https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 1 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 423 *சமன்பாடு *

ஶ்ரீ:



பதிவு : 423 / 588 / தேதி 30 நவம்பர்    2018

*சமன்பாடு 


எழுச்சியின் விலை ” - 24
முரண்களின் தொகை -01 .



1996 முதல் 1999 ரை மத்திய அரசு குழப்பம் மிகுந்ததாக இருந்தது . அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தடுத்து தேர்தல்களை சந்தித்து. அரசில் அங்கம் வகித்த ஜெயலிலதா , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடான ஒருடீ பார்ட்டிஅப்போது மிகப் பிரசித்தம் , அதை ஒட்டி வாஜ்பாய் அரசாங்கம் கவிழ்ந்து போனது. அதைத் தொடர்ந்து காங்கிரஸுடன் இணக்கமாகியிருக்க வேண்டியவர் தேசிய அரசியல் சதுரங்கத்தில் சட்டென காங்கிரஸிடமிருந்து விலகி , சோனியா காந்தி மீது காழ்பபை கொட்டத் துவங்கினார்இந்த சூழலில் புதுவை ராஜ்யசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது  . தில்லியுடன் முரண்பட்டாலும் புதுவை அதிமுக விற்கு அதன் தலைமை பிரத்யேகமாக ஏதும் சொல்லாத நிலையில் அனைத்து உறவுகளும் சாதக பாதகமின்றி சம தூரத்தில் நிலைகொண்டன. சட்டமன்ற தேர்தல் காலம் வரும்போது அனைத்தும் முடிவிற்கு வரும் என்கிற நம்பிக்கை இருத்தரப்பிற்குமே இருந்தது.

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்திலிருந்து புதுவை அரசியலில்  அனைத்து அம்சத்திலும் மாறுபாடு இருப்பதை காண இயலும் . இரண்டுமே கூட்டணி அரசாக புதுவையை ஆண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் அல்லாத பிறிதொரு கட்சி தன் ஆட்சிகாலம் முழுவதுமாக ஆண்டதில்லை . சில அரசாங்கங்கள் நாட்கணக்கில் மட்டும் இருந்ததுண்டு. இதற்கு பின்புலத்தில் சண்முகத்தை சொல்வார்கள் . அது உண்மை .இருப்பினும் அவரைத் தவிர்த்த பிற காரணிகளும் இருந்தால் அல்லது அவரது முயற்ச்சிகள் வென்றிருக்க முடியாது.

இந்த இடத்தில் நான் வினோதமாக உணர்ந்த ஒன்று  . காங்கிரஸ் பலமுறை தனித்தும் , சிலமுறை கூட்டணி அரசுகளை கொடுத்திருந்தலும் , தலமையை விட்டுக்கொடுத்து கூட்டணி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தது திமுக வுடன் 1982 ல் . கட்சிக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கியது அந்த வருடம் என யாரும் நினைத்திருக்கவில்லை. அதை தவிர்த்து கூட்டணி அரசாங்கம் என்பது பிற கட்சிகள் வெளியிலிருந்து தரும் ஆதரவோடு மட்டுமே

ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுகவுடனான கூட்டணி மிக இயல்பாக இருந்திருக்கிறது . அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சிகளின் இணைவை நுண்மையாக புரிந்து கொள்ள இயலும் , தமிழகம் மற்றும் புதுவையில் திமுகவுடன் கூட்டணி எப்போதும் கசப்பின் அடிப்படையிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அனைத்தையும் ஒருங்கிணைத்தது சண்முகம் என்கிற தனி ஆளுமை என இப்போது நினைக்கிறேன். காரணம் அதன் பிறகு ரங்கசாமி மற்றும் நாராயணசாமி காலத்தில் கூட்டணி கட்சிகள் ஆளும் அரசை மிஞ்சியே செயல்பட்டன

சண்முகமில்லாத அரசுகள் மாறி மாறி ஆட்சியில் அமர்வது 1999 லேயே துவாங்கிவிட்டது என்றாலும் அதற்கான முழு விலையை அவர் 2001ல் கொடுத்தார் . அதன்பின் அவரது ஆளுமையின் வீழ்ச்சிகளைதான் பல புள்ளிகளில் அவரது இறுதி காலம்வரைஎதிர்கொண்டார் . நான் இதை அவரின் வயோதிகம் அல்லது அரசியல் பிறழ்வுகள் என்கிற இரு கருத்துகளின் மூலம் பார்க்க விழைகிறேன். முதலில் எனக்கு நினைவுக்கு வருவது அவரது பிறழ்வுகளே , வயோதிகத்தினால் அது சமாளிக்க முடியாத இடத்திற்கு சென்று சேர்ந்தது.

