https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 219 * குருட்டு நம்பிக்கையின் பயணம் *

ஶ்ரீ:




பதிவு : 219 / 299 / தேதி :- 20 அக்டோபர்    2017

* குருட்டு நம்பிக்கையின் பயணம்  *


வாய்ப்புகளில் புரியாமை - 05”
கருதுகோளின் கோட்டோவியம் -01.



காட்டையே உண்ணனும் திறனுள்ள யானையால் மலரின் தேனை அறிந்து  நுகர முடியாது என சொல்வதுண்டுஇயற்கையின் பிரம்மாண்டங்களின் நுட்பங்களை  பற்றிய பிழைப்புரிதலிதுகால்களை பரப்பி செவி அசைக்காது மிக நுட்பமாக தொட்ச்சிணுங்கியின் பூவை மட்டும் மிக லாவகமாக பறித்து  தன் கடைவாயில் வைத்து ரசித்து உண்ணுவதைப் பற்றி தன் கட்டுரையில் திரு.ஜெயமோகன் சொன்னதை நினைவுறுகிறேன் .




பிரம்மாண்டங்கள் நாமறியாத  நுட்பங்களால் நிலைகொள்கின்றன என்னும் கருதுகோளை கொண்டது கட்சி அமைப்பும் அதன் தொடர்புறுத்தலும் என நினைக்கிறேன் . அதன் பிரம்மாண்டம் என்பது  திரள்களின் தொகைகளிலானதுநுட்பம் அதனுடனான உள்ளும் புறமுமான தொடர்பில் நிற்பது . பெரும் திரளை தனது பொருளியல் பலத்தால் திரட்டும் அமைப்புகள் அவர்களினூடான தொடர்பை இன்றைய அதிநவீன ஊடகங்கள் மூலமாக அதை சத்திய படுத்தி இருக்கின்றன . ஆனால் அவை நுட்பமானவைகளல்ல . அது இவை இரண்டிற்கும் மத்தியில் மனித மனங்களால் மட்டுமே தொடர்புறுத்த இயலுவது.

காந்தி முயன்று பெரும் வெற்றியை பெற்றது இந்தமுறையில்தான் . திரளை நோக்கிய அவரின் மிக நுட்பமான தொடுகைகளுக்கு அவரே தன்னை ஒரு குறியீடாக வெளிப்படுத்திக் கொண்டது  ஒரு முக்கிய காரணி. அதை வெற்றிகரமாக  குடிமை சமூகத்திடம் கொண்டு சேர்த்து அவரது திட்டமிட்ட அமைப்பு. அதைத்தான் இன்று எவராலும் செய்ய இயலுவதில்லை . புதுவை போன்ற சிறு யூனியன் பிரதேசத்தில் அதை போன்ற ஒன்றை முயற்சித்து பார்ப்பது எளிது என்பதில்  நான் உறுதியாக இருந்தேன் . காரணம் அதன் சிறு நில பிரதேச எல்லைகள் , பயண காலம்,தனித்த ஆட்சிமுறை , அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை அனுகும் வாயப்பு போன்றவை .

எப்படி இவை மிக எளிமையோ ,அதே அளவு இதன் அடிப்படைகளினாலேயே அவை மிக நுட்பமான சிடுக்குகள் நிறைந்தவை. அதனாலேயே இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை. எல்லோருக்கும் எல்லோரையும் அனுகுவதில் உள்ள எளிமையே ,அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ஆணவமிக்கவர்களாக்குவது. அவர்களுக்கு ஒரு புது முயற்சியை ஊக்கமுடன் தொடங்குவதற்கு பதிலாக அதை தடுக்கும் சிறிய தடைகளை கண்டடைவது எடுத்துச் சொல்லி தடுப்பது மிக எளிதாகிறது.

அந்தக் களத்தில் நிலவிய வெற்றிடத்தினாலேயும். அதை சிறிய அளவில் பாலன் தலைமையின் கீழே முன்னமே முயற்சித்துப் பார்த்தனாலேயும் அதன்மீதிருந்த இயற்கையாகவே ஒரு ஈர்பிருந்ததை நான் அறிந்திருந்தேன் என நினைக்கறேன். அதுவே நான் மாநிலத் தலமையை கீழ் இயங்கும் வாய்ப்பு கிடைத்ததும் கட்சி அரசியலை எனது பாதையாக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் .

