https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 நவம்பர், 2018

அடையாளமாதல் - 420 *சிந்தனையில் புறவயத்தடை*

ஶ்ரீ:



பதிவு : 420 / 585 / தேதி 21 நவம்பர்    2018


* சிந்தனையில்  புறவயத்தடை


எழுச்சியின் விலை ” - 21
முரண்களின் தொகை -01 .





அரசியலில் இரண்டாம் நிலை நிர்வகித்து காரியங்களை ஆற்றும் யாரும் யாரிடமும் எதற்கும் இரந்து நிற்பதில்லை , அவர்களுத் தெரியும் அவரவர்  இயற்றும் காரியமே அவர்களுக்கான  பலனை கொடுக்கவல்லது என்று. அது எப்படிப்பட்டது  எனப் பார்க்கும் திறன் உள்ளவர்கள் மட்டுமே அதில் பிரவேசிக்க இயலும் . கோட்பாடு தெரியாமல் உள்நுழைபவர்கள்  வெறும்  கோமாளிகள்.

தான் செய்வதற்கான  பலனை உணரும் சாமர்தியமுள்ளவர்கள் ,யாருக்கும் கடன்பட்டவர்களில்லை என்கிறது அந்த கோட்பாட்டு விதி . அது புரிதலால் நிலை கொள்வது எவரின் நாவிலும் சொல்லென ஒருபோதும் எழாதது . தலைவர்கள் தங்களின் முடிவை பிறர் எடுக்கும்படி அரசியளாடுகிறார்கள். அங்கு வெற்றிகள்  அனைவராலும் பங்குபோடப்படுகிறது . தோல்விக்கு அதை ஆற்றுபவர் மட்டுமே பெறுப்பேற்க வேண்டும் . இது எழுதா விதி, சொல்லா சொல் என அமைகிறது .  

நான் மாவட்ட மற்றும் தொகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்க இருந்தவர்களைக் கொண்டு அந்த ஆலோசனை கூட்டத்தை கூட்ட முடிவெடுத்திருந்தேன் . அதற்கான ஏற்பாடுகள் ஒருங்கத் துவங்கின. அனைவரையும் இணைத்து அது சுமார் அறுபது பேர் அமரும் கூடுகையானது . கடந்த மூன்று வருடத்தில் முதல் முறையாக புதுவை மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் குழுவாக அது உருமாறியிருந்தது . முதற் செயற்குழு கூடுகையில் நிகழ்ந்த சிக்கல் இனி எழப்போவதில்லை . அதில் விளைந்த இரு நல்ல விஷயங்களினால் அமைப்பை முன்னெடுத்துச் செல்ல எனக்கு முழு உரிமையை வழங்கி இருந்தது

அவற்றில் ஒன்று; அனைவரும் எனது தலைமை ஏற்றுக்கொண்டார்கள் என்பது வெளிப்படையானது . இரண்டு ;சுகுமாரன் நடத்திய ரகளை வழியாக நான் செய்யும் அனைத்திற்கும் தலைவரின் ஒப்புதல் உள்ளது என்பதுடன் , வல்சராஜ் இல்லாத சூழலில் நான் அரசியல் செய்கைகளை முன்னெடுக்கும் தலைமைக்கு நிகரியான இடத்திற்கு வந்தமைந்ததை கூட்டம் அங்கீகரித்திருந்தது

அதன் பொருட்டே முதல் நாள் முரண்பட்ட சுகுமாரன் அடுத்தநாள் கூடுகையில் வந்திருந்தான் . அன்று நிகழவிருந்தது அவன் சார்ந்த பகுதியை பிரதிநிதிபடுத்தும் கூட்டம் , ஆகவே அன்று நிகழ்ந்த கூடுகைக்கு அவன் வந்தமரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான் . அதன் மூலம் நான் நிறுவ நினைத்த அமைப்பை ஏறக்குறைய நிறுவியாகி விட்டது . இனி அதற்கு அதிகாரப் பூர்வமான நிர்வாகிகளை நியமிக்கப்பட வேண்டும்  என்பது மட்டுமே இன்னுமும் மிச்சமுள்ளது . அதை எனக்கு நான் திட்டமிட்டிருந்த இந்த ஆலோசனை கூடுகை செய்து கொடுத்துவிடும்

தலைவர் அந்த கூடுகைக்கு வந்தால் அவர்களை நியமிப்பதில் எனக்கு ஒரு தார்மீக பலத்தை அது உருவாக்கி கொடுக்கும். மேலதிகமாக அவரும் அந்த கூடுகையின் தீர்மாணங்களுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தம் எழுந்து எனது காரியத்தை அது எளிதில் நிறைவேற்றிக் கொடுத்துவிடும். ஆனால் அவர் வேறு சில அரசியல் காரணங்களுக்காக நாராயணசாமியை வைத்து நடத்தைச் சொல்லிவிட்டார் . ஹோட்டல் சற்குருவில் அந்த கூட்டம் நடத்த நாள் குறிக்கப்பட்டது . நான் நாராயணசாமியை நீண்ட நாட்களுக்கு பின் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து , அவரை கூடுகைக்கு அழைத்தேன் . அவர் மறுப்பு ஏதும் சொல்லாது தான் அதில் கலந்துகொள்வதாக சொன்னார்

