https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 201 * சிந்தனை விளையாட்டு *

ஶ்ரீ:





பதிவு : 201 / 280 /  தேதி :- 01 அக்டோபர்   2017



* சிந்தனை விளையாட்டு  *



தனியாளுமைகள் - 27 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-07




எங்களுக்கு கொடுக்கவேண்டிய கடவு சீட்டுக்கள் முழுவதும் கிருஷ்ணமூர்த்தி கோஷ்டிவாசம் ஒப்படைக்கப்பட்டகாக பாண்டே வல்சராஜிடம் சொன்னவுடன் . நான் தலைமை நியமிக்கப்பட்டபோது அனாமதேயங்களுக்கு எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்றேன் , நாங்கள்  அவற்றை மத்திய தலைமையிடம் முறையிட்டு பெற்றுக்கொள்கிறோம் என எழுந்துகொண்டவுடன் மறுபேச்சில்லாது எங்களுக்கான மாற்று கடவு சீட்டுகள் கொடுக்கப்பட்டன . அந்த இரண்டுநாள் மாநாடு முழுவது இந்தியில் பேசினார்கள் . ஒன்றும் புரியாது இருந்தது . ஒருவழியாக முடித்து அங்கிருந்து புறப்பட்டோம் . மேலும் ஒருநாள் அங்கு தங்கி . நிர்வாகிகள் நியமனம்பற்றி பேசி பின் புதுவைக்கு புறப்பட்டோம்.









நீண்ட வரலாற்றுப் பக்கங்கள் வழியாக ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது அத்தனை எளிய விஷயமல்ல. அதை சொல்லிப் புரியவைப்பது கடினம். விளைவுகளைக் குறித்த புரிதலுடன் பொறுப்புடன் சொல்வது இன்னமும் கடினம். ஆனால் அரசியல் பின்னியுள்ள இந்த வரலாற்றை நான் என்னை அவதானிக்கும் பொருட்டு எழுதி தொகுத்துக் கொண்டிருக்கிறேன் , அதனூடாக என்னுடைய புரிதலில் கிடைத்த திறப்புகளின் வழியாக நான் ஆற்றிய விஷயங்களை நினைவு படுத்தும் அந்த நிகழ்வுகளை இன்னும் நெருக்கமாக அணுகி ஆராய முற்படுகிறேன். 

இலக்கிய வாசிப்பினால் இன்று கிடைக்கின்ற நுட்பமான புரிதல் அனுபவத்தை அக்கால நிகழ்வுகளின் மீது போட்டுப் பார்க்கையில்  , மனநிலைகளில்  இரண்டும் ஒத்திருக்கும் உணர்வுகளை அடைகிறேன். எந்த அனுபவ அறிவும் இல்லாத இளம் சூழலில் , சுபாவம் என்கிற ஒன்றை எங்கிருந்து அடைந்தேனோ அங்கிருந்தே இவை அனைத்தையும் நான் அடைந்திருக்க வேண்டும் . திரு. ஜெயமோகன் சொல்லுவதைப்போல . சிந்தனையில் ஒரு தொடர்ச்சி உள்ளது என்பது , எவ்வளவு நுண்மையான அவதானிப்பு என உணர்கிறேன்.

புதுவைக்கு திரும்ப வரும்போது வல்சராஜை என்னால் மேலும் மிக அணுக்கமாக நெருங்கி அறிந்துகொள்ள முடிந்தது , மாநில அரசியலில் தனக்கான இடத்தை தண்டி வெகு தூரம் அவர் வந்துவிட்டிருந்தார் . அவர் பயணித்த பாதையில் அமைச்சர் பதவி கூட அவர் கடந்துவிட்ட ஊர்களில் ஒன்று . தனது அரசியல் ஸ்திர தன்மையை நோக்கியே அவரது பயணம் இருந்தது. அரசியல் அறிதல் நிலையைத் தாண்டி நுண்மையான செயல் தொழில்முறை நுட்பங்களை அடைந்திருந்தார் . அது நுண்மை புரிதல் . ஒரே இலக்கிலோ அல்லது ஒரே செயலையோ பலமுறை செய்தினால் கைவருவது அது . அதன் எந்த நிகழ்வில் எந்த செயல்முறை நுட்பத்தில் எது சரியான இலக்கை தொட்டதோ , அதுவே அதை ஒத்த நிகழ்வுகளில் பயனபடத்த வல்லது. அதில் சிறந்ததிலிருந்து அடைந்ததை எப்போதும் செய்வது , நம்மை வேறொரு நுண்மை தளத்திற்கு அழைத்துச் செல்வது.

