https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 24 நவம்பர், 2018

அடையாளமாதல் - 421 * அடையாளம் கேள்விகளினாலானது *

ஶ்ரீ:



பதிவு : 421 / 586 / தேதி 24 நவம்பர்    2018


* அடையாளம் கேள்விகளினாலானது * 


எழுச்சியின் விலை ” - 22
முரண்களின் தொகை -01 .





பாலனிடமிருந்து விலக எண்ணம் கொண்டபோது , நாராயணசாமி மட்டுமே எனக்குள் பேருரு கொண்டிருந்தார். தலைவர் பற்றிய சிறு நினைவும் அப்போது என்னில் எழவில்லை. அது ஆலமரம் அதனடியில் எதுவும் முளைக்காதுஎன ஒரு சொல்லுண்டு . எனது மனக்கணக்கில் நாராயணசாமி பெற்றிருக்கும் வெற்றிகள் இனி பெறப்போவதற்கு முன் அர்த்தமிழந்தவை என அறிந்திருந்தேன். ஆனால் இன்று தெளிவாகத் தெரியும் இரு தலைவர்களுக்குள்ளான பனிப்போர் அப்போதே கூர் கொண்டிருந்திருக்க வேண்டும்,  நாராயணசாமி தனக்கு கீழ் ஒரு அமைப்பை உருவாக்கவோ அல்லது உருவாகி வந்ததை போஷிக்கவோ மாட்டார். அவருக்கான தனி உலகில் பிறிதெவருக்கும் இடமில்லை. நிழலான திட்டங்களும் செயல்பாடுகள் உள்ளவராக அவர் எப்போதுமிருந்திந்ததால் , அவர் அனுக்கர்களுக்கும் அவரிடம் உளம் விலகியேயிருந்தார்கள் என்பது விநோதம் .

அரசியலில் அவருடைய செழிப்பான எதிர்காலம் குறித்த தெளிவான கற்பனை எனக்கிருந்தது , அவருடன் இணைந்து வளர்வதற்கு சூழல் இருந்தும் அது நடக்கவில்லை. இன்னதென சொல்லவியலா மிக நுண்மையாக இருந்த மனவிலக்கம் என்னை அவரை நோக்கி செல்வதறகு தடையாக அமைந்து விட்டது. தலைவர்களுக்குள் நிகழும் பனிப்போரல் யார் யார் எந்த அணியில் இணையவேண்டும் என்கிற  விளையாட்டு நிலைகொள்ளத் துவங்கியது.

எனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை தொட்டிழுக்கும் வேளை ஆரம்பமாகியிருந்தது . ஒருமுறை பாண்டியன் என்னிடம் பேச முயற்சித்த போதே என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக அவனிடம் கூறி இருந்தேன் . என்னைப் பற்றியும் எனது நிலைப்பாடுகள் பற்றிய செய்திகளும்  அவருக்கு என்மீதான ஆர்வத்தை குறைத்திருக்கலாம் . அதற்குள்ளாக  அவர்மீது எனது அவநம்பிக்கை தர்கக நீதியான அடர்த்தியை அடைந்து விட்டிருந்தது . அவர் எனக்கு மட்டுமன்றி பிற எவருக்குமே தன்னை மிக மிக அப்பால் என வைத்திருந்தார் என்பது பிறிதொரு தடையாக இருந்திருக்கலாம் . பாண்டியனின் இந்த அணிசேர்க்கும் முயற்சி அவனது தனிப்பட்ட விழைவென்றே எனக்குத் தோன்றியது.

தில்லியில் பலம்பெற்றிருந்த நாராயணசாமிக்கு , இங்கு ஒரு குழுவை அமைத்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இல்லை என்றே நான் அவதானித்தருந்தேன்தில்லி தலைமையிடம் நெருக்கமான அகில இந்திய நிர்வாகிகள் , தங்களை நிலைநிறுத்திக்கொள்ள மாநில தலைவர்களின் ஆதரவை பெற்றிருப்பார்கள். அது பல அடுக்குகளை கொண்டது , அதில் நாராயணசாமி பலம்மிக்க குலாம்நபி ஆசாத்தின் அணியில் இருந்தார். குலாம்நபி ஆசாத் பலம்மிக்க காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். அவர் முண்ணனி நிலை நோக்கி நகரும் தோரும் , அவர்சார்ந்த மாநிலத் தலைவர்களும் தங்கள் மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வார்கள்

இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து காங்கிரஸ் கமிட்டிகள் அனைத்தும் இதை ஒட்டிய வேறு தளத்தில் சென்று அமரும் , பல அரசியல் தலைவர்களின் வாழ்வை  மாற்றும் வல்லமையுள்ளதாக இது எப்போதும் இருந்திருக்கிறது . அகில இந்திய அரசியலின் நுட்பம் தெரிந்தவர்கள் தங்களின் எதிர்காலத்தை இதைக் கொண்டு தெரிவுசெய்து கொள்வார்கள் , பிற அனைவரும் உள்ளூர் அரசியலிலிருந்து சரியும் பிழையுமாக அமைவதை தங்கள் ஊழ் என ஏற்றுக்கொளவார்கள் , அல்லது அதிலிருந்து வெளியறிவிடுவார்கள்.

எனகேற்பட்ட அரசியல அனுபவங்கள் இதன் இரண்டிற்கும் மத்தியில் அமர்ந்ததாகவே எப்போதும் இருந்திருக்கிறது. தில்லி அரசியல் ஒட்டி உள்ளூர் அரசியலாளர்களை இதில் உள்ள நுட்பம் நோக்கி அழைத்துச்செல்லவதன் ஊடாக எனது அரசியல் தளத்தை நான் எப்போதும் ஏற்படுத்த முயற்சித்தவண்ணம் இருந்திருக்கிறேன். நான் எனது அனுக்கர்களுக்கு புரியாத புதிராக இருந்தது இதன் அடிப்படையில்தான். சுய பலமுள்ள ஒருவராக யாரும் தில்லியில் அமர்ந்துவிட முடியாது . ஒவ்வொரு நாளும் தங்களின் வாழ்வை மாற்றிக் கொள்ளும் வல்லமை உள்ளவரகளுக்கானது கங்கிரஸ் கட்சி அரசியல் எப்போதும் இருந்திருக்கிறது. அதில் ஏற்படும் இடைவெளியை உணர்ந்து கொண்டவனுக்கு அங்கு எப்போதும் வாய்ப்பிருக்கிறது .

நான் என் நண்பன் கோபாலை அனுப்பிவிட்டு நாராயணசாமிக்கு காத்திருக்கத்துவங்கினேன் . இது எனது ஆணவத்தின் வெளிப்பாடு என்றது ஒன்று இல்லை சரியான அரசியல் நகர்வுதான் என்றது பிறிதொன்று. நான் நாராயணசாமிக்காக காத்திருந்தேன் . அரசியலில் தனி நபர் ஸ்துதி என்பது அடிப்படை, அதைக் கொண்டே எந்த அரசியலாளரும் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் என்றாலும்  நான் அதில் உடனொட்டுவதில்லை .அதே சமயம் தனித்த அடையாளங்களை கொண்ட தனியாளுமையாக , உலகியலில் நியாயங்களில் இருந்து சிறிதளவாவது மாறுபட்ட பார்வை கொண்டவராக இருந்தால் அவர்  எத்துறையாயினும் தலையால் கொள்வது உகந்தது, என்பது எனது கோட்பாடாக இருந்தது . அரசியல் அதற்கு விதிவிலக்கில்லை. இதன் அடிப்படையில் என்னால் முழுதும் ஏற்க்கப்பட்ட தலைவராக சண்முகம் இருந்தார்.

என்ன காரணத்தினாலோ என்னால் நாராயணசாமியை அங்கு கொண்டுவர முடியவில்லை . அவரால் முற்றும் மாறுபட்ட தனித்த அடையாளம் உள்ள ஆளுமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமுடியாது என்றே யூகித்திருந்தேன். தான் நினைப்பதை எவ்வகையிலாவது அடைந்து விட வேண்டும்  என்கிற விழைவவில்லாத மனிதர் என யாருமில்லை . ஆனால் அதை அடைவதற்கு எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற லௌகீகமான , லோகாயதமான கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட யாருடனும்  எனக்கு உடன்பாடில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்