https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 426 *ஒருங்கிணைவு *

ஶ்ரீ:பதிவு : 426 / 591 / தேதி 30 டிசம்பர் 2018

*ஒருங்கிணைவு 


எழுச்சியின் விலை ” - 27
முரண்களின் தொகை -01 .
கூடுகை துவங்குவதற்கு முன்பாக இருந்த மனநிலையில் இருந்து  மெல்ல விலகி , அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து எதையெதை எனக்கென விரித்தெடுத்துக்கொள்ள முடியுமோ அதிலேயே எண்ணத்தை குவித்துப்பது என்கிற சிந்தனை மேலோங்கி எழுந்தது . தலைவரையும், நாராயணசாமியையும் கடந்து , எதிர்காலம் குறித்த திட்டமிடலை நோக்கி மெல்ல நான் நகர்ந்து கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருக்கும் இளைஞர்களில் 80 சதவீதம் நபர்கள் கட்சிக்கும்  அரசியலுக்கும்  முற்றும் புதியவர்கள். அக்காரணம் ஒன்றே என்னை இந்த கூடுகை பற்றிய எண்ணத்தைக் கொடுத்தது . அவர்களை ஒருங்கிணைக்கும் விழைவே இந்தக் கூடுகையின் நோக்கமாக இருந்தது . அதை தவிர்த்து மற்றைய விஷயங்களில் இருந்து மனதை விலகி அதை நோக்கி மட்டும் எனது சித்தத்தை  குவிக்கத்துவங்கினேன்

மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர்களை ஒன்றிணைக்க, அவர்களுடன் குடிமை சமூகத்தை தொடர்புறுத்தம்கூட்டுறவு இயக்கங்களைவடிவமைப்பது குறித்த அழுத்தமான எண்ணத்திலிருந்தேன். என் அரசியலின் கருதுகோள் அது , என மெல்ல உருக்கொண்டு எழுந்தது .எனது அரசியல் அதன் வழியாக அவற்றை மையப்படுத்துவதாகவும் , அதிலிருந்து எழும் ஒத்திசைவு இளைஞர் காங்கிரசின் அடித்தளமாக மாற்றம் பெற  திட்டமிடப்பட்டிருந்தது. பொருளியலையும் அரசியல் கருத்தியலையும் கடந்து , அவர்களை ஒன்றிணைக்கும் பிறிதொரு கருதுகோள் அது என உறுதியாக இப்போதும் நம்புகிறேன்.

கூட்டுறவு இயக்கங்களை வளர்த்தெடுப்பதின் வழியாக அனைத்திற்கும் மாற்றென , மாநில அரசியலில் வலுவாக எழுந்து நிற்க இயலும்,கூட்டுறவு சங்கம் அரசியலின் எனது கருதுகோளென எழுந்ததற்கு , வல்சராஜ் முக்கிய காரணம் . அரசியல் இலக்கென ஏதுமின்றி நினைவுகளை வேரெதலும் குவிக்காது , அதன் ஒழுக்கில் சென்று கொண்டிருந்தேன் . ஒரு கூட்டுப்புழுவைப் போல எனக்குள் ஒடுங்கி இருப்பது எனது வழமையாக இருந்தது . கனம் மிக்க மனத்துடன் எதனுடனும் ஒட்டாமலேயே அப்போது நான் இருந்து கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்கிறேன். பலமுறை எனது ஊக்கமின்மையை , அரசியல் திட்டமிடாமை பற்றி வல்சராஜ் என்னிடம் பேசிய போதும் அவற்றை எனது மௌனத்தால் கடந்து சென்று கொண்டிருந்தேன்  .

நான் முற்றும் எதிர்பார்க்காத சூழலில் மாநில இளைஞர் காங்கிரஸின் மூத்த பொது செயளாலராக நியமிக்கப்பட்ட போது , உற்சாக நிலைக்கு மீண்டு, அமைப்பை முறைப்படுத்த முயன்ற போது , அதனால் எழுந்த அரசியலின் விளையாட்டில் காயமுற்று, மீளவும் அதிலே ஈடுபட எண்ணமின்றி முழுவதுமாக அதிலிருந்து விலகினேன். அப்போது எனது பிறவி பேச்சு குறைபாட்டை வைத்து எள்ளல் செய்யப்பட்ட சமயத்தில் நான் இன்னும் ஆழமாக எனக்குள்ளே சென்றிருக்க வேண்டும் . ஆனால் அப்படி நிகழாததற்கு ஊழ் வேறு கராணங்களை எனக்கென வைத்திருந்தது

உட்கட்சி  ஒருங்கிணைப்பை தலைவர் என்னிடம் கொடுத்திருந்தார். அப்போது என்னைப் பற்றிய எள்ளலால் கயமடைந்திருந்தேன் . அந்த எள்ளலிருந்து கடந்து வெளிவர மாநிலம் முழுவதுமாக சிறு கூடுகை நிகழ்த்தி எனது பிறவிகுறையை மெல்ல வெல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன் . அதை நிகழத்திய போது , ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சூழல்கள் எனக்கு புதிய புரிதலை திறந்து கொடுத்தன.

