி கொள்வதை விரும்பவில்லை. முரண்பட்ட சிந்தனையால் நிரம்பி கிளைப்பதை  தொகுத்துக் கொள்வது அவசியமானது முதற் காரணம் . எருமை சிறுவீடு மேய்தல் போல நுண்ணிய பனித்திவிலைப் போன்ற விஷயத்தை மட்டும் திரட்டிக்கொண்டு அது பற்றி விரிவாக அசை போட்டாக வேண்டும் என்பது பிறிதொரு காரணம். இல்லாது போனால் என்னால் . அமைதியாக இருக்க முடியாது . சிந்தனை தானாக சரடு அறுந்து போகாமல் இயங்கி , இயங்கி என்னை ஓயாத தொல்லைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. அவர் சொன்னதைவிட அதில் உட்பொதிந்திருந்த பல்வேறு விஷயங்கள் எனக்குள் எண்ணங்களாக திரளத் துவங்கியிருந்தது . ஒரு சொல்லுமில்லாது நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

தலைவர் சொன்ன முதல் விஷயம் நுண்ணிய அரசியலைப் பற்றியது. சொல்லப்பட்டதற்கும் , படாததற்கும் இடையே உள்ள நிழல்களின் வெளி , வித்தை தெரிந்தவன் அதை தனக்காக விரித்தெடுக்கிறான், அதற்கு இடம், காலம், பொருள், வெக்தியெல்லாம் ஒரு பொருட்டல்ல. எந்தக் காலத்திலும் , அதிலிருந்து எந்தச் சூழலிலும் தனக்கானதையும், தான் நினைத்ததை பிரித்தெடுக்கும் வல்லமை ஒருவனுக்கு  இருக்குமானால் , இது அவனுக்குறியது . எதன் காரணம் கொண்டும் ஒன்றை விலக்கி வைப்பவனுக்கோ , அனுகூலக்காலம் வரை தள்ளிவைப்பவனுக்கோ , காத்திருப்பவனுக்கோ அது உகந்ததல்ல. ஆம் அது ஒரு கருதுகோள் போல , அது பொறுப்பில் உள்ளவர்கள் தங்களை தக்கவைக்க விளையாடும் ஆட்டம்

தலைவர் தான் தன்னை நினைத்து எனக்கு சொல்லெடுத்திருக்கிறாரா?. அல்லது நான் அங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்கிறாரா?. அதை நான்தான் கணிக்க தவறினேனா? . இது ஒருபக்கம் குடைந்து கொண்டிருந்தது . ஆனால் அதே சமயம் மனதில் தேன் தடவியது போல பல்வேறு இனிப்பான பொருட்களை உணர இயன்றது  , சட்டென பிறிதொன்று கிளம்பிஇல்லை இது பொறி, அகப்பட்டுக்கொள்ளாதேஎன்றது . பொறியாகத்தான் இருக்கட்டுமே , பொய் போல ஒன்று இது என்றாலும் அதை அவர் என்னை நோக்கிச் சொன்னது ஒரு அலங்காரம் , அதையேன் ரசிக்க மறுக்க வேண்டும்.

நாராயணசாமி என்ன காரணத்தினாலோ உன்மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்யாரோ அதை ஒரு வார்த்தை விளையாட்டுப் போல என் காதருகில் வந்து வந்து சொல்லிக் கொண்டே இருப்பது போல தலவரின் குரல் கேட்டது. எனக்கும் நாரயணசாமிக்கும் தனிப்பட்ட வரப்பு தகராறு ஏதாவது உண்டா? என்ன விந்தையிது?. அவரின் அதிருப்திக்கு காரணம் தலைவருக்கான எனது முழுமனதான ஆதரவு . அதைத்தாண்டி என்னை அவர் வெறுக்க வேறு எது காரணமாக இருக்கப் போகிறது. நிகழ் அரசியலில் தன்னிடமிருந்து என்னை வேறுபடுத்திக்காட்ட விழைகிறாரா?. அல்லது எதற்கு தான் காரணமல்ல என எனக்கு புரியவைத்து தான் அதிலிருந்து விலக எண்ணுகிறாரா? இது என்ன மாதிரியான வாச்சாங்கோலி ஆட்டம். சிந்தனை நிலை கொள்ளாத போது , கடலை நோக்கியபடி மணிக்கணக்கில் தனிமையில் அமர்ந்திருப்பது என் வழமை. கடலை பார்த்தபடி சாலையிலிருந்த கல்பென்ஞ்சில் அமர்ந்திருந்த எனக்குள் கோபம் எழ காதுமடல்கள் கடற்காற்றின் விசையை கடந்து சூடேறியது..

