https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 3 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 424 * இணைப்பதின் முரண் *

ஶ்ரீ:



பதிவு : 424 / 589 / தேதி 03 டிசம்பர் 2018

* இணைப்பதின் முரண் 


எழுச்சியின் விலை ” - 25
முரண்களின் தொகை -01 .





ராஜ்ய சபை தேர்தல் வெற்றிக்காக அரசியல் சரிநிலை என்கிற ஒன்றால்  , பாமக வுடன் இணக்கமாக போக விழைந்த நாராயணசாமியின் போக்கு உட்கட்சியில் விமர்சிக்கப்பட்டது . அவரவர் தங்களின் பிற கட்சி தொடர்புகளுடன் உரையாடுகையில் அதிருப்தியில் உதட்டை பிதுக்கினார்கள். தனது வெற்றிக்கு நாராயணசாமி  பகிரங்க மன்னிப்புபோல ஒன்று இந்த  சமன்பாடுகளை குலைந்தது . அதன் பின் பாமாக வினால் மொக்கையான காரணம் ஒன்று சொல்லப்பட்டு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் அந்த நகர்வின் எதிர்வினையாக அதிமுக முற்றாக விலகி ,தங்கள் முடிவை தேர்தல் நடைபெறும் இறுதி நிமிடம் வரை  பூடகமாக்கினார்கள் .

புதுவையில் சண்முகம் இருக்க , ஒரு புதிய அத்தியாயம் எழுந்து இருப்பதையும் , கட்சியின் தலைமை அதில் தனித்து விடடப்பட்டு விட்டது என்கிற புரிதல் அப்போது எங்களை போன்றவர்களுக்கு இல்லை. இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிவதும் அதில் எதிர்காலம் எழுந்து வருவதாக கற்பனையுமான காலமாக அது இருந்தது என நினைக்கையில் இப்போது வேடிக்கையாக தெரிகிறது.

பயிற்சி முகாமின் முன்வரைவு பற்றிய விவாத கூடுகையில் அனைவரையும் அவரவர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு நான்  என் அனுக்கர்களில் சிலரை  மட்டும் என்னுடன் இருத்திக் கொண்டு அவரை வரவேற்கும் பொருட்டு வெளி வாயிலில் காத்திருந்தேன். சிறிது தாமதமாக வண்டி வந்து சேர்ந்தது . முறைமைகள் நிகழ என்னுடன் நின்றிருந்தவர்கள் நாராயணசாமியை கூடுகை நிகழ இருக்கும் அறைக்கு கொண்டு சென்றனர் . நான் மெல்ல தயங்கி பின்னடைந்தேன்.

கோபாலிடம்ஏன் இவ்வளவு தாமதம்என்றதும் , கடைசி நிமிடத்தில் அவரை சிலர் சந்திக்க வந்ததால் தாமதம் என்றான் . “கூடுகை பற்றி நாராயணசாமி ஏதாவது சொன்னாரா? என்றதற்குஏன் கூட்டத்தை ஹோட்டல்  சற்குருவின் நடத்திக்கிறீர்கள் , அங்கு என்ன கூட்டம் நிற்க முடியும், சிறு கூட்டம் வைத்து தனது செல்வாக்கை கட்ட நினைக்கிறாரா? என்கிற ஏளனம் தொனிக்க அவர் கேட்டதை என்னிடம் மிகவும் பதட்டத்துடன் சொன்னான்

அவனுக்கு நான் சென்று அவரை அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் தன்னை அனுப்பியது தவறாகப் பட்டது. தனது அதிருப்தியைத்தான்  அவர்  அப்படி சொன்னார் என்றான் . இன்று நிலவும் சூழலும் அடுத்தடுத்து நிகழ இருப்பதும் , அவரை அப்படி எண்ண வைத்திருக்கின்றன என்பதை அவனுக்கு விளக்க இயலாது. கூடுகை நிகழும் கூடத்திறகுள் நுழையும்வரை இது எனது மனதில் ஓடியபடி இருந்ததுகூடுகிற கூட்டத்தின்  எண்ணிக்கை ஒருவரின் செல்வாக்கையும்  , ஆளுமையையும்  முடிவு செய்பவை என எப்படி அர்த்தப் படுத்திக் கொண்டார்? என வியந்தேன் . அவர் மனதில் எனது ஸ்தானம் என்னவாக இருக்கிறது என்றும், பாண்டியனின் சொல் அவரை எப்படி வெளிப்படையாக பாதிக்கிறது என்பதையும் , அவரது முன் முடிவுகள் எங்கிருந்து கிளைகின்றன எனபது புரிந்ததும் சற்று வருத்தமாக இருந்தது