சிறு கூடுகைகளை நிகழத்திய அந்தப் பகுதிகள் யாவும் நான் முன்னர் பயணித்தவைகளே. ஆனால் இளைஞர் கங்கிரஸில் இருந்த போது அதன் நிஜமான பக்கங்களை தொட என்னால்  இயலவில்லை. அங்கு செயலபட்டுக் கொண்டிருந்த மூத்த தலைவர்களை பற்றிய ஒற்றைப்படை எண்ணமும், எனக்கு கிடைத்த தவறான தரவுகளும் அதனால் எழுந்த முன் முடிவுகளும் அவர்களைப் பற்றிய பிறழவான எண்ணத்தை அன்றைய இளைஞர் அமைப்பின் தலைமை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. அந்த களத்தில் நாங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்கிற புரிதலை அதன் பிறகே நான் அடைய நேர்ந்தது. காரணம் அது தன் நிஜ முகத்தை இப்போது காட்டிக் கொடுத்து .

நான் சென்று சேர்ந்திருந்த சூழல் நான் எண்ணியிருந்ததில் இருந்து முற்றாக வேறுமாதிரி இருந்தது . அங்குள்ள அனைவருமே கைவிடப்பட்டவர்களாக, காயம் பட்டவர்களாக , உழைப்பிற்கான மரியாதை கிடைக்கப் பெறாதவர்களாக என ஒவ்வொருவரிடமும் ஒரு கதை , ஒரு மனக்குறை , கட்சி குறித்தும் , அதன் தலைவர் சண்முகத்தைக் குறித்தும் ஆழமாக இருந்தது. முன்னர் தாங்கள் அசைக்க முடியாதவர்களாக , தலைமையிடம் நெருக்கம் கொண்டவர்களாக , பலம் மிக்ககவர்களாக எங்களிடம்  காண்பித்துக் கொண்டது வெறும் நடிப்பு மட்டுமே. என்பது உணர்ந்த போது எனக்கது வியப்பாக, வருத்தமளிப்பதாக இருந்தது

அரசியலில் யாரும் திருப்தியுற்றவர்கள் இல்லை . அதற்கு பொறுப்புகளும் பதவிகளும் விலக்கல்ல . காரணம் அதற்கு பொறுப்பில் இருப்பதும் இல்லமலிருப்பதும் எவ்வகையிலும் உதவாது, அனைத்திலிருந்து அவர்களை எவரிடமிருந்தும் வேறுபடுத்திக்காட்டவில்லை என்பதுதான் வேடிக்கை. தலைவர் எனக்கு மிக நெருக்கமானவராக அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் , அதுவே அவர்களை என்னிடம் நெருக்கம் கொள்ள வைத்தது. மெல்ல தங்களின் குறைகளையும் அதிருப்திகளையும் தயக்கத்துடன் என்னிடம் சொல்லத் துவங்கினர் . பொருளியல் பலமுள்ள தேர்தல் அரசியலை மையமாக கொண்டவர்களைத் தவிற்த்து கட்சி அரசியலை பிரதானமாக கொண்ட அனைவரும் தங்களின்அரசியல் பாதுகாப்பின்மைஉணர்வை முன்வைத்தார்கள். என்னை முதலில் இது திடுக்கிடலை கொடுத்தாலும் , நான் ஆற்ற வேண்டிய களம் மெல்ல தெளிந்து வரத்துவங்கியது.

நான் தேர்தல் அரசியலை தங்களின், வழிமுறையாக எடுக்காதவர்கள், அல்லது எடுக்க இயலாதவர்கள் , கட்சி அரசியலில்  தவிற்க இயலாதவர்களாக உருப்பெறுவது எப்படி என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்தபோதுதான் , கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும் அதை ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனை எழுந்தது. தேர்தல் அரசியலாளர்களை கடந்து மேலெழுந்து வரும் திட்டம் மெல்ல உருவாகி வந்தது அப்போதுதான் . என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...