https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 14 நவம்பர், 2018

அடையாளமாதல் - 418 * சொல்லின் சொல்லா முணை *

ஶ்ரீ:



பதிவு : 418 / 582 / தேதி 14 நவம்பர்    2018



* சொல்லின் சொல்லா முணை * 


எழுச்சியின் விலை ” - 19
முரண்களின் தொகை -01 .






நாராயணசாமியை வைத்துதான் அந்தக் கூடுகையை நிகழ்த்த வேண்டும் என்று தலைவர்  உறுதியாக சொன்ன போது அடக்க முடியாத எரிச்சல் எழுந்தது . இவர்களின் சண்டையில் தேவையில்லாமல் நான் அரைபடுவதை பற்றி நினைத்தேன் . தலைவர் எதை குறித்து இப்போது பேசுகிறார்நிதானிக்க துவங்கினேன். தலைவர் பேசுவது தில்லி அறிவுறுத்திய கூடுகையை பற்றியா? அல்லது நான் திட்டமிட்ட எனது முன்வரைவு சமர்பிக்க நினைக்கும் கூடுகையை பற்றியா ? எதை நாராயணசாமியை வைத்து நிகழ்த்த சொல்கிறார் என்று அவதானித்தால், அவர் நான் ஹோட்டல் சற்குருவில் நிகழ்த்த விரும்பும் முன்வரைவு கூடுகையை பற்றித்தான் பேசுகிறார் எனத் தெளிவாக புரிந்தது.

தலைவர்  சொல்லியபடி செய்து , சுயசெய்வினை வைத்துக் கொள்வதை விட திட்டமிட்ட முன்வரைவு கூடுகையை ரத்து செய்வது உகந்ததாகப்பட்டது காரணம் அது மேலதிகமானதுஅதில் உள்ளூர்  அரசியலின் சமன்பாடுகளை அடித்தளமாகக் கொண்டது . அதை ரத்து செய்வது எங்கும் கேள்வியாக  எழாது . தில்லிச் சொன்ன கூடுகையை நிகழ்த்துவது குறித்து  நான் பெரிதாக ஒன்றும்  செய்வதற்கில்லை . அதை பெயரளவிற்கு கட்சி அலுவலகத்தில்  நிகழ்த்திக் கொள்ளலாம் . அதில் யார் வந்து அமர்ந்தாலும் பெரியதாக ஒன்றும் நிகழ்ந்து விடாது . ஆனால் நான் நினைத்திருந்தது  அதற்கு முன்பாக நிகழ்த்த விரும்பும் முன்வரைவு கூடுகையை பற்றித்தான். அது எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பது எனது கனவு . அதைப் பற்றித்தான் இப்போது பேச்சிருக்கிறது என்றால் ?. இவர் அதை என்ன காரணத்திற்காக இப்படி மாற்ற நினைக்கிறார்

அது என் உள்கணக்கு . அதில் நுழைய இவருக்கென்ன உரிமை ?. நான் திட்டமிட்டதை உய்த்துணர்திருக்கிறாரா?.... அவரது அனுபவத்திற்கும் , அவர் கடந்து வந்தமைகளையும் கணக்கிடும் போது  நான் நினைப்பதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது எனக்கே புரிந்திருந்தது. சரி அப்படி என்றாலும் , .எனது திட்டத்தில் அவருக்கான உள்கணக்கு என்னவாக இருக்கக, கூடும். அப்படியெல்லாம்கூட ஒருவரால் பரந்து விரிந்து பிறரின்  கணக்கில் உட்புக முடியுமா?. அல்லது இது எனது கற்பனையா?.

தலைவர் சொன்னபடி நான் ஒருங்கியிருந்த நிகழ்வை மாற்றுவது எனது கனவுகளை கலைத்துக் கொள்வது. என்னைவிட நான் திட்டமிட்டிருப்பது அவருக்கு பலம் சேர்ப்பதும்தான். ஆனால்  தலைவர்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள விளையாடும் களத்தில் இதற்கெல்லாம் பெரிய அர்த்தமிருப்பதில்லை என்பதும் யதார்த்தம் . என்கிற எண்ணமெழ . உள்ளே உருவாகிய கசப்பை வெளிக்காட்டாது அமைதியாக சிந்திக்க முயன்று கொண்டிருந்தேன் .

