ஶ்ரீ:
பதிவு : 216 / 296 / தேதி :- 17 அக்டோபர் 2017
* செயற்கை குடிமைச்சமூம் *
“வாய்ப்புகளில் புரியாமை - 03 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.
“என்னுடைய அரசியலென்பது என்னை மீட்டெடுக்கும் அரசியல். எந்த மொழியுணர்ச்சியால், வரலாற்றுணர்ச்சியால், மனிதமனங்களை அறியும் உணர்ச்சியால் நான் அடைந்ததை பதிவாக்கங்களாக எழுதுகிறேனோ அதே நுண்ணுணர்ச்சிகளால் என்னை சூழ்ந்துள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும் எதிர்வினையாற்றவும் விவாதிக்கவும் முடியுமா என்று பார்க்கிறேன். ஆகவே அவ்வப்போதுள்ள உணர்ச்சிகள் சார்ந்து இவை வெளிப்பாடு கொள்கின்றன. அவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். தெளிவின்மையும் இருக்கலாம். எழுத்தாளனிடம் தருக்கத்தை ரொம்பவும் எதிர்பார்க்கக் கூடாது. உலகம் முழுக்க எழுத்தாளர்கள் அரசியலில் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். தங்கள் அகத்தை எவை பாதிக்கின்றனவோ அவற்றுக்கு மட்டும். இவையும் அத்தகையவை மட்டுமே. என்னுடைய ஆதர்ச முன்னோடிகள் ஓ.வி.விஜயன், ஆனந்த் போன்ற மலையாள எழுத்தாளர்கள், படைப்பிலக்கியத்தையும் அரசியலையும் சேர்த்தே எழுதியவர்கள்” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரைக் குறிப்பொன்றில்.
கள அரசியலில் நுண்ணுர்விற்கே முன்னுரிமை, அதை சரியாக பேணுவதற்கான முறைமைகள் ,மனதை மென்மையாக வைத்திருப்பது , எனது பூஜையில் செலவிடும் நேரம் அதை எனக்கு அருளுவதாக எண்ணுகிறேன். பூஜை முறைமைகள் எந்த வேண்டுதலையும் அங்கமாக கொண்டிருப்பதில்லை . மனம் ஒரு மூலையில் தன்விருப்பப்படி சஞ்சரிப்பதை அடக்குவது முறை என பலமுறை முயன்றிருக்கிறேன். அது அடக்கும் தோறும் வெகுண்டு எழுவது . அதன் ஒழுங்கில் அதை போகவிட்டு அதையும் என்னையும் வேறாக நினைத்தபடி எனது பூஜைகளை செய்துகொண்டிருப்பேன் , தாய் ,மனைவி , மகனென அனைவரும் ஒரு வீட்டில் வசிப்பவர்கள் என்றாலும் எல்லா நேரத்திலும் ஒத்தக்கருத்தேனா ஒன்றை பற்றி நிற்பதில்லை அதனால் அனைத்துடனும் முரண்பாடு கொள்வதில்லை . அதுபோல எண்ணம் மனம் புத்தி இவைகளை ஒரே நேர் கோட்டில் பேணுவதை விட அதன் பெரும்பான்மை என்ன விழைகிறதோ அதுவே நானாக மெய்ப்பொருள் முன்பாக நிற்கிறேன் .
புரிதலுக்கு முன்னர் நிகழும் நுண்ணுணர்வென்பது நாம் இயங்கும் தளத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது . அதனுடன் என்னையும் அறியாது நான் உரையாடுகிறபோது தலைவர் சொன்ன பலவிஷயங்களை புரிந்து கொள்ள இயல்வதுடன் மட்டுமின்றி அதை ஜீரணிப்பதன் வழியாக கடந்தும் சென்றிருக்கிறேன் . மாணவ தேர்தல் நடைபெற்ற போது அதன் இடைவெளிக் காலங்களில் ,பலமுறை பலவித பிரச்சனைகளில் சிக்கி நானும் ரஹமானும் வெளிவந்தபோது, என் அனுகுமுறையையும் , கையாளுகையையும் பார்த்து, எனக்கும் தலைவருக்குமாக உள்கணக்கென ஒன்றுள்ளதாக பிழை புரிதலை அடைந்திருந்தான் , அவரால் எனக்கு சொல்பட்ட அவனுக்கு தெரிவிக்கபடாத அல்லது வெளித்தெரியாத ஒரு திட்டத்தில் நான் செயல்படுவதாக சந்தேகித்தான் . அதை தலைவர் ஏன் தன்னிடம் சொல்லவில்லை, என்கிற அனாவசிய வம்பிற்கு என்னிடம் வந்தபோது, இவை அனைத்தும் இங்கு இப்போதென முடிவு செய்யது நிறைவேற்றப்பட்டது என நான் சொன்ன எதையும் அவன் நம்புவதாக இல்லை .
நாங்கள் எதிர் கொண்ட ஒவ்வொரு சிக்கலிலும் அதன் அந்திம தருணம்வரை அவஐ நிகழ்வதை தடுக்கும் சக்தியில்லாது போனாலும் , அனுமானத்தின் அடிப்படையில் அவர்களின் திட்டங்களை எதிர்கொண்டு அனைத்து மாற்று முடிவுகளும் அந்த நிமிடத்தில் தோன்றி முயற்சித்தவைகள். தற்செயலாக அவற்றிற்கு நல்ல பலன் விளைந்தது . சங்கடங்களை நான் எதிர் கொண்டது ரஹமானிடமிருந்து தான். கண்ணுக்கு தெரியாத ஒன்று , நாங்கள் நினைத்ததை நடத்திக் கொடுத்தபடி இருந்தது. அது ஏன்? அப்படி சாதகமாக நிகழ்ந்தது என என்னால் அவனுக்கு தருக்க ரீதியாக எவ்வளவு சொல்லியும் புரியவைக்க முடியவில்லை . என்னிடம் பேசியதோடு நிறுத்துக் கொள்ளாது , இதை குறித்து தலைவரிடம் பலமுறை பேசியது , அவனுக்கு பெரிய பின்னடைவை தந்தது .அவன் கடைசிவரை உணரவில்லை . ஆனால் இவனது பல கேள்விகளின் வழியாக தலைவருக்கு என்னைப்பற்றிய ,நானே அறியாத பிறிதொரு பரிமாணம் அவருக்கு தனது நீண்ட அனுபவத்தின் காரணமாக புரிந்திருக்கலாம் . அது எனக்கு வெளிப்படும் சந்தர்ப்பம் ஒருமுறை வாய்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக