https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 425 *கால்பிடிப்பார் *

ஶ்ரீ:



பதிவு : 425 / 590 / தேதி 05 டிசம்பர் 2018


*பற்றுவதும் இழுப்பதும் 


எழுச்சியின் விலை ” - 26
முரண்களின் தொகை -01 .






கோபாலிடம் நாராயணசாமியின் அந்த நேரடியான சொல் என் மனதில் ஆழமாக இறங்கிய போதிலும் இரண்டு காரணங்களுக்காக அதை அவரது மனதிலிருந்து களையவோ மாற்றவோ நான் எந்த முயற்சியும் எடுக்க முற்படவில்லை . அரசியலின் பாலபாடம் ஒருவர் காலை ஒருவர் பற்றுவதும் இழுப்பதும், அதற்கு விளக்கம் சொல்லி மாளாது . இரண்டாவது எனக்கும் பாண்டியனுக்கும் ஸ்தான பேதமுண்டு என்பதை அவர் கருத்தில் கொள்ளாத போது நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது

சிந்தனை மேலதிகமாக மனம் கட்டுப்பாடில்லாமல் போவதற்கு முன்பாக இன்று நடக்க வேண்டிய கூட்டம் நினைத்தபடி நடக்க வேண்டும் என்கிற விஷயத்தில் முனைப்பு காட்டினேன் . நான் அந்த அமர்வை திட்டமிட்டபடி அவரவர் , அவரவர் ஸ்தானத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர் . அந்த கூடுகையில் விவாதிக்க வேண்டிய கருத்துக்களை கொண்ட முனவரைவுகள் கோப்புக்களாக அனைவருக்கும்  கொடுக்கப்பட்டிருந்தது . அவரவர்களுக்கு தேவையவற்றை கொடுக்க விடுதி ஆட்களை நியமிக்காமல், இளைஞர் தொகுதி அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்களை அங்கு நிறுத்தியிருந்தேன் . அவர்கள் கூடுகையில் அமர்வது முறைமை மீறலாக யாராவது கூப்பாடு எழுப்பும் சங்கடத்தை தவிர்க்க விரும்பிய அதே கணத்தில், அவர்களும் அந்தக் கூடுகையில்  ஏதாவதொரு வகையில் பங்கு பெறவேண்டும் என விரும்பினேன்

கூடுகையில் அமர்வதற்கு  அவர்களின் விழைவை நான் அறிந்திருந்தேன். இங்கு நிகழ்வது எப்படியும் வெளியில் பேசப்படும். அவற்றில் சொல்பவர் நோக்கம் , புரிதல் ஆகியவற்றை கடந்து சொல்லப்படாத , அல்லது சொல்ல இயலாதது குறியீட்டு செய்தி பலரின் மனதில் பலவாறு எழும் அதை அவர்கள் கண்ணுருவதே எனக்கு போதுமானது . நான் எனது அரசியல் களமென அவதானித்திருந்தது இவர்களையும் . நாளை அவர்கள் தலைமைக்கு வருகிறபோது எனக்கான தனித்த வழிமுறைகளை அவர்கள் கண்ட பிறகு திரும்பவும் முறைமையறியாத இடத்திற்கு  சொல்ல வேண்டிய தேவை எழாது . இன்று அவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஸ்தானம் இனி அவர்களின் அடிப்படை என்றாகிவிடும் , ஆகவே அங்கு ஒரே நேரத்தில் நான்கு தலைமுறை அல்லது நானகு தளத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக இருந்து கூடி இருந்தார்கள்

கூடுகை துவங்குவதை அறிவிக்கும் வழைமையானவந்தேமாதரம்பாடல் முழங்க துவங்கியதும் , நாராயணசாமி வியப்படைவதை பார்க்க முடிந்தது . அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலராக பதவி வகிக்கும் அவருக்கு பல மாநில பொறுப்பில் இதை பலமுறை பார்த்திருப்பார் ஆனால் தென்னிந்திய பகுதிகளில் அப்படி நடப்பதில்லை என்பதால் அந்த வியப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் . கூட்டத்தை துவக்க மேடைக்கு நான் வந்து நின்றபோது , என்னிடம் கூடுகையை துவக்கும் முன்பாக அந்த கூடுகைக்கு வந்திருப்பவர்களை பற்றிய தகவலை அறிய நினைப்பதை சொன்னார் . அமர்ந்திருந்த அனைவரிடமும் அவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை பற்றி அறிமுகம் செய்துகொள்ளாது கூட்டத்தை துவக்க விரும்பவில்லை எனபதை அறிந்து கொள்ள முடிந்தது. அது அவரின் ஆர்வமாக இருந்தாலும் சொன்ன முறையில் உள்ள அழுத்தம் அவரது மனநிலையை வெளிப்படுத்தியது.

கோபால் என்னிடம் சொன்ன அதே மனநிலையில் ஒருவித கசப்புடன் அவர் அந்த கூடுகைக்கு வந்திருப்பதையும், தலைவரின் வற்புறுத்தலும் பிறிதொரு முக்கிய காரணம் என உணர்ந்து கொள்ள முடிந்தது. எப்படி இருப்பினும் அவர் அதை துவக்கிய விதம் எனக்கு மிகவும் உகப்பாக இருந்தது , என் திட்டத்தில் இது இல்லாது போனாலும் இப்போது கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நானும் அதை மிக விஸ்தாரமாக பயன்படுத்திக்கொள்ள விழைந்தேன்

ஒவ்வொருவரையும் அவர்கள் பெயர் மற்றும் எந்த பகுதியில் இருந்து வந்திருக்கிறார்கள் என சொல்லி அமர்ந்தவுடன் நான் ஒலிபெருக்கியில் அவர்களிடம் , பெயர் , மட்டும் பகுதி மேலும் அவர்கள் எந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் , இதுவரை அவர்கள் தங்கள் பகுதிகளில் ஆற்றிய பணி பற்றிய குறிப்பையும் சேர்த்து  சொல்ல சொன்னேன் . அதன்படி ஒவ்வொருவரும் மிக விரிவாக தங்களை பற்றிய குறிப்புகளை அங்கு சொன்னார்கள் . அறிமுகம் நடந்து முடிய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. மாலை 5:00 மணிக்கு துவங்கிய கூடுகை 6:30 மணிக்கு மேலாகியதாலும் சிலரிடம்  அவர் தனிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்தியதாலும் கூட்டம் குறிப்பிட்ட நேரம் கடந்து ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது

புதுவை மாநிலத்தை அந்த கூட்டம் முழுமையாக பிரதிநித்துவம் செய்திருப்பதை உறுதி செய்திகொண்ட அவரது முகத்தில் தெரிந்த நிறைவு எனக்கும் மகிழ்வளிப்பதாக இருந்தது . நான் இருக்கையில் இருந்தவர்களை தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு கூட்டம் ஆரம்பிக்கலாம் என்று சொன்னவுடன் ,நான் அதை அந்தளவில் நிறுத்தாமல் . அமர்ந்திருந்த அனைவரின்  பின்னல் அவர்களது உதவிக்கு நின்றிருந்த முப்பது பெயர்களையும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொன்னதும் , நாராயணசாமி மேலும் திகைப்பது புரிந்தது . அவர்களும்  தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும் கூட்டம் துவங்கியது . நாராயணசாமி மிக மன ஒருமைப்பாட்டுடன் அது துவங்கியது முதல் தனது முழு பங்களிப்பை கொடுத்தது நிறைவாக இருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்