அந்த செயல்முறை அடிப்படையில் தவறுகளுக்கு வாய்ப்பே இல்லாததால் . அது அதை ஆற்றுபவரின் காலை சுற்றி முடங்கிக்கிடக்கும் .ஆனால் ஊழின் ஒரு தருணத்தில் , ஒரு சேர்க்கையின் பிழையில் , இமைப்பொழுதில் அனைத்தையும் அது தலைக்கீழ் என மாற்றி அமைத்துவிடும் . மாநில அரசியலிலோ , அரசிலோ அவருக்கு சொந்த கட்சியில் மட்டுமன்றி அனைத்துக்கட்சியிலும் ஆட்கள் இருந்தார்கள் . அதனால் அவர் அனைத்திலும் கரந்து நிறைந்திருந்தார் . அப்படிப்பட்ட அளுமைக்கு அன்றாட செயல் திட்டமென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை . இன்று முடியாது நாளை சூழலில் அதை முடிக்கலாம் என்கிற நிலையில் இருக்கிற சராசரியான ஒருவருக்கு வேண்டுமானால்  திட்டமென ஒன்று மனதில் ஓடியபடி இருக்கும் . தனக்கான நிறைவான அடையாளமுடையவர்கள் தங்களின் விழுமியத்தால் அவற்றை அணிசெய்து வெளிப்படுத்த முடியும் . அவர் என்றோ தன்னிறைவை அடைந்துவிட்டதால் ஒரு மிதப்பு எப்போதும் அவரது நிழலைபோல பணிந்து பின்னல் வந்துகொண்டு இருக்கும் . 

இலக்குகளை கொண்டு வளருதல் எனபதை அடிப்படையாக கொண்ட என் போன்று ஒருவனுக்கு வல்சராஜ் போன்ற ஒரு ஆளுமை பெரும் வாய்ப்பை கொண்டு தருவது  . ஆனால் அதில் வினோதம் ,நான் விரும்பும் அரசியல் விழுமியங்களுக்கு அங்கிருந்து பாதைகளில்லை . அவைகளுக்கு அங்கு பெரிய அர்த்தமிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. அதனால் . அவருடனான உறவு ,அவர் என்னை எங்கு நிறுத்துகிறாரோ அங்கேயே நின்றுவிடுவது மட்டுமே . மேலதிகமாக எதையாவது ஆற்றுவதென்பது எனக்கான களம் எழுந்து வந்த பிறகே . நாங்கள் புதுவை வந்து சேர்ந்தோம் . புது நிர்வாக கமிட்டி வெகு விரைவில் நியமிக்கப்படவிருக்கும் செய்தி அனைத்து பிரிவினரையும் ஒருங்கு திரண்டு வல்சராஜிடம் குவிய வைத்திருந்தது.

பல வேடிக்கை வினோதங்களை பார்த்தபடி அவருடன் அமர்ந்திருப்பது எனக்கு வழமையானது .நான் இதுவரையில் பார்த்திராத பலர் , பாலன் தலைமையில் தாங்கள்தான் அதை வழி நடத்தி சென்றதாகவும் . தங்களுக்கு அதே அதிகாரமும் , அங்கீகாரமும் வழங்கபடவேண்டும் என்பதை , வருத்தமாக, கோபமாக , எச்சரிக்கையாக  பல குரலில் சொல்லியபடி இருந்தார்கள் . நான் அருகமர்ந்திருக்க என்னை வாயக்குவந்தபடி திட்டித்தீர்த்து , அவர் எனக்கு செய்த உதவிகளை நான் நன்றி மறந்து போனேன் என்றார்.நான் அன்றுதான் அவரை முதல்முறையாக பார்க்கிறேன் . வல்சராஜ் கிறுவி , அவரிடம் என்னை காட்டி இவரைத் தெரியுமா என்றார் . அவர் பார்த்திருக்கிறேன் பெயர் நினைவிலில்லை என்றார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி வெடிச்சிரிப்புடன்  அரசியல் யதார்த்த நிலையை பகிர்ந்து கொண்டோம் . வந்திருந்தவருக்கு நாங்கள் ஏன் சிரிக்கின்றோம் என்பது புரியாமல் திகைத்திருந்தார்.

வல்சராஜுக்கு உள்ளூர் அரசியலில் பங்கென ஏதுமில்லாத நிலையில் அவர் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரென இருந்தார் . அவருக்கு எவரிடமும் விருப்பு வெறுப்பில்லதே ஒரு காரணம் . அவர் யாருடைய தொகுதி அரசியலிலிலும் தலையிட விரும்பாத நிலையில் , உள்ளூரில் யாருக்கும் போட்டியாகும்  வாய்ப்பில்லாத  ,விருப்பமில்லாத அல்லது அவசியமில்லாத காரணத்தினால் அவர் உள்ளூர் கட்சி அரசியல் சர்ச்சைகளுக்கு வெளியே எப்போதும் இருந்தார் . 

கட்சி அரசியலென்பது என்பது இதற்கு நேர் எதிர்மறையானது . அதன் துவக்கமே பிறிதொருவரின் மீதுள்ள வெறுப்பு அல்லது காழ்ப்பில் துவங்குவது . அதை எதிர்கொள்ளும் அமைப்பாக அதை விருப்பு வெறுப்பு கொண்ட இரட்டை விளிம்புகளில் நிற்கும் திரளாக அவர்களை  பேணுவது இன்றியமையாதது . ஆகவே வெறுப்பில் துவங்கும் இது ,அந்த ஒத்த கருத்துடைய குறுங்குழுவால் இயக்கப்படுவது . பின்னர் கோஷ்டிகளாக அவை கிளைப்பதை தவிற இயலாது. அதன் உயிர் மூச்சே அந்த ஒற்றைபடை எண்ணங்கொண்ட  குறுங்குழுவை போராட்டகளச் செயல்பாடுடையதாக வளர்த்தெடுப்பதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்