நான் நேரில் சென்று அழைத்து வராததால்தான் அவர் இப்படி சொன்னதாக கோபாலின் எண்ணத்தை என்னால் பிறிதெப்போதும் மாற்ற இயலவில்லை , அவர் சொன்ன முக்கிய மனநிலை இவன் சொல்லும் அந்த தளத்திலிருந்து எழாது . நான் அவனுக்கு புரியவைக்க முயலாமல். கூட்டத்தை நிகழ்த்த வேகமாக அந்த கூட்டத்திற்குள் நுழைந்தேன் . அந்த கூடுகையிலேயே கோபால் சொன்ன விஷயமும் அதை சார்ந்து எனது எண்ணத்தையும் பதிவு செய்தேன் . ஆனால் அது அரசியல் நுட்பமான முறைமைகள் உணர்வுகளால் ஆனதாக இருந்தது. அது அவருக்கு புரியும் என நினைத்தேன் . ஆனால் அவர் அதைக்கடந்து வேறு எங்கோ இருந்தார் .

இந்த ஒரு இடத்தில் நின்று நான் சண்முகம் நாராயணசாமி இருவரையும் அவர்களது செயல்பாடுகளின் வழியாக புரிந்து கொள்ள முயலும் அதே சமயம் எனக்கு வேறொரு கோணத்தில் இந்த சிக்கலை வைத்து பார்க்காமல் அவற்றை அவதானிப்பது இயலாது என நினைக்கிறேன் . அரசியலின் பாதை செயல்களால் மட்டும் ஆனவைகள் அல்ல , அதை கடந்த வேறொரு பரிமாணமும் அதற்கு இருக்கிறது . தலைமை தனது எண்ணத்தை தன்னை சுற்றி உள்ள அமைப்பிடம் உரையாடுகைலயில் , நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் பல விஷயங்களில் இருந்து எழுபவை . அவை புரிதல்களால் ஆனவை .

ஒரு விஷயத்தை நம் பார்வையும் , புரிதலும் ஆழ்மனப் பதிவுகளும் முயங்கி ஒரு செயலாக உருவெடுப்பவை . அதிலிருந்து செயல் வடிவம் பெருவது இன்னும் சிக்கலானது , மனம் புத்தி சிந்தனை என மூன்றாக பிரியும் ஒன்று செயல் வடிவம் பெறும்போது காலத்துடன் முயங்கியே தன் வடிவம் பெறுகிறது , அது நிகழும் வரை அதை செய்பவர்  அதை செய்தவராக எப்போதும் இருந்து விடுவதில்லை . காரணம் நாம் என்ன சொன்னோமோ அது நாம் சொன்னதல்ல அதை பிறர் எப்படி புரிந்துகொள்கிறாரோ அதுவே நாம் சொன்னது . மனிதன் இதை ஒப்புக்கொண்டாலும் இல்லாது போனாலும்  அது விண்ணகத்து தெய்வங்களின் விதி.

அந்தக் கூடுகை மூலம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விழைகிறேன் என்பது உண்மை ஆனால் அவர் புரிந்து கொண்டதல்ல நான் சொல்ல விழைந்தது . முதலில் தலைவரை வைத்து அதை நிகழ்த்தும் எண்ணமெழுந்த போது அதன் அடிப்படை தொகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க தலைவர் ஒரு தடையாக இருப்பார் என்கிற என் அச்சத்தை விலக்கிக் கொள்ள அதை ஒட்டிய கூடுகையாக அது ஒருங்கி இருக்கும் . ஆனால் நாராயணசாமியை வைத்து அதை நிகழ்த்த சொன்னபோது நான் அவருக்கு சொல்ல விழைந்தது பிறிதொன்று.

ஒரு பூரணமான அமைப்பு உருவாக்கி வருகிறது அதை கைலெடுங்கள் . அதை செய்பவருக்கு  அது கட்டுப்பட்டு இயங்கும் என்பதாக இருந்தது . அவரை பற்றிய எனது அவதானிப்பு மீண்டும்  பிறழ்ந்து , அவர் எப்போதும் அமைப்புகளின் மனிதரல்ல . இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் பிறிதொரு தளத்தில் இயங்குபவர் , அங்கு அவர் மட்டுமே நிற்க இடம் எஞ்சி இருப்பது என்கிற ஆழ்ப்புரிதலை எனக்கு கொடுத்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்