அரசியல் பெருந்தலைவர்கள் தொடுக்கைக்கும் பயன்பாட்டிற்கும் தன்னை அந்த கட்சியிலுள்ள அனைவரும் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள் என்றாலும், அவரது உறவு ஒன்றுபோல அனைவருடனும் இருப்பதில்லை யாரும் யாருடனும் ஒன்று போல பிறிதொன்றும்  இருக்கப்  போவதில்லை . ஒருவர் பிறிதொருவரை எங்கேயும் எப்போதும் நிகர் செய்ய இயலுவதில்லை . அது மன ரீதியில் ஒருவர்க்கொருவர் இடையேயான புரிதலின் பொருட்டோ அல்லது நம்பிக்கையின் பொருட்டோ நிகழ்கிறது . தலைவர் அனைவருக்கும் சமமானவர் என்றும் அனைவருக்கும் அவரவர் இடங்களையும் விழைவுகளையும் அவர்களுகளின் அருகே இழுத்துக் கொடுக்கும் சாமர்த்தியம் , அவரை வெற்றிகரமான தலைவராக அடையாள கட்டலாம் ஆனால் இயற்கையில் எப்போதும் அப்படி நிகழ்ந்து விடுவதில்லை

எல்லோருக்கும் தேவை இருக்கிறதுஅது சில சமயம் வெளிப்படையாகவும் பலசமயம் மறைமுகத்தனமுடையதாகவே இருந்திருக்கிறது . தன்னை முன்னிறுத்தி காரியங்களை ஆற்றும் யாரும் யாரிடமும் இரந்து நிற்பதில்லை , பல அடுக்குகளில் ஊடுபாவும் நிகழ்வுகளின் தொகுப்பால் அது தற்செயலாக ஓரிடத்தில் இயற்கையின் தொடுகைக்கு உட்பட்ட கணத்தில் , நிகழ்ச்சியில் கணக்குகள்  அதில் மின்சாரம்போல பாய்ந்து செல்கிறது , அப்போது அது யாருடன் எப்படி தனது தொடர்புகளை விரிந்தெடுத்துக்கொள்ள விழைகிறார்களோ , அவர்களுக்கான களத்தை, காலத்தை, வாயப்பை அது கொடுக்கிறது . அது யாருடன் எவ்வகையில் தன்னை திறந்து கொடுக்கிறது என யாராலும் நிர்ணயிக்க முடிவதில்லை

அதன் பலனை உணரும் சாமர்தியமுள்ளவர்கள் , தங்களின் பாதையை அதன் ஒழுக்குக்கு அமைத்துக்கொள்கிறார்கள் , இங்கு யாரும் யாருக்கும் கடன்பட்டவர்களில்லை என்பது இந்த கோட்பாட்டாலே நிர்ணயிக்கப் படுகிறது . நினைவுகளால் அது புரிந்து கொள்ளப்படுவது மட்டுமே நாவினால் யாரும் சொல்லென அதை எடுப்பதில்லை . முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் தலைவர்கள் தங்களின் முடிவை பிறர் எடுக்கும் படி செய்கிறார்கள் . அதன் பலன் அந்த முடிவை எடுத்தவனுக்கு இரண்டாமிடத்தில் பயன் தர வல்லதாக அது சில நேரங்களில் இருந்திருக்கிறது . தோல்வி அடைந்தால் அதற்கு அவர்மட்டுமே பெறுப்பேற்க வேண்டும் . இது எழுதா விதி, சொல்லா சொல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்