இம்முறை ராஜ்யசபை தேர்தல் நாழாயணசாமியின் முழுத்திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி மூத்த உறுப்பினர்கள் , தங்களை இருவருக்கும் இடையில் வைத்துக்கொளண்டார்கள் . பல வருட கட்டுப்பாடு , நிரபந்தம் என அனைத்தும் தளரத்துவங்கி இருந்ததுஅதிமுக வின் வாக்கு ராஜ்யசபை தேர்தலுக்கு மிக முக்கியமான , நாராயணசாமி , தலைவருக்கு  ஜெயலலிதாவிடமுள்ள அவரின் தனிப்பட்ட செல்வாக்கை பயண்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க . சண்முகம் மௌனமானார்..

மாநில அரசியலில் கட்சிகளின் செயலபாடுகள் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்
-அவை மிக நுண்ணியவை , மாநிலத் தேர்தலை மட்டுமே அது மையமாக கொண்டிருக்கும் , அவரவர்களுக்கு சில ஏற்புகளும் , ஏற்கவியலாமைகளும் உள்ளடங்கியதே அதன் விசை , அந்த காலகட்டத்தில் பாமக புதுவையில் தனி கவனம் செலுத்திய நேரம் , புதுவையில் தனித்து ஆட்சி அமைப்பது குறித்த கனவில் அவர்கள் இருந்தார்கள் , 30 சட்டமன்ற தொகுதி எனபது மிக சிறிய எண்ணிக்கையாக அவர்களுக்கு தோன்றி இருக்கலாம் , சிறிவைகளின் சிக்கல் தனித்துவமானவை என்பதை மிகத் தாமதமாக அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு விஷயம்

பாமக வின்  தலைவர் ராமதாஸ் அப்போது ஒவ்வொரு தொகுதியாக முறைவைத்து கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் . தமிழகத்தின் பலம் பெற்ற அமைப்பின் முதல் நிலைத் தலைவர் புதுவை அரசியலில் காட்டிய தீவிரம் அவர் புதுவை அரசியலை அறிந்திருக்கவில்லை என்றே குறிப்புணர்த்தியது. அவர் புதுவை போன்ற சிறிய மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியாக நுழைந்தது மாநில கட்சிகளின் சமன்பாட்டை குலைத்தார் . ஒவ்வொரு தொகுதிக்கும் தனி கவனம் கொடுத்தபோது பல உள்ளூர் சிக்கல் எழுந்து அதை அவர்கள் கையாண்ட முறை அனைவரின் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் பாமாக விற்கு எதிரான மனநிலை அனைத்து  மாநில அமைப்புகளுக்குள் வெளித் தெரியாத ஒரு உடன்பாட்டை உருவாக்கி இருந்ததுதனது வெற்றிக்கு நாராயணசாமி கலைக்க நினைத்தது இந்த  சமன்பாடுகளைதான்.

நாராயணசாமி பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்துகொள்ள முயன்ற அரசியல் சமன்பாடு என்னைப் போன்ற களப் பணியாளர்களின்  மனம் கசக்க செய்துவிட்டது , பாமக உடன் எங்களுக்கு எந்த தனிப்பட்ட விரோதமில்லாதபோதிலும் , அவர்களின் ஜாதீய மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நாங்கள்  வெறுத்தோம் . தனது வெற்றியை முன்னிறுத்த நாராயணசாமி முயன்ற அந்த சமன்பாடு புதுவையில் சண்முகம் இருக்க , ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இருப்பதையும் , கட்சியின் தலைமை அதில் கையறு நிலையில் தனித்து விடப்பட்டு விட்டது என்கிற புரிதல் அப்போது எங்களை போன்றவர்களுக்கு இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...