https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 3 நவம்பர், 2018

அடையாளமாதல் - 414 * இருத்தலியல் *


ஶ்ரீ:


பதிவு : 414 / 578 / தேதி 03 நவம்பர்    2018

* இருத்தலியல்  * 


எழுச்சியின் விலை ” - 15
முரண்களின் தொகை -01 .


புதுவை அரசியலின் விசை பெருவெளி என்றால் அதில் சண்முகமும் , அவரை தவிர்த்த பிற அனைவரும் அதை சமானமாக நிறை செய்கிறார்கள் . அது பிறிதொரு இணை உலகம் போல என்றாலும் . ஒன்றிலிருப்பது ஒன்றில் இருப்தில்லை . ஒன்றின் நிழல் போல அதிலிருந்து வெளிப்படுவதாக இருந்தாலும் , அது அதுவல்ல . தலைவர் எப்போதும் போல அவர்களுக்குள் எந்த முரண்பாடுமில்லை  என தன்னிறுப்பில் இருந்தார். அது காலத்திற்கு காத்திருப்பது. அவர் அதை வெளிக்காட்ட விழையாது போனதால்  நாராயணசாமி அதை முழுக்க வெளிக்காட்ட தன்னை தனித்து ஒளிவெள்ளப் பாய்ச்சலுக்கு  உட்படுத்தி இயங்க துவங்கியிருந்தார் . சண்முகம் எதிர்நோக்கும் காலக் கனிதலுக்கு இடம் கொடுப்பது ஆபத்து என அவர் உணர்ந்திருக்கலாம். அவர் தனது தலைவரை உய்த்துணர்ந்திருக்க மாட்டாரா என்ன?.

நாராயணசாமி இல்லத்தில் ஆதரவாளர்கள் அடிக்கடி கூடுவதும் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுமாக , பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது . அவரது அணியில் செயல்பட்ட பாண்டியன் என்னுடன் எப்போதும் உடனிருப்பவன் , அவனது வழியாக தலைவர்களுக்கு உள்ளே நிகழ்ந்து முடிந்த முரண்களை அது துவங்கிய கலத்திலிருந்து  நான் அறிந்திருந்தேன். என்னைவிடவும் பண்டியன் அதை அறிந்திருந்தான் என நினைக்கிறேன் . அதனால் எழவிருக்கும் வெறிடங்களை அவன் அஞ்சினான் .களத்தை என்னால் உருவாக்கிட முடியும் என அறிந்திருந்தான் , அதனாலேயே என்னை  நாராயணப்பிசாமி பக்கம் கொண்டு செல்ல ஒரு முறை நேரடியான பேச்சுவார்த்தைக்கு வரும்போதுதான் நான் தலைவர்களுள் முரண் வெகு விரைவில் வெளிப்பட்டுவிடும் , அதற்கான தருணம் மிக அருகிலிருப்பதாக உணர்ந்தேன்

எனக்கு இது மிகுந்த மனச்ச்சோர்வை கொடுத்தது . செயற்குழு வெற்றியை தொடர்ந்து அமைப்பை தொடர்புறுத்திவதில் கவனம் செலுத்தலாம் என்கிற ஒரு முனையும் , புதிய மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளை நியமிப்பதில் ஈடுபட்டிருக்கும் இந்த சமயம் தலைவர்களுள் நிலவும் சமன்பாடு குலைவது , எனது முயற்சியை முற்றாக சிதைக்கக்கூடியது .தலைவர் தன்னிலையை  அறிவதால் வலி பொறுக்கக்கூடியவர் .அவரிடமிருந்து எதுவும் வெளிப்படையகாது ,நாராயணசாமி திராவிட பாணி அரசியலை போல ஒன்றை மேட்கொள்ளுவது அமைப்பின் வழிமுறைக்கு மாறுபட்டது என்றே நினைக்கிறேன்.

அவர் தன்னரசியலில் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டிருப்பார் . அமைப்பை வளர்த்தெடுப்பதின் வழியாக தனக்கான பாதையை ஒருபோதும் உருவாக்கிக் கொள்ளமாட்டார் . அது அவருக்கு அவசியமற்றது. தில்லியுடனான அவரது தொடர்பு , மொழி , பொருளாதார போன்றவை அவருக்கு கட்டற்ற பலத்தை வழங்கியிருந்தது. அதை மேலும் வலிமையாக்கியது , சண்முகம் தவிர பிற எவரும் அவருக்கு இணையாக தில்லியில் தங்களின் பலத்தை பெருக்கிக் கொள்ள முயலவில்லை என்பது . அதுவே நாராயணசாமியை தில்லியில் நிலைத்த பலத்துடன் வைத்திருந்தது. தன்கீழ் அணியில்லாதது பலமாகக் கூட அவருக்கு இருந்திருக்கலாம்.

தில்லியின் யதார்த்த அரசியலை தமிழக தலைவர்கள் அறிந்ததை போல இங்குள்ளவர்கள் தெரிந்திருக்கவில்லை. மாநிலத்தின் எல்லா ஆளுமைக்கும் எதிராக எழுந்து வரும் இணையாளுமையை தில்லி ஒருபோதும் நிராகரித்ததில்லைஇங்குள்ள அரசியலாளர்கள் வெளி மாயையினால் பீடிக்கப்பட்டு தங்களுக்கான இடத்தை தில்லி தலைமையிடம் கேட்டுப் பெற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை
தில்லியில் நின்று அரசியல் களமாட நிறைய பொறுமையும் , நிதானமும் தேவை. துரதிஷ்டவசமாக சண்முகம் மாநிலத்தில் உள்ள எவரையும் தில்லியை அனுக விடவில்லை. அதனால் தில்லி மண்ணில் புதுவையைச் சேர்ந்த யாரும் வேர் விட இயலவில்லை . அதனால் அமைப்பு குறுகிய வட்டத்திற்குள் சூழல வேண்டிய நிரபந்தம் அதனால் பின் எப்போதுமாக இழந்ததை பெற இயலாமலேயே போனது.

தமிழகத்தில் காமராஜர் ஆளுமையின் கீழாக செயல்பட்ட மாநில தலைவர்களுக்கு தில்லியை அனுக வேண்டிய தேவை எழவில்லை . அனைத்திற்குமான தீர்வை காமராஜராலேயே கொடுக்க முடிந்தது. அவரது இறுதிக் காலத்திலும், பின்னர்  அவருடைய மறைவிற்குப் பிறகும் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிறைக்க இயலவில்லை. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொடுக்கக்கூடி மாநிலம் என்பதாலும் , தில்லி தலைமைக்கு இணையான சொத்துக்கள் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு இருந்ததாலும் , தில்லி தலைமை நேரடியாக தமிழக அரசியலில் தலையிட வேண்டிய சூழல் வந்தது . அதன் பிறகே பல தலைவர்களை அது அடையாளம் கண்டது , அதை தொடர்ந்து அவர்களால் வளர்கப்பட்டு எழுந்த இணை ஆளுமைகளின் பெருக்கத்தை இன்றுவரையிலும் தில்லி தலைமையினால் கட்டுக்குள் கொண்டு முடியவில்லை .

ஆனால் கட்சி அரசியலில் ஆரோக்கியமான ஒன்றாக நான் நினைப்பது இதைத்தான்  பெரும் வல்லமையோடு இருந்த மூப்பானாருக்கு எதிராக வாழப்பாடி வளர்ந்து வர முடிந்தது . புதுவைக்கு அந்த வாய்பபு கிடைக்கவில்லை . அதற்கு இரண்டு காரணங்களிருக்கலாம் . ஒன்று புதுவையுள்ள அரசியலாளர்கள் கட்சி அரசியலின் நுடப்மான செயல்படு தளத்திற்குள் வர விரும்பாது , தேர்தல் அரசிலை மட்டுமே கொண்டவர்களாக இருந்தனர் . இரண்டு புதுவை போன்ற ஒரு சிறு மாநிலம் எப்போதும் தமிழகத்துடன் இணைத்தே புரிந்து கொள்பட்டது. மிகவும் பிழையான ஒரு புரிதல் , தமிழகத்திற்கு புதுவைக்குமான நுண்ணிய வேறுபாடுகளை புரிந்து கொள்ளவது சிக்கலானது . வெளிப்படையாக தெரிவது தமிழகத்தில் கங்கிரஸ் ஆட்சி இழந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் புதுவையில் திரவிட அரசிலுக்கு இணையாக மதிப்புள்ளதாக காங்கிரஸ் இருந்தததற்கு அந்து வேறுபாடுகளே காரணம் . இனி அது தொடர வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். கால மாற்றத்தை யாராலும் கணிக்க இயலாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...