அந்தக் கூடுகையை நாராயணசாமியை வைத்து நடத்துவது சரியானது என்பதற்கு தலைவர் தரப்பு காரணமாக பல விஷயங்களை அவர் சொன்னபோதும் நான் அவற்றை தொடர்ந்து மறுத்தபடி இருந்தேன் , அவர் இறுதியாக , “உன்னுடைய முயற்சியும் அதற்கான உன்னுடைய உழைப்பும் பற்றி அனைத்தும் எனக்கு தெரியும் , அதை மீளமீள  என்னிடமே  நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியமில்லை என்பதை நீ ஏன் உணரவில்லை? . நாராயணசாமிக்கு உன்மீது என்ன காரணத்தினாலோ கடும் அதிருப்தி உள்ளது அதை சரிசெய்யும் வாய்ப்பாக இதை நீ ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாதுஎன்றார்.

இப்போது அவர் சொல்ல விழையும் காரணம் எனக்கு தெளிவாக புரிந்திருந்தது . ஆனால் என்னுடன் இணைந்து செயல்பட நினைக்கும் இளைய தலைவர்களுக்கு மத்தியில் என்னுடன் உடன்பாடில்லாத ஒரு தலைவரின் அமர்வு எனது நோக்கத்தை சிதைத்துவிடும் என்பது எனது சிக்கலாய் இருந்தது . அதைச் சொல்லியும் தலைவர் ஏற்க மறுத்து என்னை நாராயணசாமியை வைத்தே அதை நடத்த சொல்லிவிட்டார் , நான் அதை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானேன். நான்  வருத்தமுடன் எழுந்து கிளம்ப தயாரானதும் . தலைவர் என்னை திரும்பவும் அமரச் சொன்னார் . நான் அமர்ந்ததும் அங்கு சூழல் அழுத்தமான மௌனமாக காலம் சென்றபடி இருந்தது . அங்கு அமர்ந்திருந்த சிலர் குறிப்புணர்ந்து மெள்ள அங்கிருந்து வெளியேறினர்.

உன்னுடைய செயல்முறைகளை குறித்து உன்னைவிட எனக்கு  துல்லியமாக புரியும் . அரசியல் என்பதே , சொல்லப்பட்டதற்கும் , படாததற்கும் இடையே இருப்பது , திறமையுள்ளவன் தன் சக்திக்கு அதை விரித்தெடுத்துக் கொள்கிறான். அதற்கு இடம் ,காலம் என்கிற வரையரை இல்லை என்பதை நீ முதலில் புரிந்து கொள்என்றார் . அவர் சொன்னதைவிட அதில் உட்பொதிந்திருந்த பல்வேறு விஷயங்கள் எனக்குள் எண்ணங்களாக திரளத் துவங்கியது . அவை என்னுள் நிறையத் துவங்கியதும் , இனி என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியாது . ஒரு சொல்லுமில்லாது நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

என் தலை முழுவதும் முரண்பட்ட சிந்தனையால் நிரம்பி வழிந்தது . அதை தொகுத்துக் கொள்ளாது போனால் இனி அமைதியாக இருக்க முடியாது . என்னுடைய சிந்தனை முறையில் ஒரு தனித்து இயங்கும் ஒரு விசையை பற்றித்தான் நான் எப்போதும் அஞ்சுவது. அது செயலபடத் துவங்கினால் என்னால் பிற எதிலும் கவனம் குவிக்க இயலாது. அது ஒரு obsession போல  . சிந்தனை சரடு அறுந்து போகாமல் இயங்கி , இயங்கி என்னை ஓயாத சிக்கலில் அது கொண்டு விடும் .அதிலிருந்து ஏதாவதொரு தர்க்கம் மூலமாக நான் வெளியேறியாக வேண்டும். தலைவர் சொன்னது எனக்கு இரண்டு விதமான மனநிலையை கொடுத்ததால் , சிந்தனை பெருக்கு  கடினமான பொருளைப் போல தலைமுழுவதும் நிரம்பத்துவங்கி இருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்