அகில இந்திய காங்கிரஸின் திட்டமான அதை அவரால் மறுக்க முடியாதது என்பது வேறு விஷயம் . எந்த பரபரப்பும் இன்றி அணைத்து ஏற்படுகளும் நடந்து முடிந்தன . கூட்ட நாள் அன்று மதியம் தலைவரை சந்தித்து மீண்டும் எனது அதிருப்த்தியை தெரிவித்து அவரும் அதில் கலந்து கொள்வதுதான்  இயக்கத்திற்கும் எனக்கும் நல்லது என சொல்லியும் அவர் வர மறுத்துவிட்டார் . அது ஒரு நாடகம் என நாங்கள் இருவருமே தெரிந்திருந்தோம் . அன்று மாலை ஹோட்டல் சற்குருவில் பொறுப்பு நிர்வாகிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கூடத்துவங்கினர் .

நாராயணசாமியை நான் நேரில் சென்று அழைத்துவர எண்ணியிருந்தேன் ஆனால் என்னைப்பற்றிய பாண்டியன் சொல்லும் தவறான தகவல்களை அவர் நம்புவதாக எனக்கு வந்தத் தகவல்கள் உறுதி செய்திருந்தது , அதனால் நேரில் சென்று அவரை அழைத்து அழைத்து வரும் எண்ணத்தை கைவிட்டு எனது நண்பன் கோபாலை எனது வண்டியில் அனுப்பி வைத்தேன் . அதற்கு வேறு சில அவதானிப்புகள் காரணமாயின. நான் நேரில் சென்று அழைத்துவருவதில் எனக்கும் சில தேவையற்ற சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது என அது குறிப்புணர்த்தியது  . கூடுகைக்கு அனைவரும் பார்க்க அவருடன் நான் வந்து இறங்குவதை ஒரு நாடகீய தருணமாக நான் திட்டமிடுவதாக என்னைப் பற்றிய ஏளனம் அவரிடம் உருவாகலாம் .நான் அதை விரும்பவில்லை

அரசியலில் ஒருவரை குறைசொல்லி அந்த இடத்திற்கு வர நினைப்பவர்களின் விளையாட்டு அரசியல் பாலபாடம். அத்தகைய பேச்சுக்களை நம்பும் ஒரு தலைவரிடம் நான் சொல்ல ஏதுமில்லை . அதேசமயம் நாராயணசாமி தில்லி அரசியலில் பெரும் வெற்றி பெற்றவர் ஆகவே இந்த சிறிய விளையாட்டை நம்புவதற்கு வாய்ப்பில்லை . அதைக் கடந்து தலைவர்களுக்குள் நிகழும் விளையாட்டில் என்னைப் பற்றியும் எனது நிலைப்பாடுகள் பற்றிய செய்திகளும்  அவருக்கு என்மீதான ஆர்வத்தை குறைத்திருக்கலாம்

நான் இதிலிருந்து முற்றாக விலக நினைத்தே கோபாலை மட்டும் அனுப்பினேன். அவன் என் நண்பன் மட்டுமே வேறு எந்த பொறுப்பிலும் அவன் வரப்போவதில்லை என்பதால் அவனை மட்டும் அனுப்பிவிட்டு அவருக்காக காத்திருக்கத்துவங்கினேன் . கூடுகைக்கு வந்திருந்த அனைவரும் தலைமை பொறுப்பிற்க்கான என்னுடைய தேர்வுகள் . அவர்கள் அனைவரும் கூடுகை நடக்கும் ஹாலில் முன்னமே அமரவைக்கப்பட்டார்கள் . வழமையாக தலைவர்கள் வரும்போது அவரை எதிர்கொண்டு அழைப்பது என சில மரபுகள் இருந்தாலும் நான் அதை இங்கு செய்ய விரும்பவில்லை . அவர் முதலில் என்ன மனநிலையில் இதில் கலந்துகொள்ள விழைக்கிறார் எனபதை அறிந்துகொள்ளாது, நான் எந்த முன்நகர்வும் செய்யப்போவதில்லை . இது எனது ஆணவத்தின் வெளிப்பாடு என்றது ஒன்று , இல்லை இது சரியான் அரசியல் நகர்வு மற்றும் தன்மானம் சம்பந்தப்பட்டது என்றது பிறிதொன்று. நான் அமைதியாக ஹோட்டல் லாபியில் நாராயணசாமிக்காக தனித்துக் காத்திருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக