https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வெண்முரசு/ எழுத்தழல்/ காற்றின் சுடர் 3

ஶ்ரீ:


பதிவு : 306 தேதி / 27-10-2017




வெண்முரசு/ எழுத்தழல்/  காற்றின் சுடர் 3





அவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் 
கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி 
சொல்லெடுப்பவர்போலமெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் 
பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல
முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே 
எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் 
அளித்ததில்லைஎன்றார்.
அற்புதம் . வர இருக்கும் கலியுகத்தை நோக்கி சொல்கிறாரா?. ஆழ்வார்களின் பெண்ணான 
தன்மையை ஏறிட்டுக்கொள்வதை....கோபியர்களை ....சரணாகதி தத்துவத்தை...கீதை என ........
இங்கேயே தொடங்கியாகி விட்டதா .....?

இளைய யாதவர்ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே
பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் 
வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம்
மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்என்றார்.
அற்புதமான சொல்லாட்சி , இரண்டு நிலைகளை பேசுகிறார் .
நடப்பது நடக்கட்டும் என்கிற மனநிலையை அடைத்து வீசும் 
காற்றில் அதன் ஒழுக்கோடு கவலையற்று பறத்தல் . மலையின் 
அசலம் போல இருக்கும் நிலையில் கவலையற்று வருவது 
வரட்டும் என இருத்தல் .

அபிமன்யூமாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் 
நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் 
அதில் உள்ளனரா?” என்றான். இளைய யாதவர் நகைத்து 
இல்லை, அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை
இணைவதற்கு முன்பேகூட பிரிவின்றி இருந்தவர்கள்என்றார்.
சக்திமானை விட்டு சக்தி பிறியாத தன்மையான அநபாயினி 
தத்துவம் பேசுகிறாரார் . எல்லாம் போகிற போக்கில்.....


இளைய யாதவர்மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் 
கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை
||| நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை
உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து 
நீ தப்ப இயலாது” ||| என்றார். அபிமன்யூ எழுந்து அவர் 
கால்களில் தன் தலையை வைத்துஆம்என்றான்
அவன் தலைமேல் கைவைத்துநிறைக!” என்றார் 
இளைய யாதவர்.

வெண்முரசு சில கணங்களில் தனது விதைகளை 
விதைத்தபடி சென்று கொண்டிருக்கிறது 
( திரு. துரைவேல் அவர்கள் இதை கண்ணிவெடி என்பார் )  
இதன் கிளை எங்கு விரிந்து  பூவென்று பழமென்று காத்திருக்கும் 
என அறியும் ஆவலில் இந்தப் பதிவுகளை சிறியதாக  என் 
நியாபகத்திற்கு இட்டிருகிறேன் . அவை பிரமாண்டமான 
திறப்புகளை கொடுக்க வல்லது என நினைக்கிறேன். அதை 
எப்படி வடிக்கிறார் எனஅறியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி....


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்