தேர்தலரசியலை நான் என்றுமே எனது பாதையாக இந்த நிமிடம் வரையிலும் எண்ணியதில்லை . அது எனக்கான வழியாகவும் என்றும் இருந்ததில்லை . கட்சி அரசியலை எனது தேர்வாக எப்போதும் முன்வைப்பேன் . எனக்கான அதிகாரத்தை அங்கிருந்து பெறுவதை பற்றியே எப்போதும் சிந்தித்திருக்கிறேன் . குடிமை சமூகத்தை நோக்கிய எனது பயணம் எப்போதும் பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கிறது

பிறிதொரு வழியான ஓட்டரசியல் ,பொருளாதாரத்தை முன்னிறுத்துவது . பெரும் பொருளியல் அவற்றுடன் சம்பந்தப்படுவதினாலே அது ஒரு முதலீடென்றாகிறது . அதிலிருந்து தனக்கான லாபத்தை எதிர்நோக்கியது  . அதில் நுழைந்த பின் அங்கிருந்து எப்போதும் நிஜமான குடிமை சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு வரவே முடியாது

சிறந்த தலைமைப்பண்பை கொண்ட தலைவர்கள் உருவாகி வருவது இங்கிருந்துதான் . அணைத்து அரசும் இந்த குடிமைச்சமூகத்தின் அனுமதி பெற்றுத்தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது . தேர்தலரசியலால் தொகுதி அளவில் நின்று விடும் மக்கள் பிரதிநிதி தன்னெல்லைக்குள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு அது தாங்கள் அனைத்து மக்களின் பிரநிதி என்கிற ஆணவத்தை தோற்றுவித்து விடுவதால் , அசலான மையத்திலிருந்து அவர்களால் செயல்பட இயலுவதில்லை.

பெரும்பான்மையின் அடிப்படையை மையக்களமாக கொண்ட அரசியல் அமைப்பின்பல்வேறு குடிமை சமூகளுக்கான நலத் திட்டங்களை வைத்தது இயல்பிலேயே  அரசின்மை வாதம் அடிப்படையாக கொண்டுதான் .அதன் வழியாக அரசாங்கத்தின் செயல்படு நடைமுறை அனைவருக்கும் பொதுவில் வைக்கப்பட்டிருப்பது . காலசூழலை ஒட்டி அது சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டியது மட்டுமே . ஒரு கட்டத்தில் அது திரிபுற்று அவர்கள் மட்டுமே அதை முண்மொழியும்  மரபாக மாறிவிட்டது . இத்தகயக்காரணத்திற்காகவே நகராட்சி தேர்தல்கள் புதுவையில் நடைபெறாது அனைத்துக் கட்சிகளாலும்  பார்த்துக்கொள்ளப்பட்டது . நான் முதன்முதலாக நகராட்சிக்கு வாக்களித்தது ,எனது நாற்பதாவது வயதிற்கு மேல்தான் .

கட்சி அரசியலுக்கு முதன்மை எதிர்ப்பு , இத்தகைய மக்கள் பிரதிநிதிகளிடம் தான் எழுந்து வருகிறது. தேர்தலாரசியலை கணிசித்து தலைமையும்  இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது . சண்முகம் காலத்திலும் இது இப்படித்தான் இருந்தது ஆனால் அதன் சதவிகிதம் தற்போது உள்ளதை போன்றதல்ல. முயற்சித்தால் அதன் தலையீட்டை குறைக்க முடிவதற்கான வாய்ப்பு இருந்தது , என்பதே அப்போதைய சூழல் . அது ஒருவித குருட்டு நம்பிக்கையாக தோன்றினாலும். அது கொடுத்த ஆரம்ப கால வெற்றிகளே என் வழியெங்கும் எதிரிகளையே உருவாக்கி வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...